அருளாளர்கள் பாடல்களின் உண்மை

 



அருளாளர்கள் பாடல்களால் அறிய வேண்டிய உண்மை

-----

 

     சிவபெருமானுடைய நெற்றிக்கண் மன்மதனை எரித்த ஞானக்கண். அந்த ஞானக்கண்ணினின்றும் மெய்ஞ்ஞான சோதியாக வெளிப்பட்ட ஞானபண்டிதன்முருகப் பெருமானின்திருவருளைப் பெற்ற அடியார்கள் நோக்கும் திசையிலும் பெண் மயக்கம் வாராது. 

 

     அருணகிரிநாதர் முருகவேளின் முழுக் கருணை பெற்ற ஜீவன் முத்தர். இறைவன்  அருள்பெற்ற பின்னரும் பெண்மயக்கம் வந்து சூழுமோநிச்சயமாகச் சூழாது. அவருடைய கந்தர் அலங்காரத் திருப்பாடலைக் காண்க.

 

"கடத்தில் குறத்தி பிரான் அருளால்,கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன்சித்ர மாதர்அல்குல்

படத்தில்கழுத்தில்பழுத்த செவ்வாயில்பணையில்உந்தித்

தடத்தில்தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே".

 

இதன் பொருள் ---

 

     அழகிய பெண்களுடைய பாம்பின் படம் போன்ற குறியிலும்கழுத்திலும்சிவந்த வாயிலும்மூங்கில் போன்ற தோள்களிலும்,உந்திச் சுழி ஆகிய குளத்திலும் கிடந்து மகிழ்கின்ற வெப்பம் பொருந்தியதும்கொடியதுமான காமம் என்னும் கடலைகுறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற வள்ளிப்பிராட்டியின் மணவாளர் ஆகிய கந்தவேளின் திருவருளால்சிறிதும் கலக்கம் அடையாத உள்ளத்தின் உறுதியைத் தெப்பமாகக் கொண்டு அடியேன் தாண்டிக் கரை ஏறினேன்.

 

     "மகமாயை களைந்திட வல்ல பிரான்" ஆகிய முருகவேளின் திருவருளால் அல்லாமல்காமவேளால் உண்டாகும் காமக் கடலைக் கடக்க முடியாது. காசிபர்விசுவாமித்திரர் முதலான இருடிகளும் அதில் வாழ்ந்து துன்பத்தை அனுபவித்தனர். அருணகிரிநாதப் பெருமான்காமக் கடலை கல்விப் பெருக்காலும்செல்வச் செருக்காலும்யோம முதிர்ச்சியினாலும் கடப்பது அரிது என்பதையும்காமனையும் எரித்த கண்ணுதற் பரம்பொருளிடத்து இருந்து வெளிப்பட்ட கந்தவேளை வழிபடுவதுன் மூலமே எளிதில் கடக்க முடியும் என்பதை உணர்த்தப் பல பாடல்களை ஓதி உள்ளார். "சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய்" என்றார் கந்தர் அனுபூதியில். "மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம்உன்தனை நினைத்து அமைய அருள்வாயே" என்றார் திருப்புகழில்.

 

     காமத் தீ மிகவும் கொடியது. அது உடம்பையும் உணர்வையும் சுட்டு எரிக்கும். தீயினால் வெதும்பியவர்கள்நீரில் மூழ்கி குளிர்ச்சி பெறலாம். காமத் தீயில் வெதும்பியவர்கள் நீரில் குளித்தாலும் சுடும். தீயானது தொட்டால் மட்டுமே சுடும். காமத் தீயானது விட்டால் சுடும்.

 

"தொடில் சுடின் அல்லதுகாமநோய் போல

விடில்சுடல் ஆற்றுமோ தீ"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     தீயானது விலகி இருந்தால் சுடாது. நெருங்கினால் மட்டுமே சுடும். காமத் தீயானது நெருங்கினால் குளிரும். நீங்கினால் சுடும். எனவே,காமத் தீயானது மிக அற்புதமானதொரு நெருப்பு ஆகும்.

