மனம் ஒரு குரங்கு

 


மனம் எifனும் குரங்கு

-----

 

     "தூக்கணம்" என்னும் சொல்லுக்குதொங்கல்உறி என்று பொருள்.

 

     குருவி வகைகளுள் ஒன்று தூக்கணங்குருவி. மரங்களில் தொங்கும் வடிவில் கூடுகளைக் கட்டி வாழ்வதால்இந்தக் குருவி வகைக்கு"தூக்கணம் குருவி" என்று பெயர் வந்தது. கூடுகளைக் கட்டும் பறவைகளுள் இது சிறப்பானது ஆகும். பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் பார்வைக்கு அழகாகவும்அதிசயமாகவும் இருக்கும். தூக்கணம் குருவியின் கூடுசுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும். கூட்டின் வாயிலானது மழைநீர் உள்ளே புகாதபடி கீழ்ப்புறமாக இருக்கும். தாய்க் குருவியானதுகாட்டில் பறக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வந்துகளிமண் சேற்றில் புதைத்துஅதைக் கொண்டு வந்து தனது கூட்டில் வெளிச்சத்திற்குப் பயன்படுத்தும்.

 

     தூக்கணம் குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டி வாழும் காலத்தில், நல்ல மழை பொழிந்தது. மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணம் குருவி தனது கூட்டில் இருந்தது. அந்த மரத்தில் பலகாலமாக இருந்து வந்த ஒரு குரங்கு மழையில் நனைவதைப் பார்த்த தூக்கணம் குருவியின் மனம் பொறுக்கவில்லை. 

 

     குரங்கின் மீது வைத்த இரக்கம் பற்றி, "இந்த மழையில் நனையாது இருக்க நீயும் என்னைப் போல் ஒரு கூடு கட்டிக் கொள்ளலாமே" என்று தனக்குத் தெரிந்த உபாயத்தைத் தூக்கணம் குருவி கூறஅதனைக் கேட்ட அறிவில்லாத அந்தக் குரங்கு"எனக்கு நீ அறிவுரை கூறுகின்றாயா?" என்று கோபம் கொண்டுதான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்துஅந்த குருவியானது அழகாகக் கட்டி வைத்திருந்த கூட்டினைப் பிய்த்து எறிந்தது.

 

     தனது அறிவுக் கூர்மையால் முயன்றுதனது பாதுகாப்புக்காகக் கட்டி இருந்த கூடு சிதைந்து போனது பற்றி குருவி வருந்தியது. தனது வீரத்தைக் காட்டி விட்டதாக எண்ணி குரங்கு மகிழ்ந்தது.

 

     இந்த நிகழ்வில் இருந்து தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்அறிவுள்ளவர்கள்அறிவு இல்லாதவர்களுக்கு அறிவுரை சொன்னால்சொன்னவர்க்கே துன்பம் விளையும் என்பதுதான்.

 

     "விவேக சிந்தாமணி" என்று ஒரு பழைய நீதிநூல் உண்டு. இந்த நூலில்மேற்குறித்த நீதியானது,பின்வரும் பாடலாகக் காட்டப்பட்டு உள்ளது.

 

"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தான் ஒரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்;

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!" 

 

இதன் பொருள் ---

 

     வானரம் --- (மரத்தில் இருந்து) குரங்கு ஒன்று,மழைதனில் நனைய --- மழை நீரில், (இருக்க இடம் இல்லாமையால்மரக் கிளையில் இருந்துகொண்டு) நனைந்து (நடுங்க)(அதைக் கண்டுஅந்த மரத்திலே கூடு கட்டிக் கொண்டுமழையில் நனையாமல் பாதுகாப்பாக இருந்தஅறிவு வல்லமை உள்ள) தூக்கணம் --- தூக்கணம் குருவியானதுஒரு நெறி சொல்ல --- (குரங்கின் மீது இரக்கம் கொண்டுஇந்த மழையில் நனையாது இருக்கஎன்னைப் போல் ஒரு கூடி கட்டிக் கொண்டு இருக்கலாமே என்று) ஒரு நல்ல வழியைச் சொல்லதாண்டிப் பிய்த்திடும் --- (அறிவில்லாத அந்த குரங்குகுருவி சொன்ன நல்ல அறிவுரையை ஏற்றுக் கொள்ளாமல் சினம் கொண்டு) தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, (தூக்கணங்குருவி கட்டி வைத்திருந்த அழகான கூட்டைப்) பிய்த்து எறியும்.

