சொல்லுவார்
வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர்,
நல்லவர்
விசாரியாமல் செய்வாரோ? நரிசொல் கேட்டு
வல்அரி
எருதும் கூடி மாண்டதோர் கதையைப் போல,
புல்லியர்
ஒருவராலே போகுமே யாவும் நாசம்.
இதன்
பொருள் ---
நட்புக்குக் கேடு தரும் அறிவுரைகளை ஒருவர் சொன்னால்,
அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஆராயாமல் ஒருவரின் நட்பை இகழ்ந்து, நட்புக் கொண்டிருந்தவருக்குத்
தீங்கு செய்பவர்கள் அற்ப அறிவு படைத்தவர்கள். நல்லவர்கள் விசாரிக்காமல், நட்பை இகழமாட்டார்கள்.
வலிமை பொருந்திய சிங்கமும் எருது ஒன்றும் நட்புப்
பூண்டிருந்த போது, ஒரு நரியின் சொல்லைக் கேட்டு, அந்த சிங்கமானது, தான் முன்னே நட்புக்
கொண்டு இருந்த எருதினைக் கொன்றது.
அதைப் போல, அற்ப குணம் படைத்த ஒருவராலே,
நல்ல நட்பானது அழிந்துவிடும்.
No comments:
Post a Comment