ஆதிமூலம் எது?

 


ஆதிமூலம் எது?

----

 

     "ஆதிமூலம்" என்னும் சொல்லுக்குமுதற்காரணம் ஆன பொருள் என்று பொருள்.

 

     "ஆதி" என்னும் சொல்லுக்கு தொடக்கம்தொடக்கம் உள்ளது. காரணப் பொருள். பழமைஇறைவன் என்று பொருள்.

 

     தொடக்கமும் முடிவும் இல்லாத பரம்பொருளை, "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி" என்றார் மணிவாசகப் பெருமான். தொடக்கமும் முடிவும் இல்லாதுஎப்பொருட்கும் முதற்காரணமாய் அமைந்தது. "ஆதி அநாதியாம் அருட்பெருஞ்சோதி" என்பார் வள்ளல்பெருமான்.

 

     உருவமும்நாமும் இல்லாத பரம்பொருள் உயிர்கள் வழிபட்டு உய்வதற்கு எளிதாகஅவர்கள் கருதுகின்ற வடிவத்தில் எழுந்தருளும் வல்லமை பெற்றது. 

 

     எப்படி எழுந்தருள் புரிந்ததுஎப்படி எழுந்தருள் புரிகின்றதுஎப்படி எழுந்தருள் புரியும்என்பதைமணிவாசகப் பெருமான் அருளிச் செய்கின்றார். அந்த ஒப்பற்ற ஆதிமுதற் பரம்பொருளின் திருவடிகள் எப்படிப்பட்டவை?

 

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ

ஈரடி யாலே மூவுலகு அளந்து

நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று,

டிமுடி அறியும் ஆதரவு அதனில்

கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்து,

ஏழ்தலம் உருவ இடந்து,பின் எய்த்து,

"ஊழி முதல்வ! சயசய" என்று

வழுத்தியும் காணா மலரடி இணைகள்"   --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     நான்முகன் முதலா --- பிரமன் முதலாகவானவர் தொழுது எழ --- தேவர்கள் யாவரும் தொழுது எழுந்து வழிபட்டு நிற்க,ஈர் அடியாலே --- தனது இரண்டு திருவடிகளாலேமூ உலகு அளந்து --- மூன்று உலகங்களையும் அளந்துநால்திசை முனிவரும் --- நான்கு திக்கிலுள்ள முனிவர்களும்ஐம்புலன் மலர --- தமது ஐம்புலன்களும் மகிழும்படிபோற்றி செய் --- வணங்குகின்றகதிர்முடித் திருநெடுமால் --- ஒளி பொருந்திய திருமுடியை உடையஅழகிய நெடுமால் (திரிவிக்கிரமன்)அன்று --- அந்நாளில்அடிமுடி அறியும் --- சிவபரம்பொளின் திருவடியின் முடிவை அறிய வேண்டும் என்கிறஆதரவு அதனில் --- விருப்பத்தால்கடுமுரண் ஏனம் ஆகி --- வேகமும் வலிவுமுள்ள பன்றியாக வடிவெடுத்துமுன் கலந்து --- முன் வந்துஏழ்தலம் உருவ இடந்து --- ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்றுபின் எய்த்து --- பின்னே இளைத்துஊழி முதல்வ --- ஊழியை நடத்தும் முதல்வனேசயசய என்று --- வெல்க வெல்க என்றுவழுத்தியும் --- துதித்தும்காணா மலர் அடி இணைகள் --- காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள்.

 

     மாவலி என்னும் அசுரன் ஒரு பெரிய வேள்வியை இயற்றினான்அதனால் வேண்டுவோர்க்கு வேண்டுவதை ஈயும் வள்ளல் ஆனான்அதன் பயனால் அவன் வலுப்பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்துவான் என்று அஞ்சிஅவனது வலிமையைப் போக்குமாறுபிரமன் முதலாக உள்ள வானவர்கள் அனைவரும் திருமாலை வேண்டினார்கள். திருமாலும் ஒரு குறள் (வாமன) வடிவம் கொண்டுமாவலியிடம் சென்றுமூன்றடி மண் வேண்டினார். அவன் மூன்று அடி மண்ணைத் தர இசையவேதிருமால் தம் இரண்டு அடிகளாலும் மண் காற்று விண் ஆகிய மூன்று உலகங்களையும் அளந்துமாவலியின் வலிமையைப் போக்கிப் பாதலாத்தில் சிறைவைத்தார் என்பது வரலாறு. இவ்வாறு மாவலியின் செருக்கினைத் திருமால் அழித்தமையால்நான்முகன் முதலான வானவர் அனைவரும்,முனிவரும் திருமாலைத் தொழுது வணங்கினர்.

