அத்தியின்
மலரும், வெள்ளை யாக்கைகொள்
காக்கைதானும்,
பித்தர்தம்
மனமும், நீரில் பிறந்த மீன்
பாதம் தானும்,
அத்தன்
மால் பிரம தேவனால் அளவிடப் பட்டாலும்,
சித்திர
விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி
மரத்தினுடைய மலர், வெண்ணிறம் பொருந்திய
காக்கை,
பித்துப்
பிடித்தவனின் மனக்கருத்து, நீரில் பிறந்த மீனின் பாதம் ஆகிய இவைகளை எமது அத்தனாகிய
சிவபெருமான்,
திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளாலும்
ஒருக்கால் அளவிடப்பட்டாலும், சித்திரப்பாவையைப் போலும் கண்களை உடைய பெண்களின் மனக்கருத்தை
அறிந்து சொல்ல அந்த மும்மூர்த்திகளுள்ளும் யாரும் இல்லை. பெண்களின் நெஞ்ச ஆழத்தை யாராலும்
அளவிட்டு அறிய முடியாது.
கருத்து
---
அத்தி மரம் பூப்பதே இல்லை. வெள்ளை நிறம் பொருந்திய
காக்கை இல்லவே இல்லை. நீரில் பிறந்த மீனுக்குப் பாதம் என்பதும் இல்லை. பித்தருடைய மனம்
தெளிந்ததே இல்லை. இவை எல்லாம் உண்டு என்று
அளவிட்டு அரிய யாராலும் முடியாது என்பதைக் காட்ட, மும்மூர்த்திகளாலும் முடியாது
என்றார்.
No comments:
Post a Comment