ஈனன் அதிகாரியாக வந்தால்

   

😀 ஈனன் ஒருவன் அதிகாரியாக வந்தால் என்ன நிகழும்  😀என்று வேதநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாடல்....

 

ஈனத்திலே பிறந்தோன் இறையாய் வரின், என்றும் மது

பானத்திலே, பரிதானத்திலே, கை பழகிய அவ

மானத்திலே மிகுத்தோர்க்கு அதிகாரம் வழங்கிடுவன்,

ஞானத்திலே சிறந்தோரை எல்லாம் தள்ளி நைவிப்பனே.

 

பொருள்.......

 

மிக்க தாழ்வான குணத்துடன் உள்ள ஒருவன் தலைமை அதிகாரியாக  வந்தால், எப்போதும் மது அருந்துவதிலும், இலஞ்சம் வாங்குவதிலும் தேர்ந்து, அவமானம் செய்வதில் வல்லவர்க்கு அதிகாரம்  வழங்கிடுவான்.  அறிவில் சிறந்தோரை எல்லாம் தள்ளி வைத்துத் துன்புறுத்துவான்.

 

ஈனம்--கீழ்மைக் குணம்.

பரிதானம்-- இலஞ்சம்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...