 

     அதுபோ,

 

     ஞானமும்கல்வியும் நவின்ற நூல்களும் --- மெய்ப்பொருள் உண்மையும்அதனை உணர்வதற்குத் துணை புரியும் கல்வியும் (பெரியோர்களால் தெளிந்துஉயர்ந்தவை என்று) அறிவித்துள்ள நல்ல நூல்களின் கருத்துக்களைஈனருக்கு உரைத்திடில் --- அறிவு ஈனம் உள்ள கீழ்மக்களுக்கு (அறிவுடையோர் உணர்ந்துஅவரது தன்மை கருதி) கூறினால்,

அது இடர் ஆகும் --- அது (கூறிய அறிவுடையோருக்கே) துன்பத்தை உண்டாக்கும்.

 

     உயர்ந்த நூல்களின் பொருள் விளங்காமையால்விளங்கிக் கொள்ளும் அறிவு இல்லாதவர்கள்விளங்கிக் கொள்ள முயலாமல்அதனைத் தரக் குறைவாக விமரிசனம் செய்வதோடுஇழித்தும் பேசுவார்கள்.

 

     எனவேதான்பாடம் சொல்லுவோனுக்கு உரிய இலக்கணம்பாடம் கேட்போனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றிநன்னூல்அறநெறிச்சாரம் முதலாகிய நூல்களில் சொல்லபட்டுள்ளது. 

 

     இந்தப் பாடலில் இருந்து இன்னொரு உண்மையும் விளங்கும்.

 

     இறைவன் தந்த உடம்பைக் கொண்டுஅதை அழகாகப் பேணிஉலகியல் நிலைகளால் தனக்குத் துன்பம் வராதபடி காத்துக் கொள்ளுகின்றவர்கள் அறிவு உடைய தூக்கணம் குருவியைப் போன்றவர்கள். உடம்பாகிய கூடு சிதையாமல்படிக்கு அதனைக் காத்துஅதனால் நலம் பெறவே மனத்தை நல்வழியில் முயன்று செலுத்துவார்கள். என்னதான்நல்ல நெறியில் ஒழுகவேண்டும் என்று முயன்றாலும்மனமானது சில நேரங்களில் அது போனவழியே செல்வதால் துன்பத்தை அனுபவிக்க நேரும். அதனால் குருவியின் கூடு போன்ற உடம்பும்,கூட்டில் உள்ள குருவியைப் போன்ற உடம்பில் உள்ள உயிரும் துன்பத்தை அடையும்.

 

     மனம் என்பது ஒரு குரங்கைப் போன்றது. இறை வழிபாட்டில் ஈடுபட்டு இருக்கும்போது, இறைவன் தன்னோடு உள்ளதாக எண்ணி உருகும். அல்லாத காலங்களில் தவறு செய்யும்போது தன்னோடு இறைவன் உள்ளான், அவன் நாம் செய்யும் காரியங்களுக்குக் கண்காணியாக உள்ளான் என்பதை வெகுவாக மறந்துவிடும். தவறு செய்துவிட்டுத் துன்பத்தை அனுபவிக்க நேரும்போது, மீண்டும் இறைவனை நாடும். இவ்வாறு பலவேறு நினைவுகளைக் கொண்டுஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிச் சென்றுகொண்டே இருக்கும். நிலையில்லாது உழலும். அந்த மனமாகிய குரங்கை அடக்கி வைத்து இருந்தால்உயிரானது தீய நெறிகளில் சென்று இடர்ப்படாமல்நல்ல நெறியில் செல்லும். உடம்பும் நெடுநாள் நிலைத்து இருக்கும்.