 

"நீங்கின் தெறூஉம்,குறுகும்கால் தண் என்னும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருள் குளித்தும் உயல் ஆகும்; - நீருள்

குளிப்பினும் காமம் சுடுமேகுன்று ஏறி

ஒளிப்பினும் காமம் சுடும்".        --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஊருக்கு உள்ளே தீயானது பற்றிக் கொண்டால்அதில் இருந்து தப்பிக்கஅருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்றுஅதில் மூழ்கித் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால்தண்ணீருக்குள் அமிழ்ந்தாலும் காமத் தீயானது அணையாது. மலைமேல் ஏறிச் சென்று அங்குள்ள குகைக்குள் ஒறிந்து கொண்டாலும் காமத் தீயானது அடங்காமல் சுடும்.

 

     காமத்தால் விளையும் கேடுகளைக் குறித்துப் பலவகையாக நமது அருளாளர்கள் காடி வைத்து உள்ளனர்.

 

"தீமை உள்ளன யாவையும் தந்திடும்சிறப்பும்

தோம்இல் செல்வமும் கெடுக்கும்நல் உணர்வினைத்  தொலைக்கும்,

ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும்இதனால்

காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்".           ---  கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஆராய்ந்து அறிந்தால்தீமைகள் என்று எவை எவை உள்ளனவோஅவை அனைத்தையும் தருவதும்உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும்குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும்நல்ல உணர்வுகைள அழிப்பதும்உயிர்களை,பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்துநரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதாஇல்லை. 

 

 

"ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும்

காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின்,

வாட்டம்இல் புந்தியால் மற்று அந் நோயினை

வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார்".         --- கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     உயிரானது எடுத்து வந்த பலப்பல பிறவிகளையும்அப் பிறவிகள் தோறும் ஈட்டிய வினைகளையும் தருவதற்குக் காரணமாக அமைந்தது காமமே ஆகும். ஆகையால்அதனை மாற்றிவீட்டின்பத்தை விரும்புவோர்மெலிவில்லாத தெளிந்த தமது அறிவினால்அத் துன்பத்தை அறுத்தவர்களே.

 

"கட்டும் வீடு அதன் காரணத்தது

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை,

யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்

காமம் வெகுளி மயக்கம் காரணம்"....           ---  மணிமேகலை.            

 

இதன் பதவுரை ---

 

     கட்டும் வீடும் --- கட்டும் வீடுமாகிய இரண்டினையும் அதன் காரணத்ததும் --- ஒவ்வொன்றன் காரணத்தினையும் ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை --- கூடியிருந்து பெறுவித்தற்கு உரியவர் பிறர் யாருமில்லை யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் --- யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்கள் எல்லாவற்றிற்கும்காமம் வெகுளி மயக்கம் காரணம் --- காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம். 

 

"தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின்கடுங் கேடு எனும்

நாமம் இல்லைநரகமும் இல்லையே".    --- கம்பராமாயணம்மந்தரை சூழ்ச்சிப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     புவிக்கு --- இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை விளைக்கத் தோன்றுகின்ற);  தூமகேது என --- வால் நட்சத்திரம் என்று சொல்லும்படிதோன்றிய --- பிறந்துள்ள,வாம மேகலை மங்கையரால் --- அழகியமேகலாபரணம் அணிந்த பெண்களால்வரும் --- உண்டாகின்றகாமம்இல்லை எனின் --- காம நோய்மட்டும் இல்லையானால்;  கடும் --- கொடிய;  கேடு எனும் நாமம் இல்லை --- கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்;  நரகமும் இல்லையே --- நரகத் துன்பமும் இல்லை.

