எழுத்துப் பிழை அறக் கற்பது எப்போது?

 



எழுத்துப் பிழை அறக் கற்பது எப்போது?

-----

 

     உபதேசம் பெறுவதற்கு இன்னார் தகுதியானவர் என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும்இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம். அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று தெளிவுபடுத்தி உபதேசிக்கிறார். 

 

     உபதேசமாக உள்ள பாக்களைக் கற்றுக் கொள்பவன் எப்படி இருக்க வேண்டும்தமிழ் நன்றாகக் கற்றவனாக இருக்க வேண்டும்இறைவனிடத்தில் பத்தி டையவனாக இருக்க வேண்டும். பாமாலையைப் பெறுபவன் முருகன். தமிழுக்குத் தெய்வம் என்று போற்றப் பெறுகிறவன். அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான். "குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குழவி முத்தம் தருகவே"என்பது திருச்செந்தூர் முருகன் பிள்ளத்தமிழ். "சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழஇருசெவி குளிர இனிய தமிழ் பகர்வோனே"என்பது அருணகிரிநாதர் பாடிய திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடல் வரி.

 

     அருணகிரிநாதப் பெருமான் நல்ல தமிழ்ப் புலவர். அவர் புகழ்ந்து பாடிய முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது எழுத்துப் பிழையோடு பாடலாமா  முருகனைப் பற்றிய தமிழ்ப் பாட்டை எழுத்துப் பிழை இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுஅருணகிரிநாதர் உபதேசிக்கிறார். 


     நம் வீட்டிலே நாமே மலர்ச் செடிகளை வைத்துப் பயிரிட்டுமலர்களைப் பறித்துக்கொண்டு வந்துஇறைவனுக்குச் சாத்துவது முடியாத செயல். மலரைக் கடையிலிருந்து வாங்கி வந்து அருச்சனை பண்ணலாம். அப்படிப் பண்ணும் போது நமக்குச் சிரத்தை இருந்தால்அன்பு இருந்தால்அந்த மலரின் காம்புகளை எல்லாம் கிள்ளிவிட்டுச் சுத்தமான மலராக அருச்சனை பண்ணலாம். இதுதான் முறை. அப்படிச் செய்யவில்லை என்றால் சிரத்தை இல்லை ன்றே கொள்ளவேண்டும். அதுபோலவேஇறைவன்மேல் அருளாளார்கள் பாடிய பாடல்களை எழுத்துப் பிழை ல்லாமல் சொல்ல வேண்டும்.

 

     இந்தப் பாட்டில்காலனை வெல்ல வேண்டுமென்றால் நன்றாக எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். எதைக் கற்பதுகவியை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும். எந்தக் கவியை?அயில் வேலன் கவியை. எழுத்துப் பிழையறக் கற்றால் போதாது. அன்போடு கற்க வேண்டும். அப்படிக் கற்றால் காலனை வென்று விடலாம் என்கிறார்.


   
உலகத்தில் பிறந்த அத்தனை பேரும்உடம்பைப் பெற்றவர்கள். அவர்கள் உடம்புக்குள் ருந்து உயிர் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே ஆக வேண்டும். அதுதான் மரணம். அந்த உயிர் வேறு பிறவி எடுக்கிறது. ஆனால் இறைவன் அருள் பெற்றவர்கள் மீட்டும் பிறக்க மாட்டார்கள். "மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே" என்கிறார் மணிவாசகப் பெருமான். மீட்டும் இந்தப் பிறவியைப் பெறாதபடி செய்பவன் அயில் வேலன்ஆகிய இறைவன். அயில்வேல் என்பதற்குக் கூர்மையான வேல் என்று பொருள். முருகன் கையிலுள்ள வேல் ஞானசக்தி எனப்படும். ஆன்மாக்களைப் பற்றியுள்ள அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானசக்தியே வேல். 

 

     கற்பது எப்படிஒரு முறை படிப்பதுபலமுறை படித்து மனனம் பண்ணுவதுபொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அனுபவமாக மாறுவது கல்வியின் பயன். இறைவனுடைய புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்துஅதனால் இன்பத்தை அனுபவிப்பது கல்வியால் ஆன பயன். அந்த நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

 

     பழங்காலத்தில் நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாததுகேளாதது ஒன்றுமே இல்லை. நான்கு வேதங்கள்ஆறு அங்கங்கள்என்று எல்லாவற்றையும் கற்றவர்கள். அப்படி ருந்தும் அவர்களுக்கு ஐயம் நீங்கிதெளிவு உண்டாகவில்லை. ஐயத்தைத் தெளிவிக்க வேண்டிஇறைவனைச் சரண் புகுந்தார்கள். இறைவன் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து, அவர்களுடைய ஐயத்தைச் சின்முத்திரையினால் விளக்கினான். பேசாத பேச்சினாலே அவர்களுடைய ஐயம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேள்வியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும்வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.
  

கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆறு அங்கம்முதல் 

     கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
   
மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
   
இருந்து காட்டிச்
சொல்லாமல்சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
   
தொடக்கை வெல்வாம்"

என்பது திருவிளையாடல் புராணம் கூறுவது.

 

     இறைவன் கல்விகேள்விகளால் அறிய முடியாத பொருள்அறிந்தேன் என்பவர்களால் அறியப்படாத பொருள். அறியமுடியவில்லையே என்று ஏங்கி ஆர்வத்தோடு அலைந்து கொண்டிருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அனுபவம் தோற்றிமோனம் தலைப்படும்.

 

     முதலில்  இன்றியமையாதது  அன்பு. அது வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்போடு கற்றுக் கொள்ளவேண்டும். தாம் பாடிய கவியை மாத்திரம் நினைந்துஅருணகிரிநாதர் இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு முன்னாலே தோன்றியஅருளாளர்கள் இறைவனைப் பற்றி பலப்பல பாடல்களை அருளிச் செய்துள்ளார்கள். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் பல இருக்கஅவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இந்தப் பாட்டைப் பாடினார்.

 

     கவிகளைக் கற்றுக் சுவை காணும்போது ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால் எந்தக் கவியைக் கற்றுக் கொள்ளவேண்டும் அயில்வேலன்  (இறைவன்) கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும்அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத்  தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்கவேண்டும். 

 

      பாடும்போது  நன்றாக உச்சரித்துஎழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இறைவனிடமிருந்து தோன்றியதுஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ அவரைப் பற்றியோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வரும். அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால்அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால்அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

 

     ழுகையே தன் மொழியாகப் பிறக்கும் குழந்தை பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் குழல் இசையையும்யாழின் இசையையும் விட இனிமையானது என்று திருவள்ளுவர் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சிஎன்கிறது. பழம் என்பதைப் 'பயம்என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவைஆனாலும் இனிமையை உடையன. குழல் ஒலி இனிமையானது அல்லயாழ் ஒலி இனிமையானது அல்லஒருவன் முயற்சி செய்தால் பத்து ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம். வீணையும் பத்து ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய நாடகத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச வராது. விகடம்  செய்பவர்கள் ஆடு போலக்  கத்தலாம்யானை போலப் பிளிறலாம்வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேசமுடியாது. குழந்தைக்கு இரண்டு தாடையும் வலுப்பெறவில்லை. பற்கள் முளைக்கவில்லை. பற்களும் வரிசையாக முளைத்துதாடையும் வலுவடைந்துவிட்டால் மழலை ஒலி வராது.

 

     ஆகவே ,மனிதன் வளர வளரமழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெருவரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. 

 

     பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்துஅவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சுநல்ல பேச்சு பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு. இறைவன் உள்ளம் குளிரும்படி பேசுவதற்கு நமக்கு என்ன தெரியும் என்றுதோன்றும்.

 

     உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஒருவர் சொன்னால்அந்தப் பேச்சினாலே வனுடைய உள்ளம் குளிருகின்றது. அந்தப் பேச்சினாலே தனக்குவரும் ஊதியத்தை எண்ணியே அவன் மனம் குளிருகின்றது. ஆனால் நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறதுஇறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை.  பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறதுஇறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய  திருவருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவது உபகாரம் உண்டாஇல்லை என்று பட்டினத்தார் சொல்கிறார்.


"பொன்னால் பிரயோசனம் பொன்படைத்தாற்கு

     உண்டு.அப்பொன்படைத்தான்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு
  
  துஉண்டுத் தன்மையைப்போல்
உன்னால் பிரயோசனம் வேணது எல்லாம்
    
ண்டுங்குன்னக்கே
என்னால் பிரயோசனம் ஏதுண்டு
    
காளத்தி ஈச்சுரனே"

 

     நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற கடவுளுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று அவர் சொல்கிறார். அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம்அவன் குழந்தைகளாகிய மக்களை வைகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபசாரம் செய்கிறோமே தவிர, ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை. இவ்வாறு இருந்தால் எப்படி அவன் மனம் குளிரும்குழந்தை தத்தித்தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலேஅம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு  எல்லையில்லாத ஆனந்தம் எய்துகிறாள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகிறது. அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல  வேலைக்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம்அக் குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும் விடப் பெரியது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். 