 

     மனம் என்பதை ஒரு குரங்காக வைத்துஅதை அறிவு என்னும் கோலால் அவ்வப்போது அதட்டிக் கொண்டே இருக்கவேண்டும். "கோல் இருந்தால் குரங்கு ஆடும்" என்பது உலகியல் வழக்குச் சொல். சற்று அயர்ந்தாலும்அது தனது சேட்டையைப் புரிந்து விடும். "குரங்கின் கையில் பூமாலை" என்பதும் நமக்குத் தெரிந்ததே.

 

     எனவேதான்பெரியோர்கள் தாம் சொல்ல வந்த நல்ல நெறிகளை, "நெஞ்சு அறிவுறுத்தல்" என்னும் வகையில்தமது மனத்திற்கு அறிவுறுத்துவதாகவே பாடி வைத்து, நல்வழிப்படுத்தி வந்தார்கள்.

 

     எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடல்களைக் காணலாம்....

 

     திருஞானசம்பந்தப் பெருமான் தனது நெஞ்சுக்கு அறிவுறுத்துவதாக அமைந்த பாடல்...

 

நீ நாளும் நல் நெஞ்சே!

            நினைகண்டாய்யார்அறிவார்

சாநாளும் வாழ்நாளும்?

            சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்ப,

            புகழ்நாமம் செவிகேட்ப,

நாநாளும் நவின்றுஏத்தப்

            பெறலாமே நல்வினையே.

 

இதன் பொருள் ---

 

     நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்?ஆதலின்,திருச்சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும்,செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும்நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப் பயன் பெறலாம்.

 

     அடுத்துவள்ளல்பெருமான் பாடி அருளியகந்தகோட்ட "தெய்வ மும்மணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"வாய்கொண்டு உரைத்தல்அரிது, என் செய்கேன், 

     என்செய்கேன்; வள்ளல்உன் சேவடிக்கண்

மன்னாது, பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை

     வாய்ந்து உழலும் எனதுமனது,

 

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு

     பித்துண்ட வன்குரங்கோ?

பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ?

     பேதைவிளை யாடுபந்தோ?

 

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோ?பெருங்

     காற்றினாற் சுழல்கறங்கோ;

காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது

     கர்மவடிவோ அறிகிலேன்"   

 

இதன் பொருள் ---

 

     என்மனத்தின் இயல்பை வாயால் உரைக்க முடியாதுஎளியேன் என்ன செய்வேன்வள்ளலாகிய உன் திருவடியில் ஒன்றி நில்லாமல் பொன்னாசைமண்ணாசைபெண்ணாசை கொண்டு உழலுவதாகிய அம்மனதை பேய் பிடித்து,கள் குடித்துகோலால் அடியுண்டு பித்துக் கொண்ட குரங்கு என்று சொல்லுவதா? மண்குயவன் என்று சொல்லப்படுகின்ற குலாலனால் சுழற்றப்படுகிற சக்கரம் என்று சொல்லுவதாசிறுவர் கைக்கொண்டு விளையாடும் பந்து என்று சொல்லுவதா?  சினம் கொண்டு பிற உயிர்மேல் பாயும் கொடிய விலங்கு என்று சொல்லுவதாபெருங் காற்றினால் சுழலும் காற்றாடி என்று சொல்லுவதா? , காலன் வடிவோஇந்திர சால வடிவமோஎன்னுடைய வினையின் வடிவமோஇன்னது என்று அறியேன்.

 

     மனம் என்னும் குரங்குக்குவள்ளல் பெருமான் கூறும் நல்லுரையைக் காண்போம்....

 

"மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே! நீதான் 

     மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்

இனம் உறஎன் சொல்வழியே இருத்தியெனில்,சுகமாய் 

     இருந்திடுநீ;என்சொல்வழி ஏற்றிலை ஆனாலோ

தினையளவு உன் அதிகாரம் செல்லவொட்டேன்;உலகம் 

     சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே;

நனவில்எனை அறியாயோ?யார் என இங்கு இருந்தாய் 

     ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே".