 

     பெருங்கேடு விளைதற்கு உற்பாதம் தூமகேது. அதுபோல மங்கையரும்கேடு விளைப்பர் என்றவாறாம். காமம் கேட்டிற்கும் நரகிற்கும் வாயில்என்றார். காமத்தால் வருவன நேரே பகையல்ல. ஆயினும்,ஆக்கம் சிதைத்தல்அழிவைத் தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒத்தலின் காமம் என்பது பகையே ஆகும்என்றுதிருக்குறள் பெண்வழிச் சேறல்அதிகாரமுகவுரையில் கூறினார் பரிமேலழகர்.

 

"மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,

தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,

ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,

உய்ந்து போயினர்ஊழி நின்று எண்ணினும் உலவார்".  --- கம்பராமாயணம்,மந்திரப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     மைந்த --- மகனே! நம்குல மரபினில் மணிமுடி வேந்தர் --- நமது சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள்;தம் தம்மக்களே --- தம் தம் பிள்ளைகளே ;  கடன்முறை நெடு நிலம் தாங்க --- முறைப்படி நெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்றஐந்தொடு ஆகிய முப்பகை --- ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்;மருங்கு அற அகற்றி --- வேரோடு நீக்கிஉய்ந்து போயினர் --- பிழைத்துப் போனார்கள்;  ஊழிநின்று எண்ணினும் --- அவ்வாறு உய்ந்தவர்களை ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும்;  உலவார் --- குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)

 

     ஐந்தொடு ஆகிய முப்பகை --- ஐம்பொறிகளாகிய மெய்வாய்கண்,மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம்வெகுளிமயக்கம் என்னும் பகைகள். 

 

 

"கொடு நாலொடு இரண்டு குலப்பகை குற்றம் மூன்றும்

சுடுஞானம் வெளிப்பட உய்ந்த துய்க்கு இலார்போல்

விடநாகம் முழைத்தலை விம்மல் உழந்து,வீங்கி,

நெடுநாள்,பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப"  --- கம்பராமாயணம்கடல்தாவு படலம்.

 

இதன் பதவுரை ---

 

     நாலொடு இரண்டு கொடும் குலப் பகை --- காமம் முதலாகச் சொல்லப்படும் ஆறு வகையான கொடிய,பரம்பரையாக வரும் பகையையும்குற்றம் மூன்றும் --- மூன்று குற்றத்தையும்;சுடுஞானம் --- அழிக்கின்ற ஞானமானதுவெளிப்பட --- ஆன்மாவிலே தோன்றஉய்ந்த துய்க்கு இலார் போல் --- தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போலமுழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து --- மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி;  வீங்கி பொறையுற்ற --- உடல் பருத்து அடங்கிக் கிடந்தவிடநாகம் --- விடப் பாம்புகள்உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப --- பெருமூச்சு வெளிப்பட்டு நிலைக்க;

 

     மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையானபகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு --- காமம்வெகுளிகடும்பற்றுள்ளம்மானம்உவகை,மதம் (காமக் குரோத போல மாக மத மாச்சரியம்) என்பவை. முக்குற்றம் --- ஐயம்திரிபுஅறியாமை. 

 

            (ஐயம் --- இதுவா அதுவா என்று சந்தேகப்படுதல். திரிபு -- ஒன்றை வேறு ஒன்றாக உணர்தல். அறியாமை --- தெளிந்த அறிவின்மை.)

 

"கொலை அஞ்சார்பொய்ந் நாணார்மானமும் ஓம்பார்,

களவு ஒன்றோஏனையவும் செய்வார் - பழியோடு

பாவம் இஃது என்னார்பிறிது மற்று என்செய்யார்,

காமம் கதுவப்பட்டார்".                --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     காமத்தால் பற்றப்பட்டவர்கள்கொலைபுரியப் பயப்படார்பொய் சொல்லக் கூசார்தம் பெருமையையும் பாதுகாவார்களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இந்தக் காமம்பழியொடு பாவமாம் என்றும் நினையார்அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான் செய்யமாட்டார்எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார். 

