சும்மா இருக்கும் சுகம்

 


சும்மா இருக்கும் சுகம் வேண்டும்

-----

 

     நாம் அனுபவித்து வரும் சுகதுக்கங்கள்இராப்பகல் போல் மாறி மாறி வருகின்றன. இவை இவ்வாறு வருவதற்குக் காரணம்நம்மால் செய்யப்பட்ட பாவ புண்ணியங்களே ஆகும். நம்மால் செய்யப்பட்ட நல்வினை தீவினைகளால் உண்டான பயன்களை நாம்தான் அனுபவித்து வரவேண்டும். இவற்றுள் ஒன்றை விரும்பிஇன்னொன்றை வெறுப்பது தகுதி ஆகாது. பாவ புண்ணியங்களின் பயனாகிய துன்ப இன்பங்களைச் சமநோக்குடன் அனுபவிப்பவனே ஞானி ஆவான்.

 

     ஆன்மா என்றும் நிலைத்து உள்ளது. எனவேஅதற்குப் பிறப்புஇறப்பு இல்லை. ஆன்மாவானது ஓர் உடம்பை விடுதல் மரணம் என்றும்மற்றொரு உடம்பினுள் புகுதல் பிறப்பு என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன. ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பு உண்டு என்றால்அது செய்த கர்மங்கள் பயனில்லாமல் போகும். ஆன்மாவிற்கு மரணம் என்பது கிழிந்துபோன பழைய துணியை விட்டுவிடுவது போல ஆகும். பிறப்பு என்பது புதிய துணியைத் தரிப்பது போல ஆகும்.

 

     உடம்பெடுத்த ஆன்மாவுக்கு இளமைவாலிபம்முதுமை எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றது. என்றாலும்அதனுடைய அறிவு எப்போதும் மாறாமல் ஒரு திறத்ததாய் இருக்கும். அது சிற்றறிவு. சிற்றறிவினால் சிறுதொழில் புரிந்துவினைவசத்தால் சுகதுக்கங்களை அனுபவிக்கும்படி ஓர் உடம்பை விடுவதும்மற்றொரு உடம்பை எடுப்பதும் ஆகிய தொழிலில் ஆன்மா புகுகின்றது. 

 

     மாறி மாறிச் சுழன்று பிறக்கும் பிறவிகள் பல உள்ளன.  அவை காரண காரியத் தொடர்ச்சியாய் கடல் அலை போல வரும். எனவேபிறவியைப் பெருங்கடல் என்றனர் முன்னோர். பிறவி துன்பத்தையே ஒருவனுக்குத் தரும். பிறவாமையே இன்பத்தைத் தரும். அது இறவாத இன்பம் ஆகும்.

 

இதனை மணிமேகலையில்,

 

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம்

பற்றின் வருவது முன்னது

பின்னது அற்றேர் உறுவது"

 

என வரும் தொடரால் குறித்தார் சீத்தலைச் சாத்தனார்.

 

     அஞ்ஞானத்தால் மூடப்பட்டு உள்ள ஆன்மாவானதுபிறப்புத் துன்பத்துக்கு அஞ்சுவது இல்லை. பிறப்புத் துன்பத்தை அது அறியாமையால் பிறப்பு உண்டாகின்றது. ஆனால்பிறந்த பின்னர் மரணம் உண்டு என்னும் நியதியை மறந்துமரணத்திற்கு அஞ்சுகின்றது. பிறப்பால் உண்டாவது பெருந்துன்பம். மரணத்தால் உண்டாவது பெருத்த அச்சம்.

 

     பிறப்பு என்னும் துன்பம்இறப்பு என்னும் அச்சம் ஆகிய இவற்றுக்கிடையில்போக்கு வரவு புரிந்துகொண்டுஓர் உடம்பில் புகுவதும்எடுத்த உடம்பை விட்டு வேறு ஓர் உடம்பில் புகுவதும் ஆகிய இவற்றுக்கு இடையில் ஆன்மா பெறவேண்டிய அறிவு அனுபவம் ஒன்று உள்ளது. பள்ளியில் ஒரு வகுப்பில் புகுவதும்அந்த வகுப்பை விட்டுவேறு ஒரு வகுப்புக்குச் செல்வதும் ஆகிய இவற்றுக்கு இடையில்மாணவன் ஒருவன் பெறவேண்டியதுஅவனுக்கு உள்ள அறியாமையைப் போக்கிஅறிவைப் பெற்றுக் கொள்வதே ஆகும். அறிவு பெறாமல்பள்ளியில் இருப்பது பயனற்றது.

