சோர்வு படாதவள் பெண்

 


சோர்வு படாதவள் பெண்

-----

 

     ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்கள் ஒரு காலத்தில் மிக உயர்வாகவும் ஒரு காலத்தில் மிகத் தாழ்வாகவும் வைக்கப்பட்டிருந்தனர். இன்று நாகரிகம் மிகுந்ததாகப் பெருமை படுத்திக்கொள்ளும் நாடுகளில் கூடப் பெண்களின் நிலை அண்மைக் காலத்திலே தான் உயர்வு பெற்று வருகிறது. இத்தகைய உயர்வையும்உரிமையையும் அவர்கள் பெறுவதற்கு நூற்றாண்டுக் கணக்கில் போராட்டம் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இந்த உரிமையை ஆண் இனமானது விரும்பித் தந்ததாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலை ஏனைய நாடுகளில் பரவி இருந்த நிலையில்இத்தமிழ் நாட்டின் நிலை முற்றும் வேறு விதமாய் இருந்தது. மகளிரைப் பெரிதும் மதித்து நடக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலேயே இருந்ததாக அறிகின்றோம். ஒளவையார்,அள்ளூர் நன்முல்லையார்ஒக்கூர் மாசாத்தியார்காக்கைப் பாடியனியார்குறமகள் இளவெயினிதாயங்கண்ணியார்பூங்கண் உத்திரையார்பெருங்கோப்பெண்டுநக்கண்ணையார்பேரெயின் முறுவலார்பொன்முடியார்மாற்பித்தியார்நப்பசலையார்,காமக் கண்ணியார் போன்ற பல பெண்பால் புலவர்கள் வாழ்ந்தனர்.  தமிழ் களிர் தமது உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவசியமோஅதற்காகப் பிறரைப் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவையோ ஏற்பட்டதாக அறிய முடியவில்லை.

     உரிமை என்ற பெயரில் பிற நாடுகளில் நடைபெறும் ஆபாசங்கள் பற்றி அந்நாட்டவர்களே வருந்தத் தொடங்கி உள்ளார்கள். உரிமை என்பது வரையறை செம்மையாகக்  கணிக்கப்படாத ஒன்று. பல சமயங்களில் நம்முடைய உரிமை என்பது அடுத்தவருடைய உரிமையில் கை வைப்பதாகக் கூட முடிந்து விடுவதைக் காணலாம். அதிக விலை கொடுத்துத் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றை ஒருவர் வாங்கி வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதைத் தமது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தனக்கு உள்ளதாக எண்ணிக் கொண்டு, தொலைக் காட்சிப் பெட்டியை நேரம் காலம் இல்லாமல் பெருத்த ஓசையுடன் இயக்கிக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார்.அதுபோலத்தான்அயலாருக்குத் தொந்தரவு பற்றிக் கவலைப் படாமல் இப்போதும் சிலர் உள்ளனர். கேட்டால், "இது என்னுடைய வீடு. எனது எண்ணம் போல் இருக்க எனக்கு உரிமை உண்டு. நீங்கள் யார் அதைக் கேட்க?" என்று பொரிந்து தள்ளுகின்றனர். அது அவருடைய வீடுதான். அவர் வாங்கிய தொலைக் காட்சிப் பெட்டிதான். அவருக்கு உரிமை உண்டு என்றாலும்அதன் பயனாக அயலாருடைய  காதுகள் செவிடாவது பற்றியும்அயலாருடைய நிம்மதி கெடுவது பற்றியும்அவர் கவலைப்படத்தான் வேண்டும். அதுதான் நாகரிகம். தம்முடைய  உரிமை ஒன்றோடு மட்டும் நின்று விடுவாரேயானால்உண்மையான உரிமையை அவர்  உணர்ந்தவராக மாட்டார். உண்மை உரிமை ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காது. அப்படித் தீங்கு விளைவிக்கிற ஒன்றை நம்மவர் உரிமை என்றுகூறியதே இல்லை.

     பெண் உரிமை என்பது பற்றித் திருவள்ளுவர் தனியாக ஏதும் கூறுவில்லை. அப்படியானால்அவரது காலம் பெண்ணுரிமை மறுக்கப்பட்ட காலமாக இருக்கலாமோ என்று நினைக்கத் தேவை இல்லை. உரிமை மறுக்கப்பட்ட நாட்டிலேதான்உரிமையைப் பற்றிய பேச்சு எழும். இயல்பாகவே உரிமை பெற்றுள்ள நாட்டில் அது பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெண்ணுரிமைஎன்பதுஅன்றாடவாழ்க்கையில் இருந்து வந்த காரணத்தால் அதுபற்றித் தனியே பேசவேண்டிய அவசியம் இங்கே உண்டாகவில்லை.