 

     அப்படிப்பட்ட திருநெடுமாலும் கூபன்றி வடிவெடுத்துச் சென்றுஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதிப் பொருளானசிவபரம்பொருளின் திருவடியைக் காண முடியாமல் இளைத்துப் போனான். அந்த சிவபரம்பொருள்தான்தன்னை உயிர்கள் வழிபட்டு உய்யவேண்டிஅவைகளுக்கு உடம்பைப் படைத்துக் கொடுக்கின்றது. உயிர்கள் விரும்புகின்ற வடிவத்திலும் எழுந்தருள் புரிகின்றது.

 

     அவ்வாறு அவரவர் விரும்புகின்ற வடிவத்தில் எழுந்தருள் புரிவதால்தமது அறிவைக் கொண்டு,அவரவர் சமயங்களைக் கற்பித்துக் கொண்டனர். தமது கடவுளருக்கு வடிவத்தையும் கற்பித்துக் கொண்டனர். அவையும் அந்தப் பரம்பொருளுக்கு ஏற்புடையவையே. "விரிவிலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்துஎரிவினால் சொன்னாரேனும்எம்பிராற்கு  ஏற்றது ஆகும்" என்றார் அப்பர் பெருமான். பேதம் கற்பித்துப் பிணங்குவது மனிதன் மட்டும்தான். காரணம்அவனது அறிவு சிற்றறிவு. அறிவித்தால் மட்டுமே அறிந்து கொள்ளும் அறிவு. அறிந்ததைக் கொண்டே தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளும் ஆணவம் மிக்க அறிவு.

 

     அந்த வகையில்திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள்அத் திருமால்உயிர்களைப் படைக்க பிரமனைப் படைத்ததுஉயிர்களை ஒடுக்க சிவனைப் படைத்தது என்று கொண்டாடுவார்கள். பிற சமயத்தவரும் அப்படியே. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால்உண்மையைத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும்.

 

     உண்மையில் அழிக்கத் தெரிந்தவருக்குத் தான்ஒன்றை ஆக்கவும்பராமரிக்கவும் தெரியும். அந்த வகையில் பார்த்தால்படைத்தல் தொழில் புரியும் பிரமதேவனுக்கும்காத்தல் தொழில் புரியும் திருமாலுக்கும்அழித்தல் தொழிலைப் புரியும் உருத்திரனுக்கும் மேலான பரம்பொருள் ஒன்று உண்டு என்பது தெளிவாகும். "முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,மூவரும் அறிகிலர்,யாவர் மற்று அறிவார்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதைச் சிந்தித்தால் இந்த உண்மை விளங்கும்.

 

     "அருட்பெருஞ்சோதி அகவல்" என்னும் திருவருட்பாப் பகுதியில்வள்ளல்பெருமான் இதை மேலும் விரித்துக் காட்டி அருளி உள்ளார். பரம்பொருள் என்பது "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி" என்றார் மணிவாசகப் பெருமான். அதுவே மெய்ப்பொருள் ஆகும்.

 

"எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்

அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி"                                        

 

     மெய்யுணர்வுடைய சான்றோர் எதனை மெய்ப்பொருள் என்று சொல்லுகின்றார்களோ அந்த மெய்ப்பொருளே ஆவது அருட் பெருஞ்சோதி ஆகும்.

 

     பொருள்கள் எத்தன்மை உடயவையாக இருந்தாலும்,அவற்றை யார் சொன்னாலும்பொருள்களின் மெய்ம்மை காண்பது மெய்யுணர்வு என்பார் திருவள்ளுவ நாயனார். அப்பெருமக்களால் கண்டறிந்து சொல்லப்படும் மெய்ப்பொருள் யாதோ அதுவே அருட்பெருஞ்சோதி என இதனால் விளக்குகின்றார் வடலூர் வள்ளல்.

 

"முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்

ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி"                                        

 

     முற்பட்டு நிற்கின்ற படைத்தல் முதலிய ஐந்து தொழில்களுக்குரிய பிரமன் முதலிய மூர்த்திகள் அனைவருக்கும் படைத்தல் முதலிய தொழில் ஐந்தையும் அளித்துஅவரைச் செயலாற்றுவிப்பதுஅருட்பெருஞ்சோதி ஆகும்.

