கடவுள் வணக்கம் - அல்லல்போம்




கடவுள் வணக்கம்.


அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த

தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல

குணம் அதிகம் ஆம், அருணைக் கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.


அருணாசலம் என்னும் திருவண்ணாமலைத் திருத்தலத்திலே அமைந்துள்ள திருக்கோயிலின் கோபுரத்து அடியிலே எழுந்தருளி இருக்கின்ற விநாயகப் பெருமானைக் கை தொழுது வணங்கினால், பல துன்பங்களும் நீங்கும். வலிமை உடைய வினைகள் ஒழியும். வினைகள் ஓழியவே, அன்னை வயிற்றில் பிறப்பதற்குக் காரணமாகிய துன்பங்கள் இல்லாது போய்விடும். எடுத்துள்ள இந்தப் பிறப்பிலே, முன் செய்த வினைகளால் நீங்காது வந்து சேர்ந்த துன்பங்களும் இல்லாது போய் விடும். நல்ல குணங்கள் வந்து பொருந்தும்.  

1 comment:

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...