“காண்தகு மென்தோள் கணிகை வாயின் சொல்லும்,
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும், - மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும், இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.” -- திரிகடுகம்.
காணுதற்கு மெல்லிய தோள்களையுடைய வேசையின் வாயில் பிறக்கின்ற இனிய மொழியும்; தூண்டிலில் மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து வைக்கப்பட்ட தவளையும்; வயிரம் பற்றிய, பகைவர்களுடைய அன்பான வணக்கமும் ஆகிய இம் மூனுறும் உயிர்களைத் தன்னுள்ளே அழுந்தப் பண்ணுகின்ற சேறு (நரகம்) போல்வது ஆகும்.
வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போல் இருந்து உள்ளே வஞ்சகத்தைக் கொண்டு இருத்தலால் அவை நலம் தருவன அல்ல. அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப் போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும்.
No comments:
Post a Comment