72. நீத்தோருக்குத் துன்பம் இல்லை

“ஊரூர் எனும்வனத்தே ஒள்வாட்கண் மாதர் எனும்

கூரூர் விட முள்குழாம் உண்டே, - சீரூர்

விரத்தி வைராக்கிய விவேகத்தொடு தோல்

உரத்து அணியத் தையாஎன்று ஓது.” -- நீதிவெண்பா.


வாழ்கின்ற ஊர் என்று சொல்லப்படும் காட்டிலே, ஒளியுள்ள வாள்படை போன்ற கண்களை உடைய பெண்கள் என்னும் கூரிய, நஞ்சு போலும் முள்கூட்டங்கள் உண்டு.  பெருமை மிக்க துறவோர், அறிவு உறைப்பு என்னும் செருப்பை, அறிவாகிய காலில் அணிந்து கொள்ள, அந்தப் பெண்கள் என்று சொல்லப்படும் முட்கள் அவருடைய அறிவுக் காலைத் தைக்கமாட்டா என்று சொல்லு.


(வனம் - காடு.  குழாம் - கூட்டம்.  விரத்தி - துறவி.  விவேக வைராக்கியம் - அறிவுத் திண்மை.  தொடுதோல் - செருப்பு.  உரம் - அறிவு.)


No comments:

062. ஆள்வினை உடைமை - 10 ஊழையும் உப்பக்கம்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை  இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பயனை விலக்குவதாகிய ஊழ...