043. அறிவுடைமை --- 04. எண்பொருள ஆக



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும்கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தான் சொல்லும் சொற்கள் அரிய பொருளை உடையவனவாய் இருந்தாலும்கேட்பவர்க்கு எளிதாக விளங்கும்படிக்கு மனம் கொள்ளச் சொல்லுவதும்தான் பிறர் வாயில் இருந்து கேட்கும் பொருளின் நுட்பத்தை அறிந்துகொள்வதும் அறிவு ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன்தான் பிறர்க்குச் சொல்லும் போதுசொல்லப்படும் சொற்களின் பொருள் மிக அரியதாய் இருந்தாலும்கேட்பவர்க்கு எளிதில் விளங்குமாறு சொல்லவேண்டும். 

 

     தான் பிறர் சொல்லக் கேட்கின்ற காலத்தும்கேட்கும் சொல்லின் பொருள் மிக நுண்ணியதாய்த் தெரிந்து கொள்ளுதற்கு அரியதாய் இருந்தாலும்கேட்கப்படுகின்ற குற்றமுடையதாய் இருந்தாலும்வழுவாக இருந்தாலும்அப் பொருளின் உண்மையைத் தெளிந்து கொள்ளவேண்டும். 

 

திருக்குறளைக் காண்போம்...

  

எண்பொருள ஆகச் செலச் சொல்லிதான் பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு.    

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி--- தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி

 

     பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு--- பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.

 

    (உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும்கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...

 

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும்,நூற்கு ஏலா

வெண்மொழி வேண்டினும் சொல்லாமை,- நன்மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்,இம்மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன்.             --- திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     மொழி நோக்கி நுண் பொருள் கொளலும் --- (நூல்களில்) சொற்களை ஆராய்ந்துநுட்பமாகிய பொருள்களைக் கொள்ளுதலும்நூற்கு ஏலா வெண்மொழி வேண்டினும் சொல்லாமை --- நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களைபிறர் விரும்பினாலும் சொல்லாது ஒழிதலும்நல்மொழியை சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் ---(உயிர்க்கு உறுதி கொடுக்கும்) நல்ல சொற்களை,கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும்இ மூன்றும் கற்று அறிந்தார் பூண்ட கடன் - ஆகிய இம் மூன்றும்பல நூல்களையும் படித்தறிந்தவர் மேற்கொண்டகடமையாம்.

 

            சொற் போக்குக்கு இயையப் பொருள் கொள்வதும்பயனற்ற சொல் கூறாமையும்நல்ல நூற்கருத்துக்களை அவற்றை விரும்பிப் போற்றுவார்க்குக் கற்பிப்பதும்கல்வியின் பயனாம்.

 

     வெண்மொழி --- கருத்தாழம் இல்லாத சொற்கள்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...