 

     "விண் முதல் பூதலம்,ஒன்றிய இருசுடர்,உம்பர்கள் பிறவும்படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை"என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளியிருத்தல் காண்க.

 

     அந்த அருட்பெருஞ்சோதிப் பரம்பொருளே பிரமன் முதலான தேவர்களைப் படைத்துஅவர்களுக்குத் தொழிலை வழங்குகின்றது என்பதை வள்ளல்பெருமான் பின்வருமாறு காட்டினார்.

 

"சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை

அருள்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     படைத்தல் தொழிலுக்குரிய பிரமர்களாகிய தலைவர்களைக் கொண்டு படைத்தற்கு உரிய அண்டங்கள் பலவற்றையும் தனது அருட்சத்தியால் படைத்து அருளுவது அருட்பெருஞ்சோதி. 

 

"காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை

ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     படைக்கப்பட்ட அண்டங்களைக் காத்தாளும் தலைவர்களாகிய நாராயணர்களைக் காத்தற்கு உரிய அண்டங்களை இனிது இயங்குமாறு அமைத்து அருளுவது அருட்பெருஞ்சோதி.

 

"அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை

அழுக்கு அற அமைத்த அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     காக்கப்படும் அண்டங்களை ஒடுக்குதலைச் செய்யும் தலைவர்களாகிய உருத்திரர்களைத் தத்தம் அண்டங்களை மலப் பிணிப்பு நீங்கும்பொருட்டு ஒடுக்கம் செய்து அருளுவது அருட்பெருஞ்சோதி.

 

"மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை

அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     மறைத்தல் தொழிலைச் (திரோபவத்தைச்) செய்யும் திரோபவ மூர்த்திகளை அண்டங்களில் வாழும் உயிர்களை மறைத்துப் போகம் நுகருமாறு பண்ணுற்கு அமைத்தருளுவது அருட்பெருஞ்சோதி.

 

"தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை

அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     பலப்பல அண்டங்களில் வாழும் ஆன்மாக்கட்குப் போக நுகர்ச்சியின் முடிவில் ஞானம் பெறுவிக்கும் ஞானமூர்த்திகளை அவ்வவ்வண்டத்தும் அருளால் அமைத்து அருளுவது அருட்பெருஞ்சோதி.

 

"படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை

அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி"  

                                        

     உலகுகளைப் படைக்கும் தேவர்கள் பற்பல கோடியாகப் பொருத்தம் உறப் படைத்து அருளுவது அருட்பெருஞ்சோதி. 

 

     நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தஎன்று மணிவாசகப் பெருமான் கூறும்உலகுகளைக் காலந்தோறும் படைக்கும் பிரமதேவர்களும் பலர்.

 

"காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி"                                         

 

     படைக்கும் தலைவர்களால் படைக்கப்பட்ட உலகங்களைக் காத்து ஆளுகின்ற தேவர்களான கணக்கில்லாத பலகோடி நாராயணர்களைத் தத்தம் தொழிலைச் செய்ய ஆக்கி அருளுவது அருட்பெருஞ்சோதி.

 

"அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்

அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     அவாறு காக்கப்பட்ட உலகங்களைக் காலம் அறிந்து ஒடுக்கும் உருத்திரர்கள் எண்ணற்ற பேர்களையும் நெருக்கம் இல்லாமல் ஒடுக்கி அருளுவது அருட்பெருஞ்சோதி. 

 

"மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை

அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     உயிர்கள் உலகியல் அனுபவம் பெறல் வேண்டிமறைத்து ஒழுகும் திரோபவத் தேவர்கள் எண்ணிறந்தோரை முறைப்படி நிறுத்திஅவர்களையும்மறைத்து அருளுவது அருட்பெருஞ்சோதி. 

 

"தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை

அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     திரோபவத்தால் உணர்வு மறைக்கப்பட்ட உயிர்கட்கு உணர்வு தந்து தெளிவிக்கும் பலகோடி அளவில் உள்ள அனுக்கிரகத் தேவர்களைத் தனது திருவருள் வகையால் தோற்றுவித்து அருளுவதும் அருட்பெருஞ்சோதி.

 

"ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை

ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ் ஜோதி"                                          

 

     இவ்வாறுபடைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்யும் பிரமன் முதலிய ஐவகைத் தேவர்களையும் தோற்றுவித்துஅவ்வைந்து தொழில்களையும் (பஞ்ச கிருத்தியங்களை) இனிது செய்வித்து அருளுவது அருட்பெருஞ்சோதி.