 

     எல்லா உலகத்திற்கும்எல்லாக் காலத்திற்கும்எல்லா உயிர்களுக்கும் மேலான தாயாக விளங்குகிற இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்துபேசும் ஆற்றலையும் வைத்துள்ளான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். வன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல்பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால்அவன் நம்மை ஊமையாக்கிவிடுவான்.

 

     பொல்லாத பேச்சுக்களில் நான்கு வகை உண்டு. கடுமையாகப் பேசி பிறர் மனம் புண்படும்படி செய்வது ஒரு வகை. பயன் இல்லாத சொற்களைப் பேசுவது ஒரு வகை. ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசுவது ஒரு வகை. பொய் சொல்வது ஒரு வகை. இந்த நான்கு வகையாகப் பேசுவதையும் ஒழித்து இவற்றிற்கு மாறான பேச்சைப் பேசவேண்டும். பிறர் மனம் மகிழும்படி இனிய சொல்லைப் பேச வேண்டும்மெய்யைப் பேச வேண்டும்புறங்கூறாமல் நேரே நயமாகச் சொல்ல வேண்டும் பயனுள்ளவற்றையே பேச வேண்டும்.

 

     உடம்புக்குள் போன எந்தப்  பொருளாகட்டும்எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோமலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து  ஒதுக்குகிறோம். ஆனால் உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த  ஒன்றுஎச்சில் படாத ஒன்றுமலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி இருந்தால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளிவருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும்மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அனுபவிக்கக் கூடியது பேச்சு ஒன்றுதான். அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பேசுதல் கூடாது.

 

     இறைவன் நமக்கு வாய் தந்திருப்பது உண்பதற்காக மட்டுல்ல. எல்லாஉயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரியவாய் இருக்கிறது. ஆனால்,அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். ஆனலும்அந்தப்  பெரிய பிராணியை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. ஆறு அறிவு மனிதனாகிய நாம்பேசும் வாய் படைத்ததன் பயன் என்ன என்று அப்பர் அருளியிருக்கிறார்.  வாய் படைத்தவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்தாவிட்டால் ஆண்டவன் என்ன செய்வான் "போன பிறப்பில் இவனுக்கு அழகாகப் பேசக் கூடிய வாயைக் கொடுத்தோம். இவன் அதை நன்கு பயன்படுத்தாமல் இன்னாதன கூறிபிறர் மனத்தைப் புண்படுத்தி வாழ்ந்தான். புறங்கூறிப் பெரிய பெரிய சண்டைகளைக் கிளப்பி விட்டான். பொய் கூறினான். வழவழவென்று பயனற்ற வம்புப் பேச்சைப் பேசினான். இவனுக்கு வாய் கொடுத்துப் பயன் இல்லை. இவன் வாயில்லாப் பிராணியாகவே போகட்டும்" என்று செய்து விடுகிறான்.

 

     நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும்அந்த வாயையும்  நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன் "எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்  ஏக்கற்று இருக்கும் வெறு வாய்என்று வருந்திச் சொல்கிறார்  வள்ளல்பெருமான். நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் நம்முடைய கடமை அது.  எல்லாவற்றுக்கும் மூலகாரணமாய் இருக்கிற இறைவனிடத்தில் நாம் நன்றி பாராட்ட வேண்டும்  நாம் அவனுக்கு வேறு எவ்விதமாகக் கைம்மாறு செய்ய முடியும்அவன் புகழைச் சொல்வதுதான் நமது நன்றியறிதலுக்கு அறிகுறி.

 

     றைவனைப் புகழ்வது நம் கடமை வாய் படைத்த பயன் இறைவனால் பெற்ற பயனை நினைந்து நன்றி கூறும் செயல். இறைவனது  பொருள்சேர் புகழைக் கூறும் அருட்கவியை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள்சாகுங்காலத்தில் வருகின்ற இயமனுக்குப் பயப்பட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சொத்தைக் கண்டு அந்தக் காலன் பயப்பட மாட்டான். பதவி கண்டும் பயந்து உயிரை விட்டுப் போக மாட்டான். எந்த எந்தக் கணத்தில் வந்து சுருக்கிட்டு இழுத்துப் போக வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். அவனை வெல்ல வேண்டுமென்றால் அயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழை இல்லாமல்  படிக்க வேண்டும். "சொல் பிழை வராமல் உன்னைக் கனக்கத் துதித்து நிற்பது வாரத பவம்" என்றார் அருகணிகிரிநாதர் திருப்புகழில். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால்அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானேஅப்பொழுதா படிக்க முடியும்சாகிற காலத்தில் சங்கராசங்கராஎன்றால் வருமாவராது. மனிதனுடைய பழக்கத்தால் உண்டான வாசனை எதுவோ,அதுவே சாகிற காலத்தில் முந்திக் கொண்டு நிற்கும்.

