049. காலம் அறிதல் --- 07. பொள்ளென ஆங்கே

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 49 -- காலம் அறிதல்

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "தகுதி மிக்க சான்றோர்தனது பகைவர் மீது உடனே சினம் கொள்ளமாட்டார். தக்க காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் புழுங்கிக் கொண்டு இருப்பர்" என்கின்றார் நாயனார்.

 

     பகைவர் மிகை செய்த காலத்திலேயேஅவர் அறியும்படி கோபிக்கப் புகுந்தால்அக் கோபத்தை உணர்ந்த பகைவர்,தமக்கு ஒரு கேடும் நேராவண்ணம் தம்மைக் காத்துக் கொள்ளும் வழியைத் தேடுவார். அறிவுடைய ஒருவன் தனது கோபத்தை வெளிக் காட்டாமல் இருந்தால்தமக்குப் பதில் செய்யமாட்டார் போலும் என்றுர மகைவரு அமைதி கொள்வர். தக்க காலம் பார்த்துதனது சினத்தைக் காட்டவேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

 

பொள்என ஆங்கே புறம் வேரார்காலம் பார்த்து

உள் வேர்ப்பர்ஒள்ளி யவர்.                    

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஒள்ளியவர்--- அறிவுடைய அரசர்

 

     ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார்--- பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார்

 

     காலம் பார்த்து உள் வேர்ப்பர்--- தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.

 

     ('பொள்ளெனஎன்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார்அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்என்றும் கூறினார்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

எல்லாம் இமைப்பில் அழிப்பாரும் நீட்டித்தார்,

வல்லார் புரம் எரிக்க வந்துழியும்,---  ஒல்லாரைப்

பொள்என ஆங்கே புறம் வேரார்காலம் பார்த்து

உள் வேர்ப்பர் ஒள்ளி யவர்.

 

         எல்லாம் இமைப்பில் அழிப்பார் --- கண் இமைக்கும் காலத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் பேராற்றல் உடைய சிவபெருமான். வல்லார் புரம் எரிக்க வந்துழியும் --- பிரமன்திருமால் முதலானோர் முப்புரங்களை எரித்தொழிக்க வேண்டி வந்தபோதும். ஒல்லார் --- பகைவர். 

 

சிவபெருமான் முப்புரங்களை எரித்த வரலாறு

 

         தாரகாக்ஷன்கமலாக்ஷன்வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வான்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காருமின்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்னமூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” எனமலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக் கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்எனதானவர் பொன்வெள்ளி இரும்பினாலமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமிஅந்தரம்சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரமீந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

 

         தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய்மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும்அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாகபல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும்உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர்இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுராதிகளிடம் தோல்வியுற்று மிகவும் களைத்துசிவபரஞ்சுடரே கதியென்று எண்ணி,தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவஞ் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற,விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரியகண்ணுதற் கடவுள், “அவர்கள் நமதடியாராதலின்அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

 

         திருமால் தேவர்களே அஞ்சாதீர்களென்று புத்த வடிவு கொண்டுநாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரமடைந்து பிடகாகமம்பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையிலகப்படாதார் மூவரேயாதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து நீங்கள் அம்மூவர்களையும் பாராதொழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறிநாரதருடன் மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து அமரற்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” எனநந்தி யண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

 

         மந்தரகேசரி மலைகள் அச்சாகவும்சந்திர சூரியர் சக்கரங்களாகவும்இருதுக்கள் சந்திகளாகவும்பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும்உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும்நதிகளும்நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும்நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும்மோட்ச லோகம் மேல் விரிவாகவும்மகங்கள் சட்டமாகவும்நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும்அட்டப்பருவதங்கள் தூண்களாகவும்எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும்ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும்ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும்கலைகள் முனைகளாகவும்புராணம் வேதாங்கம்சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும்மருத்துகள் படிகளாகவும்அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்துசதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும்துப்புரு நாரதர் இசை பாடவும்அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும்நாகராஜன் நாணியாகவும்பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும்சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும்அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும்வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும்ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

 

 

     நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூறஇறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் தமது திருவடியை ஊன்றஅதன் அச்சு முறிந்தது.

 

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்

அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற

அழிந்தன முப்புரம் உந்தீபற        --- திருவாசகம்.

 

     உடனே நாராயணர் இடபமாகஅவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாக்குஞ் சக்தியற்றுத் தரைமேல்விழசிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.

 

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே

இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,

தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. --- திருவாசகம்.

 

     விரிஞ்சன் விநாயக பூசனை புரியஅவரருளால் இரதம் முன்போல் ஆகசிவபெருமான் தேவியாருடன் தேர் மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார்இளையபிள்ளையார்நாராயணர்நான்முகன்அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும்இருடிகள் எழுவரும் வாழ்த்தவும்திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன்வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியமிசைக்கவும்கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.

 

         அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் தேவர்கள் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும்தனக்கோர் ஆயுதமெனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும்சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால் வந்து பணியநீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளிதேவர்களை அரவரிடத்திற்கனுப்பி வெள்ளிமாமலைக் கெழுந்தருளினார். இமையவர் இடுக்கணகன்று இன்புற்றனர்.

 

சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்

  திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்     --- அப்பர்

 

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

   உளைந்தன முப்புரம் உந்தீபற

   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.        --- மணிவாசகர்.

 

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்

ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,

ஒன்றும் பெருமிகை உந்தீபற.          --- மணிவாசகர்.

 

பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

 

நேர்த்து நிகர் அல்லார் நீர்அல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோர்,- ஓர்த்து அதனை

உள்ளத்தான் உள்ளி,உரைத்து உராய் ஊர்கேட்பத்

துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நேர்த்து நிகர் அல்லார் --- சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டுநீரல்ல சொல்லியக்கால் --- தகைமையல்லாத சொற்களைச் சொன்னால்வேர்த்து வெகுளார் விழுமியோர் --- சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ள மாட்டார்கள்ஆனால் கீழ் --- கீழ்மக்கள்ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி --- ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்துஉரைத்து உராய் ஊர் கேட்ப --- ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்துதுள்ளித் தூண் முட்டும் --- அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள்.

 

         தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...