047. தெரிந்து செயல்வகை --- 06. செய்தக்க அல்ல

 ல்லல


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவன்செய்யத் தக்கன அல்லாத செயல்களைச் செய்யக் கெடுவான்செய்யத் தக்கன ஆகிய செயல்களைச் செய்யாமையாலும் கெடுவான்" என்கின்றார் நாயனார்.

 

     பெரிய முயற்சியோடு கூடிச் செய்வதும்செய்தும் பயனில்லாமல் போவதும்முயற்சிக்குத் தக்க பலன் இல்லாமல் சிறிது பலன் கிடைப்பதும்அந்தச் சிறிய பயனும் முழுமையாகக் கிட்டாமல் போவதும்அவ்வாறு கிடைக்கும் சிறிய பயனை அனுபவிக்குங் காலத்து துன்பத்தை விளைப்பதும் ஆகிய செயல்களைச் செய்தல் கூடாது.

 

     சிறு முயற்சியால் பலன் அடைவதும்அதனுடைய பயன் பெரிதாய் இருப்பதும்ஐயமில்லாமல் பயனைத் தருவதும்இன்பத்தையே தருவதும் ஆகிய செயல்களைச் செய்யாமல் விடுவது கூடாது.

 

திருக்குறளைக் காண்போம்.... 

 

செய்தக்க அல்ல செயக் கெடும்செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.                

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      செய்தக்க அல்ல செயக் கெடும் --- அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும்

 

     செய்தக்க செய்யாமையானும் கெடும்--- இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.

 

     (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும்,செய்தால் பயனில்லனவும்அது சிறிதாயினவும் ஐயமாயினவும்பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவுஆண்மைபெருமைஎன்னும் மூவகை ஆற்றலுள் பொருள்படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான்இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்துஒழிவன ஒழிகஎன இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)

 

     

     பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.

 

நெடிது பற்பகல் செல்லினும், நிரம்புவது ஒன்றை

இடைவிடாமலே முயன்று பெற்றிடுகின்றது இயற்கை;

உடல் வருந்தியும் தங்களால் முடிவுறா ஒன்றை

முடியும் ஈது எனக் கொள்வது கயவர்தம் முறையே.

                                             --- கந்தபுராணம்பானுகோபன் வதைபடலம். 

இதன் பொருள் ---

     நீண்ட காலம் சென்றாலும் முடியக் கூடிய செயல் ஒன்றைஇடைவிடாமல் முயன்று முடித்துப் பயனைப் பெற்றிடுவது இயல்பு ஆகும். உடலை வருத்திச் செய்தாலும்முடிக்க முடியாத ஒரு செயலைஇது நம்மால் முடியும் என்று முயல்வது கயவரின் வழக்கமாகும்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...