குக்கலைப்
பிடித்து, நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து,
மிக்கதோர்
மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்,
அக்குலம்
வேறதாமோ? அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே
குக்கல் அல்லால், குலந்தனில் பெரியதாமோ?
நாயைப் பிடித்து, புனுகு பூனை வசிக்கும் கூட்டில், வெளியில் விடாமல்
அடைத்து வைத்து,
மேன்மை
பொருந்தியதும்,
ஒப்பற்றதுமான
மஞ்சளை அரைத்துப் பூசி, நறுமணத்தை உண்டாக்கினாலும், அந்த நாயானது புனுகு
பூனை ஆகாது. அதனிடம் இருந்து பூனையிடத்தில் உண்டாகும் புனுகு உண்டாகாது. என்ன செய்தாலும்
நாய் நாய் தான். அது உயர்வு உடையதாக ஆகாது.
உயிர்களுக்கு, ஊழின் வயத்தால் பிறவி
உண்டாகின்றது. அந்தந்தப் பிறவிக்கு உள்ள குணமே
மிகுந்து இருக்கும். நாய் நாய் தான். புனுகு பூனை புனுகு பூனை தான். ஒன்று வேறு ஒன்று
ஆகாது. இதனை,
நுண்ணிய
நூல் பல கற்பினும், மற்றும் தன்
உண்மை
அறிவே மிகும்
என்னும்
திருக்குறளால் தெளியலாம்.
No comments:
Post a Comment