 

இதன் பொருள் ---

 

     மனம் என்று சொல்லப்படும் ஒரு பேய் பிடித்த குரங்கின் செயலையுடைய அறிவில்லாத சிறுவனே! நீ என்னை மற்றவர்களைப் போல எண்ணிக்கொண்டு மயக்குதல் ஒழிகநட்பு உண்டாக என் சொல் வழியே இருப்பாயானால் சுகமாய் இருந்திடுவாய். என் சொல்லை ஏற்க மாட்டாயானால் தினையளவு கூட உன் செல்வாக்கு என்னிடம் செல்லுமாறு இடங்கொடுக்க மாட்டேன்அதற்கு மாறாக உலகவர் எல்லாரும் கண்டு இகழ்ந்து சிரிக்குமாறு திருவருள் துணையால் ஒருகணப் பொழுதில் உன்னை அடக்கி ஒடுக்கி விடுவேன். என்னை இன்னார் என அறியாமல்,யாரோ என்று கருதிக் கொண்டு என்னுள் நீ இருக்கின்றாய்ஞான சபைத் தலைவனாகிய சிவனுக்கு நான் ஒரு நல்ல பிள்ளை என அறிவாயாக.

 

     மனம் என்னும் குரங்கை, நல்வழிச் செலுத்துகின்ற ஆசிரியர், தனது கையில் நன்னெறி ஒரு கோலை வைத்துக் கொண்டு அதட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

 

     வகுப்பில் ஆசிரியர் இல்லாத காலத்தில், மாணவனுக்கு உரிய நெறியில் ஒழுகாமல், தன் மனம் போனவாறு ஆட்டம் போடுகின்ற,சிறுபிள்ளையைப் போன்றது மனம்.

 

     அல்லாமல், தனது கட்டுப்பாட்டில் இல்லாத,குரங்கு மனம் படைத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி அவமானப் படவும் கூடாது.

சொல்லோடு நில்லாமல் வாழ்ந்து காட்டுதல் வேண்டும்

 


சொல்வதோடு வாழ்ந்து காட்டுதல் வேண்டும்

-----

 

"கனவினும் இன்னாது மன்னோவினை வேறு

சொல் வேறு பட்டார் தொடர்பு".

 

என்னும் திருக்குறளின் வழி, "சொல்வது வேறாகவும்செய்வது வேறாகவும் உடையவருடைய தொடர்பானது, (நினைக்கும் போது மட்டும் அல்லாமல்) கனவு நிலையிலும் கூடத் துன்பத்தைத் தருவதாகும்" என்கின்றார் நாயனார்.

 

     நம்மோடு தொடர்பில் உள்ள ஒருவர், பேசும்போது நயமாகப் பேசி, பின்னர் செயலொன்றைச் செய்யும் காலம் வரும்போதுமுன்பு தான் சொன்னதற்கு மாறாகச் செயல்படுகின்றார் என்றால், அவர் கொடிய இயமனைப் போன்றவர். அத்தகையவருடைய தொடர்பானதுவிழித்து இருந்து நல்ல நினைவோடு உள்ள காலத்தில் துன்பம் தருவது மட்டுமல்லாமல்தூங்கும்போதும்,கனவு நிலையில் அந்த நினைவு வந்து தோன்றி மிகுந்த துன்பத்தைத் தரும். எனவேஅவ்விதமான தீயாரோடு கொண்டுள்ள தொடர்பினை அறவே விட்டு ஒழிக்கவேண்டும்.

 

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்".

 

     "மூதுரை" என்னும் நீதிநூலில் ஔவையார் பாடிய மேற்குறித்த பாடலின் பொருள் ---

 

     நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருக்கின்அவ் வீட்டில் இல்லாத பொருள் என ஒன்றுமில்லைன. எல்லாம் உண்டு. அப்படிப்படல் மனையாள் இல்லாமற் போனாலும்மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினாலும்அவ் வீடானது, புலி தங்கிய புதர்போல் ஆய்விடும்.

 

     நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்தகு அரிய காடே ஆகும். நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள வீட்டில், நற்குண செய்கைகளோடு விளங்கும் மக்களைக் கொண்டதாக இருக்கும். இல்லையானால், காட்டில் வாழும் விலங்குகளைப் போல நற்குண நற்செய்கைகள் எவையும் இல்லாமல் போகும்.