 

     இந்த வகையில் பார்த்தால்கஜேந்திரன் என்னும் யானையானது முதலையின் வாயில்பட்டுத் துன்புற்ற போது, "ஆதி மூலமே" என்று கதறி அழைத்ததுகாத்தல் தொழிலைச் செய்யும் திருமாலைக் குறித்து அல்ல. முழுமுதற் பரம்பொருளாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரையே ஆகும் என்பது உண்மை.

 

     இக் கருத்தை நிறுவுவதுமெய்கண்ட சாத்திங்களில் ஒன்றான, "சிவஞான சித்தியார் - பரபக்கம்" என்னும் நூல். பின்வரும் பாடல்களைக் காண்போம்....

 

"கைவரை மூல மேயோ

            எனக் கரிக்கு உதவும் காட்டின்

மொய்வரை எடுத்தான் மூலம்

            ஆயிட வேண்டு மோதான்?

ஐயனே! முறையோ?என்றால்,

            அரசனோ அங்குச் செல்வான்?

வையகம் காப்பான் செய்கை

            வழக்கு அன்றோ ஊர்காப்பான் போல். 

 

இதன் பொருள் ---

 

     முதலை வாயில் அகப்பட்ட யானை, "ஆதிமூலமே"என ஓலம் இட்டது. இதனைக் கேட்ட உடன் ஓடிச் சென்று,அதனுடைய துன்பத்தை அழித்துக் காத்தவர்காட்டில் மலையை எடுத்துத் தாங்கிபசுக்கூட்டங்களைக் காத்த திருமால் ஆவார். ஆதலால்அவரைத் தலைவன் ஆக்கிவிட வேண்டுமாதிருமால் தலைவன் அல்ல. ஒரு அரசனை நோக்கிஒருவன் கூப்பிட்டால்அரசன் அங்குச் செல்லமாட்டான். ஊர் காப்பவன்தான் செல்வான். அதுபோலஉலகத்தைச் சிவபரம்பொருளின் ஆணையால் காப்பவர் திருமால். ஆதிமூலமே என்று அழைத்தமைக்குஆதிமூலம் ஆகிய சிவபரம்பொருள் செல்லாதுஊர்க் காப்பான் போலகாத்தல் தொழிலைச் செய்பவர் ஆன திருமால் சென்றுமுதலையை அழித்துயானையைக் காத்தார்.

 

 "அன்றியும் ஆனை மாலுக்கு

     அடிமையாய் மூல மேயோ

என்றிடும் அதனால் மால்தான் 

     இறைவன் என்று இயம்ப வேண்டா,

உன்தனக்கு அடிமை ஆனார் 

     உன்னை எம்பெருமான் என்றால்,

இன்று நீ வணங்கும் உன்தன் 

     எம்பெரு மானோ நீயே.    

 

இதன் பொருள் ---

 

     மேலும் யானையானது திருமாலுக்கு அடிமையாய் ஆதிமூலமே என அழைத்தது என்று வைத்துக் கொண்டாலும்அதனாலேயே திருமால்தன் உலகத்திற்கு எல்லாம் தலைவன் என்று சொல்லலாமோஎன்றால்சொல்லுதல் கூடாது. உனக்கு அடிமையாக உள்ள ஒருவர்உன்னை "எம்பெருமானே" என்றால்நீ எல்லோரும் வணங்குகின்ற திருமால் ஆகிவிடுவாயோஆகமாட்டாய்.

 

     இது சமயபேதம் கற்பிப்பதற்காகச் சொல்லப்பட்டது அல்ல. சமய உண்மையைத் தெளிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது. 

 

      முதலமைச்சருக்கோதுறை அமைச்சருக்கோ அல்லது துறைத் தலைவருக்கோ அல்லது மாவட்ட ஆட்சியருக்கோஒரு முறையீடு செய்யப்படுகின்றது என்றால்அவை அனைத்தும் அவரவர்களுக்கு நேரடியாகச் செல்வதில்லை. அவருடைய அதிகாரம் பெற்றவர் அதனைக் கவனித்துத் தக்க ஆணையைப் பிறப்பிப்பார். அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்தாலும், "ஆளுநரின் ஆணைப்படி" "BY ORDER OF THE GOVERNOR" என்றுதான் வெளியாகும். ஆனால்அவை எவையும் ஆளுநரின் நேரடிப் பார்வைக்குச் செல்வத்தில்லை. சுற்றுக் குறிப்பில் அமைச்சரின் ஒப்பம் பெறப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டாலும்அமைச்சரின் ஆணைப்படி என்று எந்த ஆணையும் வெளியாவதில்லைஎன்பதை நினைவில் கொண்டால்,மேற்குறித்த உண்மை விளங்கும்.