 

அணங்குநோய் எவர்க்குஞ் செய்யும்

            அனங்கனால் அலைப்புண்டுஆவி

உணங்கினார் உள்ளம் செல்லும்

            இடன் அறிந்து ஓடிச் செல்லா

குணம் குலன் ஒழுக்கம் குன்றல்,

            கொலைபழி பாவம் பாரா,

இணங்கும் இன்னுயிர்க்கும் ஆங்கே

            இறுதி வந்து உறுவது எண்ணா".       ---  தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால் அலைப்புண்டு --- யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டுஆவி உணங்கினார் உள்ளம் --- உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள்செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா --- செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேராகுணம் குலன் ஒழுக்கம் குன்றல் --- குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும்கொலை பழி பாவம் --- கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும்பாரா --- பார்க்கமாட்டாஇணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா --- பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும் எண்ணமாட்டா.

 

 

"கள் உண்டல் காமம் என்ப

            கருத்து அறை போக்குச் செய்வ,

எள் உண்ட காமம் போல

            எண்ணினில் காணில் கேட்கில்

தள்ளுண்ட விடத்தின் நஞ்சந்

            தலைக்கொண்டால் என்ன ஆங்கே

உள் உண்ட வுணர்வு போக்காது

            உண்டபோது அழிக்கும் கள்ளூண்".     ---  தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ --- கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வனகள் ஊண் --- (அவற்றுட்) கள்ளுணவானதுஎள்ளுண்ட காமம் போல --- இகழப்பட்ட காமத்தைப் போலஎண்ணினில் காணில் கேட்கில் தள்ளுண்ட இடத்தில் --- எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற இடத்தினும்நஞ்சம் தலைக் கொண்டால் என்ன --- நஞ்சு தலைக்கேறியது போலஆங்கே --- அப்பொழுதேஉள் உண்ட உணர்வு போக்காது --- உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காதுஉண்ட போது அழிக்கும் --- உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

 

    கள்ளுண்டலும் காமமும் உணர்வினை இழப்பித்தலால் ஒக்கும்எனினும்கள் ஊண் என்பது காமம் போல உணர்வு போக்காது,உண்டபோது அழிக்கும்.

 

          

"காமமே கொலை கட்கு எல்லாம் 

     காரணம்;கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம் 

     காரணம்கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டற்கும் 

     காரணம்ஆதலாலே

காமமே நரக பூமி 

     காணியாக் கொடுப்பது என்றான்".     ---  தி.வி.புராணம்மாபாதகம் தீர்த்த படலம்.

 

இதன் பதவுரை ---

 

     காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் --- காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாயுள்ளதுகண்ணோடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் --- கண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் --- கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்ஆதலாலேகாமமே நரகபூமி காணியாக் கொடுப்பது என்றான் --- ஆதலினாலேகாமமொன்றே (அவையனைத்தாலு நேரும்) நரக பூமியைக்காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

 

     இத்தகு கொடுமை வாய்ந்த "காமக்கடலைக் கடந்தேன்" என்று கூறிய அருணகிரிநாதர்எனக்குப் பெண் மயல் தீரவில்லை எனக் கூறுவாரோஅப்படிக் கூற என்ன நியாயம்அருள் மயமான அவரைக் காமம் வாட்டவல்லதாகுமாஅப்படி வாட்டினால்இறைவன் திருவருள் வல்லமை அற்றதாஎன்று எண்ணத் தோன்றும்.

 

     திருவருள் பெறுமுன் பெண் மயலால் வாடுவது பொருந்தும். அருள் பெற்றார்க்கு அது பொருந்தாது. அப்படியாயின்மேலே கண்ட பாடலின் உட்கிடை யாது?

 

     ஆன்றோர்களது பாடலில் உள்ள கருத்துக்களை அதன் நுட்பம் தெரியாதுஅகச் சான்று எனக் கொண்டுஅல்லல் படக்கூடாது. அப்படிக் கூறுவது பெரும் பாவமாகும்.

 

"பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன்"....

