“வருவாயுள் கால்வழங்கி வாழ்தல், செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை, - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல், இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.” -- திரிகடுகம்.
தமக்கு வரும் பொருள்களிலே, கால் பங்கு (நான்கில் ஒரு பங்கு) அறத்தில் செலவு செய்து வாழ்தலும்; போரில் வெற்றி கிடைக்கவும், அதற்காகத் தான் செய்த செயல்களை ஆராயாது, யாவர்க்கும் விளங்கித் தோன்றும் சிறப்பு உடையவன் ஆதலும்; பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் நல்லவற்றைக் கற்றலும் ஆகிய இம் மூன்றும் மாட்சிமை உடைய நல்லவர்களின் கொள்கைகள் ஆகும்.
(ஒருவன் தனது சம்பாத்தியத்தில், ஒரு பாதியைத் தன்வகைச் செலவுக்கும், கால் பங்கு அறத்திற்கும், மற்றொரு கால் கங்கு எதிர்காலச் சேமிப்புக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது நூலோர் வகுத்த கொள்கை.)
No comments:
Post a Comment