 

"பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்".

 

     ஔவையார் பாடியதாகச் சொல்லப்படும் தனிப் பாடல்களில் இது ஒன்று. "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்" என்று, பெண்பால் புலவராகிய அவரே பாடி இருத்தலால், இல்லறத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இருத்தல் இன்றியமையாத ஒன்றாகும். கணவனுக்கு ஏற்ற மனைவியாக இருந்தால், எந்த நிலையிலும் கூடி வாழலாம். மனைவி ஏறுமாறாக நடந்தால், கணவன் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி என்பது மேற்குறித்த பாடலின் பொருள். வறுமை நிலையிலும் மனம் ஒத்து வாழ்ந்திருந்த இளையான்குடி மாற நாயனார், சிறுத்தொண்ட நாயனார், குங்கிலியக்கலய நாயனார் வரலாறுகள் சான்று பகரும். கருத்து ஒற்றுமை இல்லாமல் வாழ்க்கை நடத்துவது, பாம்போடு வாழ்வது போன்றது. அது பலரின் பரிகாசத்திற்கும் இடம் தருவது. "புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார் முன் ஏறு போல் பீடு நடை" என்று நாயனார் அருளியுள்ளதும் சிந்தனைக்கு உரியது. புகழத்தக்க செய்கைகளை உடைய மனைவி இல்லாதவர்க்கு, தம்மை இகழ்ந்து பேசுவார் முன்பு ஆண்சிங்கம் போன்ற பெருமித நடை இல்லையாகும். ஆக,எவ்வகையில் பார்த்தாலும், இல்லறத்தில் மனையாளுக்கே ஏற்றம் மிக உண்டு. பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், வேலையாளாகவும் கருதுவது முற்றிலும் அறியாமை ஆகும். ஆங்கிலத்தில் "BETTER HEALF" என்று கூறியுள்ளதையும், சிவபரம்பொருள் தமது திருமேனியில் சரிபாதியை அம்மைக்குத் தந்துள்ளதையும், திருமாலின் திருமார்பில் திருமகள் உறைவதையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

 

     "கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்" என்றார் ஔவையார் "மூதுரை" என்னும் நூலில். --- இல்லறத்தை இனிதாக நடத்துவதில் கருத்து ஒற்றுமையோடு இல்லாத மனைவியால் துன்பம் உண்டாகும்.

 

     "இல்வாழ்க்கை" என்னும் அதிகாரத்தில் இல்வாழ்க்கையின் சிறப்புக்களை விரித்து ஓதிய திருவள்ளுவ நாயனார், அந்த இல்வாழ்கையானது சிறப்பாக நடப்பதற்குத் துணையாக நிற்பதொரு மனைவியால் விளையும் நன்மையைக் குறித்து, "வாழ்க்கைத் துணை நலம்" என்று ஓர் அதிகாரத்தையும் வைத்து, இல்லாளின் சிறப்பையும்அருளினார்.

 

       இல்லறத்திற்குத் தக்க நல்ல குணங்களையும்நல்ல செய்கைகளையும் உடையவளாய் இருந்து, "கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை"யாதலால்தன்னைக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள்அந்த இல்லற வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள் என்றார்.நல்ல குணங்களாவன --- விருந்தினரை உபசரித்தல்துறவியரைப் போற்றுதல்,இரந்தோர்க்கு ஈதல் முதலியன. நல்ல செயல்களாவன --- அறுசுவை உணவு வகைகளைச் சுவையாகச் சமைத்தலும்,வீட்டைப் பாதுகாத்தல்,வீட்டில் உள்ள பொருள்களைப் பாதுகாத்தல்அக்கம் பக்கத்தாரொடு நட்பாய் இருத்தல் முதலியன.குடும்ப வருவாய் அறிந்துஅதற்குத் தக்கபடி செலவு செய்தல்.

