செல்வம் வந்தால் தலைகால் தெரியாது





செல்வம் வந்து உற்ற காலைத்
     தெய்வமும் சிறிது பேணார்,
சொல்வன அறிந்து சொல்லார்,
     சுற்றமும் துணையும் பேணார்,
வெல்வதே கருமம் அல்லால்
     வெம்பகை வலிது என்று எண்ணார்,
வல்வினை விளைவும்ஓரார்,
     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.


இதன் பொருள் ---

     மண்ணின் மேல் வாழும் மாந்தர் --- இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்கள்,

     செல்வம் வந்து உற்ற காலை --- தங்களுக்குப் பெரும் செல்வம் வந்து பொருந்திய போது,

     தெய்வமும் சிறிது பேணார் --- தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்,

     சொல்வன அறிந்து சொல்லார் --- சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்,

     சுற்றமும் துணையும் பேணார் --- உறவினர்களையும், உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்.

     வெல்வதே கருமம் அல்லால் --- எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவி,
  
     வெம்பகை வலிது என்று எண்ணார் --- எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணிது துணிய மாட்டார்கள்,

     வல்வினை விளைவும் ஓரார் --- தாம் செய்யும் காவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

     கருத்து --- முன்னர் ஒரு பாட்டில், "பெருத்திடு செல்வமாம் பிணி வந்து உற்றிடில், ....... தரித்திரம் என்னும் ஒரு மருந்தில் தீரும்" என்று இந் நூலாசிரியர் கூறியுள்ளதைக் கருத்தில் கொள்க.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...