 

"பொய்எல்லாம் மெய்என்று புணர்முலையார் போகத்தே

மையல் உறக் கடவேனை".....

 

"வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது

மங்கையர் தம்மோடும்

பிணைந்து வாய்இதழ்ப் பெருவெள்ளத்து அழுந்திநான்

பித்தனாய்த் திரிவேனை"....

 

என்று நமது சமயகுரவராம் மணிவாசகனார் கூறுவாரெனின்அத்துணையும் அவர்மேல் ஏற்றிக் கூறுதல் பொருந்துமோ?

 

"குலம்பொல்லேன்குணம்பொல்லேன்,

குறியும் பொல்லேன்,

குற்றமே பெரிது உடையேன்".....

 

என்று எங்கள் மற்றொரு சமய குரவராம் அப்பரடிகள் கூறுவாரெனின்அப்பரடிகள் இழிகுலத்திலே பிறந்தவர் தானா?  குணம் பொல்லாதவரோஅப்படி எண்ணினாலும் நரகம் வாய்க்கும். 

 

     நமது மணிவாசகர்அப்பர்அருணகிரிநாதர் முதலிய அருளாளர்கள் தாம் கூறிய தீமைகள் அனைத்தும் அப்பிறப்பிலேயே செய்தவை என்று கொள்ளக் கூடாது. ஆன்மா பல பிறவிகளை எடுத்து வருகின்றது அல்லவாமுன்னைப் பிறப்புக்களின் நினைவு அவர்கள் தீர்க்கதரிசிகளாதலின்அவர்கட்கு வந்து சேரும். எனவேபல்லாயிரம் பிறப்புக்களில் செய்தவைகளைப் பற்றிஇப்பிறப்பில் கூறுகின்றனர் என்றுதான் அறிதல் வேண்டும். இதுதான் இதற்கு விடை.

 

     இவ்வாறு உணராதார் ஆன்றோர் மீது நலம் அல்லாதனவற்றை நவின்று நலம் அழிவர். "விடக்கு அன்பாய் நுகர் பாழனை" என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதனால்,அவர் புலால் உண்டார் என்றும், "வெறிதரும் புனல் உணும்" என்றதனால்அவர் மதுபானம் அருந்தினார் என்றும் எழுதியும் இயம்பியும் சிலர் இடர்ப்படுகின்றனர்.

 

     எனவேஇவ்வாறு ஆன்றோர்களது அருள்வாக்கை நுனித்து உணராதுமனம் போனவாறு எல்லாம் உரை செய்து உலகிற்குத் தீங்கு செய்யக் கூடாது.

 

     முருகனருள் பெறாத முற்பிறப்புக்களிலே அருணகிரிநாதர்ஓதி உணர்ந்தும்துறவு பெற்றும்யோகம் புரிந்தும்மாதர் மயல் அறப் பெறாது தவித்திருப்பர். அறுமுகன் அருள் பெறாதார்க்கு அங்ஙனம் நேருதல் உண்டு.

 

     பல்லாயிரம் ஆண்டுகள் மனமடக்கி மாதவம் புரிந்த விசுவாமித்திரர் மேனகையைக் கண்டவுடன் தடுமாறியதும்,  பராசரர் நதியின் இக்கரையில் இருந்து அக்கரை போவதற்குள் மச்சகந்தியைக் கண்டு மயங்கியதும்காசிபர் மாயையைக் கண்டு மனம் கலங்கியதும்இன்னும் பல இருடியர் இடர்ப்பட்டதும் நாம் நூல்கள் மூலம் காண்கின்றோம்.

 

     ஆனால்பரம்பொருளின் அருள்பெற்ற அப்பர் பெருமானிடம் வந்த அரம்பையர்கள் நாணிச் சென்றனர்.ஆதலின்அருள் வசப்பட்ட அடியார்கட்குப் பெண்மயல் பிடியாது என்பது உறுதி. பெண்மயலை ஒழிப்பதற்குஇறைவன் திருவருளே உற்ற துணை ஆகும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...