பெருத்திடு
செல்வமாம் பிணிவந்து உற்றிடில்,
உருத்
தெரியாமலே ஒளி மழுங்கிடும்;
மருத்து
உளதோ எனில், வாகடத்து இலை;
தரித்திரம்
என்னும் ஓர் மருந்தில் தீருமே.
அற்பருக்கு அதிகமான செல்வம் என்னும் நோய்
வந்து சேர்ந்ததானால்,அந்த நோயின்
தன்மையாலே,
பலநாள்
பழகியவர் அவர்கள் முன் வந்தாலும், வருபவரின் உருவமானது தெரியாதவாறு கண்கள் ஒளி
மழுங்கிப் போய்விடும். (செல்வத்தின் செருக்கால், எதிர் வருவோரைக் கண்டும்
காணாதது போல் செல்வர் அச் செல்வர்.)
இவ்வாறு
கண்ணொளி மழுங்கிய நோய்க்கு மருந்து ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால், மருத்துவ
நூல்களில் இல்லை.
தரித்திரம்
என்றுசொல்லக் கூடிய ஒப்பற்ற மருந்து ஒன்றினாலே தான் தீரும்.
No comments:
Post a Comment