 

     அதுபோலவேபிறப்பு இறப்புக்கு இடையில்இறைவனால் படைத்துக் கொடுக்கப்பட்ட உடம்பைப் பெற்று வந்த ஆன்மாதனக்கு இயல்பாகவே பொருந்தி உள்ள அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டுபற்றுக்களை அறத் துறந்துதூய அறிவாகிய ஞானத்தைப் பெற்றுஅதன் பயனாக நிறைந்த இன்பப் பொருளாகிய இறைவனோடு கூடி இன்புறுவதே ஆகும். "இடும்பைக்கே கொள்கலம்" என்று திருவள்ளுவ நாயனாரால் கூறப்பட்ட உடம்பினை எடுக்கின்ற பிறவியில் புகுவது அல்ல.

 

     பள்ளிக்குச் சென்ற மாணவன்தனக்குத் தேவையான அறிவினைஆசிரியரின் துணைக் கொண்டு பெற்றுக் கொள்வதைப் போலபிறவிக்கு வந்த ஆன்மாஇறைவன் திருவருளால் இன்பத்தைப் பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும். தனக்கென ஓர் உருவமோபெயரோ இல்லாத இறைவன்ஆனையைக் காட்டி ஆனையைப் பிடிப்பது போல்மனித உருவில் உள்ள நம்மை ஆட்கொள்ளஞானாசிரியனாக மானுடச் சட்டை தாங்கியே எழுந்தருளி வருவான்.

 

     பிறவியில் புகுந்த ஆன்மாஉலக இன்பங்களை வேண்டி உழலுதலும்விண்ணுலக இன்பத்தை விழைவதும் கூடாது. மரணம் இல்லாப் பெருவாழ்வில்அலைகளே சிறிதும் இல்லாத ஆனந்தப் பெருங்கடலில் நம்மை ஆழ்த்துகின்ற இறைவனது திருவருளை வேண்டியே வாழ்க்கை நடத்துதல் வேண்டும்.

 

     இதனைமணிவாசகப் பெருமான்பின்வரும் திருவாசகப் பாடலால் தெளிவுறக் காட்டி அருளினார்...

 

"யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்,

     இறப்பு அதனுக்கு என் கடவேன்?

வானேயும் பெறில் வேண்டேன்;

     மண் ஆள்வான் மதித்தும் இரேன்;

தேன் ஏயும் மலர்க் கொன்றைச்

     சிவனே! எம்பெருமான்! எம்

மானே! உன் அருள் பெறும் நாள்

     என்று என்றே வருந்துவனே"

 

இதன் பொருள் ---

 

     தேன் ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே--- தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையைத் தரித்தமங்கலப் பொருள் ஆனவனேஎம்பெருமானே --- எமதுதலைவனே எம்மானே --- எமதுபெரியோனே!யான்ஏதும் பிறப்பு அஞ்சேன்--நான் ஒரு சிறிதும்பிறப்பதற்குஅச்சம் கொள்ளமாட்டேன்இறப்பு அதனுக்குஎன் கடவேன்--(அப்படியிருக்க)யல்பாக வரும் இறப்பைத் தவிர்த்துக் கொள்ளஎன்னால் என்ன செய்யமுடியும்?(எல்லாம் உன் கருணையேஎல்லாம் உன் செயலே என்று இருக்கபிறவியை எடுத்தபின்நான் உனது திருவருளால் வாழ்கின்றேன்எனவே)வானேயும் பெறில் வேண்டேன் ---யாராலும் பெறுதற்கு அரிய விண்ணுலக இன்பம் எளிதில் பெறக் கூடியதாக இருந்தாலும் அதனை நான் விரும்ப மாட்டேன்.  மண் ஆள்வான்மதித்தும் இரேன்-- நெஞ்சத்தால் இந்த நிலவுலக ஆட்சியை நினைந்தும் நான் இருக்கவில்லை. உன் அருள் பெறும் நாள்என்று என்றே வருந்துவன்--- உன்னோடு கலந்து அழிவில்லாத இன்பத்தைப் பெறுதற்கு ஏதுவாகஉனது திருவருளைப் பெறுகின்ற நாள் எப்போது வருமோ என்றே நான் வருந்தி இருக்கின்றேன்.

 

     திருவருள் எப்போது வாய்க்குமோ என்ற வருத்தமானதுஇன்பத்தில் நம்மை என்றாவது ஒருநாள் ஆழ்த்தும். உடல் வாழ்க்கையில் பற்று வைத்துஇதை விட்டுவிடுவோமோ என்று வருந்துகின்ற வருத்தம்நிச்சம் பிறவியில் ஆழ்த்தும்.

