கலிகாலத்தில் ஆற்றல் மிக்கவர் யார்?

 

 

😥😥 கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் யார்? 😥😥

 

முத்துச் சுப்பையர் பாடிய பாடல்..

 

அண்டின பேரைக் கெடுப்போரும், ஒன்று பத்தாய் முடிந்து

குண்டணி சொல்லும் குடோரிகளும், கொலையே நிதம் செய்

வண்டரைச் சேர்ந்து இன்ப சல்லாபம் பேசும் மறையவரும்

சண்டிப் பயல்களுமே கலிகாலத்தில் தாட்டிகரே

 

பொருள்----

 

தன்னைச் சேர்ந்தவரைக் கெடுப்போரும், ஒன்றைப் பத்தாக்கி, பொய் பேசி பகைமையை உண்டாக்கும் கோடரிக் காம்பு போன்றவர்களும், நாள்தோறும் கொலை செய்யும் கொடியவர்களுடன் பழகும் அந்தணர்களும், குதர்க்கம் பேசுபவர்களும் கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் ஆவர்.

 

குண்டணி -- கோள் சொல்லுதல்.

குடோரி -- கோடரிக் காம்பு.

தாட்டிகர்  -- வன்மை உள்ளவர்.


No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...