திருக்குறள்
அறத்துப்பால்
பாயிர இயல்
பாயிர இயல்
இரண்டாவது அதிகாரம் - வான்சிறப்பு
திருக்குறள்
- அறத்துப்பால் - வான் சிறப்பு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் வரும் இத்
திருக்குறள், "மழையானது வறண்டு
விடுமானால்,
விண்ணவர்க்கும்
இந்த உலகில் விழாக்கள் இல்லாமல் போவதோடு, அன்றாட வழிபாடுகளும் நடைபெறாமல் போகும்"
என்றது.
சிறப்பொடு
பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல், வானோர்க்கும் ஈண்டு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
வானோர்க்கும் ஈண்டுச்
சிறப்போடு பூசனை செல்லாது --- தேவர்கட்கும்
இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது;
வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின்
(நைமித்திகத்தோடு கூடிய நித்தியம்
என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு
தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின்,
அதனை
முற்கூறினார்.)
யாதானும் ஓர் நிமித்தம் பற்றிச் செய்வது
நைமித்திகம் ஆகும். நித்திய கருமங்களில் உண்டாகும் தாழ்வு தீரச் செய்வது
நைமித்திகம் என்பதால், அது சிறப்பான
பூசனை. எனவே,
"சிறப்பொடு"
என்று முன் வைத்துக் கூறினார்.
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் எழுந்தருளிய காலத்தில், இம்மண்ணுலகில் மழை
மறுத்ததனால் ஆறுகளில் பருவ வெள்ளம் பாயாது தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி, உணவின்றி நின்றமையால், தேவர்களுக்கும் சிறப்பு வழி பாடுகளும்
நாள்வழிபாடுகளும் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய
நிலை உண்டானது என்கிறது பெரியபுராணம்.
பின்வரும் பாடல் மேல் திருக்குறளுக்கு ஒப்பாய் அமைந்தது.
மண்ணின்மிசை
வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்உயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும்
சிறப்பில்வரும் பூசை ஆற்றா
மிக்கபெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண்அமரும்
மொழிஉமையாள் முலையின் ஞானப்
பால்அறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான்
திருநீற்றுச் சார்வினோர்க்கும்
கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்.
No comments:
Post a Comment