41. நல்லார் அயல் மாதரை நினையார்

 “கன்னியரை, பொன்நாண் கழிந்தோரை, மற்ற அயலார்

பன்னியரை, மாயப் பரத்தையரை, - முன்ன அரிய

தாதியரை, நல்லோர் தழுவ நினையார், நரகத்

தீதுவரும் என்றே தெரிந்து.” -- நீதிவெண்பா.


அறிவுடைய பெரியோர்கள் மணமாகாத கன்னிப் பெண்களையும், பொன்னால் ஆன தாலியை இழந்த விதவைப் பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை பொருந்திய பொதுமகளிரையும், விரும்பக் கூடாத வேலைக்காரிகளையும் சேர்தலால் நரகத் துன்பமே வரும் என உணர்ந்து, அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்.


(நாண் - தாலி. பன்னியர் - மனைவியர். மாயம் - வஞ்சனை.  தாதியர் - பணிப் பெண்கள்.)


No comments:

பாடல் 13

"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும் பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள் ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை மாகாளம் கைதொழு...