 

     வாயால் கவியைப் பாடிவிட்டால் மட்டும் போதாது. இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனால் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்லஅது மனத்திலே ஏறிஅதன் பொருள்  உள்ளத்திலே தங்கும்பிறகு இன்ப அனுபவம்உண்டாகும். 

 

     ஆறுமுகம் என்று ஒருபையன் இருக்கிறான். பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள்அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாகவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஆறுமுகம் என்ற பெயருடைய  ஒருவனுடன் திருமணம் ஆகிறது. வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்' என்று கூப்பிட அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் விழுகிறது. அதில் ஒரு இன்பத்தை அவள் காணுகிறாள். காரணம்அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும்அவள் காதிலே விழும்போது  இனிமை உண்டாகிறது. தன் கணவனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப்  பெறுகிறாள். இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால்அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. "மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய  வாழ்த்து  ஒலி போய்  வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி மெய் மறந்து" என்று மணிவாசகப் பெருமான் அருளிய நிலை இதுவே. அதனால்தான் "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று அருளாளர்கள் சொல்லுகிறார்கள். "தேன் என இனிக்கும் திருவருட்கடலே" என்றார் வள்ளல்பெருமான்.

 

     தேன் இனிக்கும்  என்பது நமக்குத் தெரியும். தேன்நாக்கிலே பட்டால்தான் அதன் இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் நமது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம். கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது  நமக்கும் இனிக்கும். மணிவாசகர் அருளிய திருவாசகத்தை வள்ளல்பெருமான் அனுபவித்தார். அதைப் பாட்டாக வடித்து மணிவாசகரைப் போற்றினார்.

  

"வான் கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால்,நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்துஎன்  
ஊன்கலந்துஉயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

 

என்கிறார். திருவாசகம் அவருக்கு மட்டும் இனிப்பானேன்? நமக்கு அப்படி இனிக்காமற்போவது ஏன்?

 

     பாலில் இனிப்பு வேண்டும் என்று சர்க்கரையைப் போடுகிறோம். போட்ட அளவிலேயே பால் இனிக்காது.  சர்க்கரை வேறுபால் வேறாக இருந்தால் பால் இனிக்காது. சர்க்கரை கரைந்து பாலிலே ஒன்றிக் கலந்து விட்டால்பால் இனிக்கும். அதுபோலதம்மை மறந்துபாட்டு மயமாகக் கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு அந்தப் பாட்டு இனிக்கும்.எனவே"நான் கலந்து பாடுங்கால்” என்று  வள்ளல்பெருமான் சொன்ன பாடலையும் பொருள் உணர்ந்து ஓதினால்தான் தெரியும். 

 

     உலகில் பிறந்தவர் யாராக இருந்தாலும்எது  நிச்சயமோ இல்லையோமரணம் என்பது நிச்சயம்.  "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். னிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை"என்று திருவள்ளுவர் பேசுகிறார். சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைப்  பார்க்கிறவர்களுக்கு மரண அவத்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும்கண்பிதுங்கும். அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் சக்திக்கு உருவம் கொடுத்து யமன் என்று பெயர் வைத்துஅவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லிஅவன்அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள்.

 

     தெரியாத பொருளையும்நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் யமன்என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறுபோடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள்.

 

     மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்மரணத்தை வரவேற்கக்  கூடாதாஎன்றால்மரணத்தில் பயம் ஏற்பட்டால்தான் மரணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை தோன்றும். அந்த நிலையை அருள்பவன் இறைவன் என்று உணர்ந்து கொண்டால்அவனிடத்தில் த்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச்சொல்லிஅந்தப் பயத்தைப் போக்குகின்ற இறைவனிடத்தில் பத்தியை உண்டாக்கி வந்தார்கள்நமது அருளாளர்கள்.  மரண பயம் உண்மையில் மனத்தில் தோன்றினால் அழுத்தமான பக்தி உண்டாகும்.அதனால்தான் 'பயபக்தி'என்ற தொடர் வந்தது.