 

            பிறப்பு இறப்பு என்னும் இரண்டுமே துன்பத்தைத் தருபவை. என்பதால்அவை அறிவு உள்ளோரால்வெறுக்கக்கூடியவையே ஆகும். "அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்ததால்ஆற்றவே பெரும்பயன் கொள்க" என்று நாலடியார் கூறும். கிடைத்தற்கு அரிய இந்த உடம்புஇறைவன் திருவருளால் கிடைத்தது. பெறுதற்கு அரிய யாக்கையைப் பெற்றுபெறுதற்கு அரிய பிரான் அடியைப் பேணுதல் வேண்டும். பிறப்பு என்று வந்தால்இறப்பு நிச்சயம். பிறப்புத் துன்பமும்இறப்புத் துன்பமும் பிறப்பு ஒன்றினாலேயே உண்டாகின்றது. ஏனவேபெரிதும் அச்சம் கொள்ள வேண்டியது பிறப்பே ஆகும்.

 

     "ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழவான் ஆளும் செல்வமும்,மண்ணரசும் யான் வேண்டேன்" என்றும்"கம்ப மதயானை கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்" என்றும் குலசேகர ஆழ்வாரும் பாடி உள்ளதை அறியலாம்.

 

     பெறுதற்கு அரிய பிறவியை எடுத்து வந்த பிறகுபிழையைச் சுருக்கிஅன்பைப் பெருக்கவேண்டும். பிழையே பெருக்கிஅன்பைச் சுருக்குகின்ற வெற்று அடியாராகவேடத்தை மட்டுமே புனைந்து,நாடகத்தால் அடியார் போல நடிக்கக் கூடாது. பிறவியை எடுத்து வந்த பிறகுதீவினையைப் பெருக்கிக் கொள்ளாமல்,நல்வினைகளையே பயன் கருதாமல் செய்து வந்தால்மரண பயமும் இல்லாமல் போகும். மரண பயத்தைத் தவிர்க்கத் துணை புரிவது இறைவன் திருவருளே. ஆதலால்இறைவன் திருவருளைப் பெறுகின்ற நாள் என்று வரும்?என்று வருந்தினார் மணிவாசகப் பெருமான்.

 

     மண்ணுலக வாழ்வையும் பொருட்படுத்தாமல்விண்ணுலக இன்பத்தையும் விழையாமல் வாழும்போதுஇறைவன் திருவருள் ஒன்றிலேதான் நாட்டம் இருக்கும். அதிலேதான் ஏக்கமும் இருக்கும். மண்ணுலக வாழ்விலோ,விண்ணுலக வாழ்விலோ,வினை புரியாமல்,செயல் புரியாமல் வாழமுடியாது. மண்ணுலக இன்பத்தையும்விண்ணுலக இன்பத்தையும் அனுபவிக்க,ஆன்மாவானது செயல் புரிதல் வேண்டும். பசித்து இருக்கின்ற குழந்தைக்குத் தாய் தனது முலையைத் தந்தாலும்குழந்தையானது முலையமுதத்தைத் தனது முயற்சி ஒன்றினாலேயே பருகமுடியும். எப்போதும் பருகமுடியாது. பசித்தால் பருகலாம். சுரந்தால் பருகலாம்.

 

     இறைவன் திருவடி நிலையில் எப்போதும் சொரிந்து கொண்டு இருக்கும் பேரானந்தம் என்னும் தேனைப் பருகி ஆராத இன்பத்தில் ஆன்மா திளைத்து இருக்கலாம். அது சும்மா இருக்கின்ற நிலை. வள்ளல்பெருமானும்அந்த நிலை எப்போது தமக்கு வாய்க்கும் என்று ஏங்கினார்.

 

"இன்று வருமோ?நாளைக்கே வருமோ?அல்லது மற்று

என்று வருமோ?அறியேன். என் கோவே! - துன்றுமல

வெம் மாயை அற்று,வெளிக்குள் வெளி கடந்து 

சும்மா இருக்கும் சுகம்."                --- திருவருட்பா.

 

     "தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?" என்றார் பத்திரகிரியார்.

 

     சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்துசும்மா இருக்கும் எல்லையுள் செல்லும் வகைநம்மை பிறப்பு இறப்புத் துன்பத்தில் இருந்து விடுவித்துதனது திருவடி நிழலில் செலுத்துபவன் இறைவன். பிழையைச் சுருக்கிஅன்பைப் பெருக்கிஅவனருளை வேண்டியே வாழ்க்கையை நடத்துவோம்.

 

 

 

 

     

 

 

     

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...