     மகளிரைப் பற்றிபச் சிறப்பித்துப் பேச வந்த திருவள்ளுவ நாயனார்"வாழ்க்கைத் துணை நலம்என்ற ஒர் அதிகாரத்தைத் தாம் அருளிய திருக்குறள் நூலில் வைத்தார். வாழ்க்கைக்குத் துணையாக வருகின்ற ஒரு பெண்ணின் மூலம் மங்காத நலம் விளையும் என்பதால், "வாழ்க்கைத் துணை நலம்" என்றார். வாழ்க்கைத் துணையின் இயல்புகள் என்றும் சொல்லலாம். வாழ்க்கைக்குத் துணையாக வரக் கூடிய ஒரு பெண்ணிடத்தில் இருக்க வேண்டிய சிறப்புக்களை எல்லாம் அந்த அதிகாரத்தில் வரிசைப்படுத்திக் கூறுகின்றார். "மங்கலம் என்ப மனைமாட்சி" - மனைவியின் சிறப்பானது மங்காத நலத்தை உடையது என்கிறார்.

 

     பெருஞ்சித்திரனார் என்ற ஒரு புலவர். குமண வள்ளலை நாடிச் சென்றுபாடிப் பரிசில் பெற்று வந்தார். பெற்று வந்த பரிசுப் பொருள்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய சுதந்திரம் தனது வாழ்க்கைத் துணைக்கே உள்ளது என்பதை உணர்ந்திருந்த தமிழ் மண்ணில் தோன்றிகல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவர் அந்தப் புலவர் என்பதால்கொண்டு வந்த பொருள்களைத் தனது வாழ்க்கைத் துணையிடம் தந்துஅவற்றை எப்படிச் செலவிட வேண்டும் என்பதைத் தன்னோடும் கூட ஆராயாமல் தக்க வழியில் செலவிட்டுக் கொள்ளலாம் என்ற சொல்லும் விதமாக, "என்னோடும் சூழாது எல்லோர்க்கும் கொடுமதிமனைகிழவோயே!" என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் வாயிலாக அறிவதன் மூலம்பெண்ணுரிமை இந்தத் தமிழ் மண்ணில் சிறந்து விளங்கியது என்பது தெளிவாகும்.

 

     மகளிரின் சிறப்புக் குறித்து பலவாறாகச் சொன்ன திருவள்ளுவ நாயனார்மகளிர்க்குரிய இலக்கணத்தை அழகாகச் சொல்கிறார். ஒரு பெண் முதலாவது தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.அடுத்தபடியாகத் தன்னைக் கொண்டவனாகிய கணவனைக் காக்கவேண்டும்மூன்றாவதாகத் தன்னுடைய கணவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள புகழைநற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். இம்மூன்று காரியங்களையும் ஒரு பெண் செய்யத் தொடங்கினால்அதைவிட வேறு சிறப்பு இருத்தற்கு இல்லை. இத்தகைய ஒரு பெண்ணைக் காட்டிலும் வேண்டத்தக்க பொருள் வேறு ஒன்றும் சிறப்பான இல்லறத்திற்கு இல்லை.  இத்தோடு நில்லாமல். இன்னும் ஒரு படி மேலே சென்றுமேலே குறித்த மூன்றையும் சோர்வு இல்லாமல்அதாவது ஒரு சிறிதும் உள்ளத் தளர்ச்சி அடையாமல் செய்து கொண்டு இருப்பவளே பெண்  ஆவாள்  என்றும் கூறுகிறார் நாயனார்.

 

     சோர்வு அல்லது தளர்ச்சி என்பது ஒருவனுக்கு இரண்டு வகையில் உண்டாகும். ஒன்று உடல் சோர்வு. இன்னொன்று உள்ளச் சோர்வு. ஒரு வேலையை ஒருவன் செய்யும்போதுஉடல் சோர்வு உண்டாகலாம். செய்கின்ற வேலையின் சிறப்பையும்அதன் இன்றியமையாயையும்அதனால் பெறப்போகும் நன்மையையும் உள்ளத்தில் கொள்ளும்போதுகருமமே கண்ணாய் இருக்கும்போதுஉடல் சோர்வையும் மறந்து ஊக்கம் பிறந்துவிடும். ஆனால்உள்ளம் சோர்வு அடைந்த போதுஉடலும் தன்னாலேயே சோர்வு அடைந்து விடும். எனவேதான், "ஊக்கம் உடைமை" என்று தனியாக ஓர் அதிகாரத்தை வைத்து அருளினார் நாயனார். ஒருவனுக்கு உடைமை என்று சொல்லப்படுவதே, "ஊக்கம் உடைமை" தான். பொருள் உடைமை உடைமை ஆகாது என்று, "உள்ளம் உடைமை உடைமைபொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்" என்னும் திருக்குறளின் வழி அறிவுறுத்துகின்றார் நாயனார்.

 

     திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்த மகளிர் உலகில் எல்லாவிடங்களிலும் உண்டு.  சிறப்பாக இந்தத் தமிழ் நாட்டில் உண்டு. திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய எழுந்த நூல்களில் ஒன்றானசிவசிவ வெண்பாஎன்னும் நூலில்சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் என்பார் பாடிய பாடல் வருமாறு....

 

"சத்தியம் தப்பாமல் அரிச்சந்திரற்குச் சந்த்ரமதி

சித்தம் ஒருமித்தாள்,சிவசிவா! - புத்தியுடன்

தன்காத்துத் தன்கொண்டான் பேணித் தகைசான்ற

சொல்காத்துச் சோர்வுஇலாள் பெண்."            