 

     நாம் யமன் வாயில்தான் தூங்குகிறோம். அவன் வாயிலுள்ள நம்மை அவன் எந்தச் சமயத்திலும் விழுங்கி விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. யமன் முன் எச்சரிக்கை அனுப்பி விட்டு வருகிறவன் அல்ல. அதனால்  நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். திருஞானசம்பந்தர் "நீ நாளும்நன்னெஞ்சேநினை கண்டாய்யார் அறிவார்  சாநாளும் வாழ்நாளும்?" என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார். எந்த நாள் யமன் வருவானோயார் அறிவார்கள். சா நாளும்வாழ் நாளு ம்யார் அறிவார்கள்தான் செத்துப் போகிற நாள் எது வாழ்கின்ற நாள் எது என்று யாருக்காவது தெரியுமா

     

     மரணம் என்பது எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாததாலேஅதிலிருந்து தப்ப வேண்டுமானால் அதற்கு முன்னாலேயே இறைவனை வாழ்த்தத் தொடங்கவேண்டும். எப்போதுமே இந்தக் கவசத்தை அணிந்து கொண்டால் யமன் எப்போதுவந்தாலும் பயம் இல்லை.ஆகவே,மீட்டும் பிறவாத நிலை தந்து நம்மை எல்லாம் ஆட்கொள்ளுகிற  இறைவனைப் பாட வேண்டும். அவன் ஒருவன் தான் உண்மையான புகழுக்கு உரியவன்.அந்தப் புகழுக்கு உரியவனாக இருப்பது மாத்திரம் அல்ல. புகழ்வதற்குரிய நாக்கைத் தந்தவனும் அவன்தான்.நாக்கைத் தந்தவனைப்  புகழ்வதனால் மேலும் நமக்குப் பயன் உண்டு. அவனைப்  புகழ்ந்தால் காலனை வெற்றி கொள்ளலாம்.


     கூற்றன் மிகவும் சீற்றத்தோடு வருகிறான். அவன் கண்களில் அனல் கொப்புளிக்கிறது. புகை எழுகிறது. முகம் கோபத்தால் சிவந்திருக்கிறது. அவன்தன் பாசக் கயிற்றைப் போட்டுநம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனது கொடுமையான பிடியிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அயில்வேலன் கவியைப் பாட வேண்டும். மரணம் உண்டாகும் சமயத்தில் எப்படி உங்களுக்குப் பாடவரும்?' அயில்வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்றுக்கொள்ளுங்கள். கூற்றன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும்போது அந்தக் கவி வந்து உதவும். அந்தச் சமயத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் நிச்சயமாக அப்போது கற்றுக் கொள்ள முடியாது" என்று இதனால் தெரிந்து கொள்ளும்படி உபதேசம் செய்கிறார் அருணகிரிநாதர்.

 

"அழித்துப் பிறக்க ஒட்டாஅயில்
     
வேலன் கவியைஅன்பால்
எழுத்துப் பிழைறக் கற்கின்றிலீர்,
     
எரி மூண்டது என்ன
விழித்துப் புகைழப் பொங்குவெங்-
     
கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில்சுருக்கு இட்டு இழுக்கும்

     அன்றோகவி கற்கின்றதே?"

 

என்று கந்தர் அலங்காரத்தில் வரும் இப்படாலின் பொருள் ---

 

     உங்களது தீவினைகளை அழித்து இன்னொரு தாயின் வயிற்றில் சென்று பிறக்க ஒட்டாமல் தடுத்துபேரின்ப வீட்டை அருள் புரியவல்லவனும்கூர்மை பொருந்திய வேற்படையை உடையவனும் ஆகிய முருகப் பெருமானுடைய தோத்திரப் பாடல்களை இடையறாத மெய்யன்போடுஎழுத்துப் பிழைகள் சிறிதும் இன்றிக் கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவது போலக் கண்களை உருட்டிப் பார்த்துபுகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் பாசத்தை வீசி,உங்கள் கழுத்தில் சுருக்குப் போட்டுஉயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா இறைவன் திருப்புகழை உங்களால் கற்க முடியும்? (அந்த நாளில் பொறிபுலன்கள் கலங்கிநெறி மயங்கிப் போகும்அப்போது முடியாது.)

 

     வாழ்நாள் முடிவுக் காலம் எப்பொழுதென்று தெரியாமல் வாழ்கின்ற உலகவர்களே! உங்களுடைய வாழ்கின்ற காலம் இருக்கும்போதே இறைவனிடம் அன்புசெலுத்தி நற்கதியைத் தேடுவீர்களாக!

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...