திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
மூன்றாம் அதிகாரம் - நீத்தார்
பெருமை
இந்த
அதிகாரத்தில் இறுதியாக வரும் திருக்குறள், எவ்வகைப்பட்ட உயிர்க்கும் உண்மையான அருள்
கொண்டு வாழ்வதனால், அந்தணர் என்பவர் நற்செயலாளர் ஆவார் என்கின்றது.
அந்தணர்
என்போர் அறவோர், மற்று எவ்உயிர்க்கும்
செந்தண்மை
பூண்டு ஒழுகலான்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் --- எல்லா உயிர்கள் மேலும் செவ்விய
தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;
அந்தணர் என்போர் அறவோர் --- அந்தணரென்று
சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
(பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என
ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார்
மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண் மாட்டு
அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
இத்
திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்த பாடல்கள் வருமாறு---
அணிகொண்ட
கோதை அவள் நன்றும் ஏத்த
அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட
மூள்று புரம் எய்த வில்லி
திருமுல்லை வாயில் இதன்மேல்
தணிகொண்ட
சிந்தை
அவர் காழி ஞான
மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட
பத்தும் இசைபாடு பத்தர்
அகல்வானம் ஆள்வர் மிகவே. ---
திருஞானசம்பந்தர்.
பணிந்து
எழுந்து கைதொழுது முன் பணிமலர்ப் பீடத்து
அணைந்த
ஆடகக் கிழி தலைக்கொண்டு அருமறைகள்
துணிந்த
வான்பொருள் தரும்பொருள் தூயவாய்மையினால்
தணிந்த
சிந்தை
அத்தந்தையார்க்கு அளித்து உரை செய்வார்.
--- பெரியபுராணம்.
செம்மையால்
தணிந்த சிந்தைத்
தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை
ஆயிரவர் தாங்கள்
போற்றிட முதல்வனாரை
இம்மையே
பெற்று வாழ்வார்
இனிப் பெறும் பேறுஒன்று இல்லார்
தம்மையே
தமக்கு ஒப்பான
நிலைமையால் தலைமை சார்ந்தார். --- பெரியபுராணம்.
அந்தண்மை
பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய்
அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல்
இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ்
சந்தியும் ஆகுதி பண்ணுமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை---
உயிர்களிடத்து
அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர்
வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று
வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும்
வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.
பந்தம்
இல்லாத மனையின் வனப்பு இன்னா,
தந்தை
இல்லாத புதல்வன் அழகு இன்னா,
அந்தணர்
இல் இருந்து ஊண் இன்னா, ஆங்கு இன்னா
மந்திரம்
வாயா விடின். --- இன்னா நாற்பது
இதன்
பொருள் --- பந்தம்
இல்லாத மனையின் வனப்பு இன்னா --- சுற்றம் இல்லாத இல்வாழ்க்கையின் அழகானது துன்பமாம்
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா --- பிதா, இல்லாத பிள்ளையினது அழகானது துன்பமாம்; அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா - துறவோர்
வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம், ஆங்கு --- அவ்வாறே, மந்திரம் வாயாவிடின் இன்னா ---
மறைமொழியாய மந்திரங்கள் பயனளிக்காவிடின் துன்பமாம்.
பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை
அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்" என்பவாகலின் சுற்றமில்லாத மனையின் வனப்பு
இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின்
அழகு, இன்னாவாம் எனினும்
அமையும் ‘தந்தையொடு கல்வி போம்'.
ஆதலின்
‘தந்தை யில்லாத' என்றதனால் கல்விப்
பேற்றையிழந்த, என்னும் பொருள்
கொள்ளப்படும்.அந்தணர் துறவோர் இதனை,
‘அந்தணர்
என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும், செந்தண்மை
பூண்டு ஒழுகலான்' என்னும் பொய்யா
மொழியான் அறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒருவழித் தங்காது திரிந்த
இரந்து உண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின்கண் தங்கி உண்ணற்பாலர் அல்லர்
என்க. மந்திரம் இன்னது என்பதனை 'நிறைமொழி மாந்தர் ஆணையில்
கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப'
என்னும்
தொல்காப்பியத்தான் அறிக.
No comments:
Post a Comment