 

இதன் பொருள் ---

 

     உண்மை நெறி மாறாமல் வாழவேண்டும் என்று விரதம் பூண்டுஅவ்வாறே வாழ்ந்துதான் சந்தித்த எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்ட அரிச்சந்திரன் என்னும் பேரரசனின் சித்தம் இயைய வாழ்ந்தாள் அவன் மனைவியாகிய சந்திரமதி. இல்லறம் சிறப்பது வாழ்க்கைத் துணை என்னும் நலத்தால். சந்திரமதியால்தான் அரிச்சந்திரனின் வாழ்வு சிறப்புற்றது என்பது உலகறிந்த உண்மை.

 

     பெருஞத் சிறப்பாகத் தமிழ் நாட்டில் பண்டைய காலம் தொடங்கி இன்றளவும் பற்பலர் உண்டு.  கற்பரசி கண்ணகியும்மாதவி பெற்ற மணிமேகலையும்சோழன் மகளாய்ப் பிறந்துபாண்டியன்  தேவியாய்ப் புகுந்த "மங்கையர்க்குத் தனி அரசி" என்று சிறப்பித்துப் போற்றப் பெறும் மங்கையர்க்கரசி நாயனார் ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் ஆவர். திருக்குறளில் சொல்லப்பட்ட மூன்று கடமைகளையும் இறுதிவரை ஒரு சிறிதும் சோர்வு கட்டாமல் காத்த பெருமைஇரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணகிக்கும்ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்கும் உண்டு.

 

     கற்புக்கடம் பூண்ட கண்ணகிதனது கணவன் ஆகிய கோவலனது செயலால்பூம்புகாரில் அளப்பரும் துன்பத்துக்கு ஆளானவள். இறுதி வரை அவன் துயர் போக்க அவனோடு வாழ்ந்த பெருமகள்இறுதியாக அவன் இறந்தபொழுதும் கூட ஒரே ஒரு வருத்தத்தைத்தான் மிகுதியாக அடைகின்றாள். மூன்றாவதாக உள்ள "தகை சான்ற சொல்"போய்விடுகின்ற நிலைமை மதுரை மாநகரில் உண்டானது. பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்தஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் ஆகிய கோவலன்மதுரையில் கள்வன் என்ற பெயர் சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டுதுயரம் மனைவாழ்க்கை" என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் இறந்தே தீரவேண்டும் என்ற உண்மையை அறிந்த கண்ணகிக்குஏற்கெனவே வாழ்வில் பட்ட துயரம் போதாக் குறைக்கு தனது  கணவன் 'கள்வன்’  என்ற பழிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டதனால் துயரம் இன்னும் மேலிட்டது. தனது கணவன் கள்வன் அல்லன் என்பதை அவள் உணர்வாள். அந்தப் பெரும்பழியைப் போக்க அவளது உள்ளம் துடித்தது. உடனே கதிரவனை நோக்கி, “உலகத்தில் ள்ள பொருள்களை எல்லாம் உயரத்திலிருந்து க ண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கிற கிதரவனே! என்னுடைய கணவன் கள்வனா?’ என்ற பொருளில் பேசினாள் .அவன் கள்வன் அல்லன். அவனைக் கள்வன் என்று சொல்லிய இம்மதுரை நகரம் தீயால் அழிக்கப்படும்!’ என்று கதிரவன் விடை பகர்ந்தான்.

     கோவலனைக் கள்வன் என்று தவறாகப் பழி சூட்டிய அதே மதுரை நகரில் ஐந்து நூற்றாண்டுகள் கழித்துஅறுபான்மும்மை நாயன்மார்களுள் வைத்துப் போற்றப் பெறுகின்ற மங்கையர்க்கரசியார் என்ற ஒரு பெருமாட்டியார் தோன்றினார். அவருடைய கணவன் சரித்திரப் புகழ் வாய்ந்த நின்றசீர் நெடுமாறன்  என்ற பாண்டியன். அவன் சமண சமயத்திலே புகுந்து விட்டான். தமிழ் நாட்டுவீரம் சற்றும் குறையாத மங்கையர்க்குத் தனி அரசியார்கணவன் தவறான வழியில் புகுந்தான் என்பதற்காக மனம் உடைந்து விடாமல்அவன் வழிக்குத் தாமும் சென்று விடாமல்மெல்ல மெல்ல அவனைத் தம் வழிக்குக் கொண்டு வந்த வரலாற்றைத் தமிழ் உலகம்நன்கு அறியும்.பெண்களை மதிக்காமல்அவர்களுக்கு வீடுபேறு இல்லை என்று சொல்லுகின்ற வேற்றுச் சமயத்தாரிடையே,  மங்கையர்க்கரசியார்கண்ணகியைப் போலவே

தன் காத்துத் தன் கொண்டான் பேணித் தகை சான்ற

சொல் காத்துச் சோர்விலாள் பெண்"

என்ற திருக்குறளுக்கு இலக்கியமாய் வாழ்ந்தார்.

 

 

No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...