“மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு
வினைவேறு பட்டவர்பால் மேவும், - அனமே!
மனம்ஒன்று சொல்ஒன்று வான்பொருளும் ஒன்றே
கனம்ஒன்று மேலவர்தம் கண்.” -- நீதிவெண்பா.
அன்னம் போன்றவளே! ஒழுங்கற்ற செயலைச் செய்யும் கீழோரிடத்தில் மனமும் சொல்லும் செய்யும் செயலும் ஒன்றுபட்டு இராது. எண்ணம், சொல், செயல் ஆகியவை வேறு வேறாக இருக்கும். ஆனால், பெருமை பொருந்திய பெரியோரிடத்தில் மனமும் சொல்லும் உயர்ந்த செயலும் ஒன்றாகவே இருக்கும்.
(மேவும் - பொருந்தியிருக்கும். கனம் - பெருமை.)
No comments:
Post a Comment