43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும்,

ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே!

மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில்

இன்பு ஆரும் சீதளம் ஆமே.”


சித்திரம் போன்ற பெண்ணே அல்லிக் குளத்தில் உள்ள நீரும், ஆலமரத்தின் நிழலும், கடப்பைக் கல் பதித்த வீடும், அம்பு போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் இளங்கொங்கையும், மென்மையான குளிர்ச்சி பொருந்திய காலங்களில் வெப்பத்தைக் கொடுக்கும்.  வெப்பமான காலத்தில் இன்பம் நிறைந்த குளிர்ச்சியைத் தரும்.


        (வாவி - குளம்.  வடநிழல் - ஆலமர நிழல்.  பாவகம் - பாவு அகம்.  ஏ- அம்பு.  சீதம் - குளிர்ச்சி.)


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...