 

     இது குறித்தே சமரச சுத்தசன்மார்க்கம் குறித்து அருளிய வள்ளல்பெருமான் பின்வருமாறு பாடி அருளினார் என்பதை ஓதி உணர்க.

 

"பெருகியபேர் அருளுடையார்அம்பலத்தே நடிக்கும்

     பெருந்தகைஎன் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்,

அருகர்புத்தர் ஆதிஎன்பேன்அயன்என்பேன்நாரா-

     யணன்என்பேன்அரன்என்பேன்ஆதிசிவன் என்பேன்,

பருகு சதாசிவம் என்பேன்சத்திசிவம் என்பேன்,

     பரமம்என்பேன்பிரமம்என்பேன்பரப்பிரமம் என்பேன்,

துருவுசுத்தப் பிரமம்என்பேன்,துரியநிறைவு என்பேன்,

     சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே".

 

இதன் பொருள் ---

 

     தோழி! மிக்க பெரும் அருளுடையவரும் திருச்சிறம்பலம் என்னும் அறிவு வெளியிலை நடித்தருளும் பெருந்தகையும் எனக்குக் கணவருமாகிய சிவபெருமானுடைய திருப்பெயரைச் சொல்லுக என்று என்னைக் கேட்கின்றாய்நான் சொல்லுகின்றேன் கேட்பாயாகஅவர்க்கு அருகர் புத்தர் முதலியன திருப்பெயர் என்று சொல்லுவேன்அவர் பெயரை அயன் (பிரமன்) என்பது என்று உரைப்பேன்நாராயணன் என்று சொல்லுவேன்அரன் எனப் புகல்வேன்ஆதிசிவன் என்றும் கூறுவேன்ஞானமாய்ப் பருகப்படுகின்ற சிவம் என்றும் சத்திசிவம் என்றும்பரமம் என்றும்பிரமம் என்றும்பரப்பிரமம் என்றும்ஞானத்தால் துருவக் காணப்படுகின்ற பிரமம் என்றும்துரிய நிறைவு என்றும்சுத்த சிவம் என்றும் சொல்லுவேன்இவை யாவும் அவர் நல்கும் ஞானவிளையாட்டுக்கள் என அறிவாயாக.

 

"சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்

     சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்,

பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்,

     பித்தர்என்றே பெயர்படைத்தார்க்கு எப்பெயர்  ஒவ்வாதோ?

அச்சமயத் தேவர்மட்டோநின்பெயர்என் பெயரும்

     அவர்பெயரேஎவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே,

சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்

     திருக்கூத்துக் கண்ட அளவே தெளியும்இது தோழி".

 

இதன் பொருள் ---

 

     தோழி! ஞானசபையில் நடித்தருளுகின்ற தலைவராகிய சிவபெருமானுக்குக் கூறப்படும் அருகர் புத்தர் முதலிய புறச்சமய பெயர்கள் பொருத்தம் ஆகுமோ என்று என்னைக் கேட்கின்றாய்.பிற்காலத்தவர் வகுத்து உரைக்கும் பெயரும் அவர்க்குப் பொருந்தும் என அறிவாயாகஅவருக்கு வழங்கும் பெயர்களில் பித்தர் எனவும் பெயர் உண்டு. ஆதலால் பித்தர் என்று பெயர் கொண்ட அவருக்கு எப்பெயர்தான் பொருந்தாதுஅந்தச் சமயவாதிகள் கூறும் பெயர்கள் மட்டுமின்றி,உன் பெயரும்,என் பெயரும் அவர் பெயரே என அறிவாயாக.வேறு எவ்வகை உயிர்களின் பெயரும் அவர் பெயரே ஆகும்ஞானசபையில் எழுந்தருளும் என் கணவராகிய அவர் செய்யும் திருக்கூத்து கண்ட மாத்திரத்தே நான் சொல்லுவதன் உண்மை உனக்குத் தெளிவாகும். 

 

     ஆ, "ஆதிமூலம்" என்பது மும்மூர்த்திகளாலும் அறியப்படாத நிலையில் உள்ள முழுமுதற் பரம்பொருளே ஆகும்.

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...