“வென்றி வரி உகிரும், வெண்கவரி மான்மயிரும்,
துன்றுமத யானைச் சுடர்மருப்பும், - நின்றநிலை
வேறுபடினும் சிறப்பாம்; மெய்ஞ்ஞானி நின்றநிலை
வேறுபடினும் சிறப்பு ஆமே.” — நீதிவெண்பா
வெற்றியை உடைய புலியினது நகமும், வெண்மையான கவரிமானின் மயிரும், நிறைந்த மதத்தை உடைய யானையினது ஒளி பொருந்திய தந்தமும், தாம் நின்ற நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவைகளுக்குப் பெருமையே மிகும். அதுபோல, உண்மையான அறிவுடைய பெரியோர் தாம் இருந்த நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவர்களுக்குப் பெருமையே உண்டாகும்.
(கவரி - ஒருவகை மான். துன்று - மிகுந்த. மருப்பு - பல், தந்தம்.)
No comments:
Post a Comment