 

     திருக்குறளின்படிக்கு வாழ்ந்து காட்டியவர் திருவள்ளுவ நாயனார் என்பதற்கும், துறவறத்தைக் காட்டிலும், இல்லறமே நற்கதிக்கு வழிகாட்டும் என்பதற்கும் திருவள்ளுவ நாயனார் வரலாற்றில் சொல்லப்படும் நிகழ்வே சான்றாகும்.

 

     நாயனார் வாசுகி அம்மையாரோடு இல்லறம் நடத்தி வரும் காலத்தில், ஒருவர் அவரிடம் வந்து இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா என்ற தெளிவு வேண்டி வெகுநாள் காத்து இருந்தார். திருவள்ளுவ நாயனார் அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல், அவரே அறிந்து கொள்ளட்டும் என்று வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒருநாள், வாசுகி அம்மையார் கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொண்டு இருக்கும்போது, நாயனார் அழைக்க,பாதி கிணற்று அளவில் தண்ணீர் தூக்கிய கயிற்றை அப்படியே விட்டு வந்ததையும், ஒருநாள் அம்மையார் நாயனாருக்குப் பழைய சோறு பரிமாறிக் கொண்டு இருக்கையில், "இது சுடுகின்றது" என்று நாயனார் சொல்லஅம்மையார் உடனே விசிறி கொண்டு விசிறி நின்றதையும், மற்றொருநாள் நாயனார், பகலில் தறி நெய்துகொண்டு இருக்கும்போது, கையில் இருந்த குழல் தவறிக் கீழே விழுந்ததை எடுக்கதனது மனைவியாரை நோக்கி, "தீபம் கொண்டு வா" என்று சொல்லஅம்மையார் உடனே தீபம் கொண்டு வந்ததையும் கண்டு, கணவன் கருத்து வழி நிற்கும் மனையாள் வாழ்ந்தால் இல்லறமே பெரிது, இல்லையேல் துறவறமே பெரிது என்று எண்ணிக் கொண்டு நாயனாரை வணங்கிப் போனார்.

 

     மற்றொரு நாள், திருவள்ளுவ நாயனார், தாம் நெய்த ஆடையை விற்பதற்குக் கடைத் தெருவிற்குப் போய், விற்பனைக்கு உரிய ஆடையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கநாயானார் அருளிய திருக்குறளைப் படித்த ஒருவன், இவரிடத்தில் இவர் கூறிய நூலுக்கு ஏற்ற ஒழுக்கம் உள்ளதா என்று ஆராய எண்ணி, நாயனாரிடம் வந்து, "இந்த ஆடையின் விலை என்ன?" என்று கேட்க"ஒரு பணம்" என்றார் நாயனார். அவன் நாயனார் வைத்திருந்த ஆடையை வாங்கிக் குறுக்கே கிழித்து, "இந்தப் பாதியின் விலை என்ன?" என்று கேட்டான். நாயனார் "அரைப் பணம்" என்றார். அந்தப் பாதியையும் கிழித்து, "இதன் விலை என்ன?" என்று கேட்டான். நாயனார் மிகப் பொறுமையாக,"கால் பணம்" என்றார். நாயனாரின் பொறுமையை வியந்து அவன், ஆடையை வாங்காமலே சென்றான். 

 

     நாயனாரது பொறுமையை மேலும் சோதிக்க வேண்டும் என்று எண்ணிய அவன், மறுநாள் காலையில் அவரது இல்லத்திற்குச் சென்று, வாசுகி அம்மையாரைத் தொந்தரவு செய்து வம்புக்கு இழுத்தான். தறி நெய்து கொண்டு இருந்த நாயனார், தறியை விட்டுச் சென்று, அவனை நையப் புடைத்தார். உதை வாங்கிய அவன், நாயனாரை நோக்கி, "ஐயா! நீர் 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' என்று கூறிய திருக்குறள் பயனற்றதாகி விட்டதே" என்றான். அதற்கு நாயனார், "நீ திருக்குறளை முழுதும் படிக்கவில்லை போலும். 'செய் தக்க அல்ல செயக் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்னும் திருக்குறளைப் படித்து இருந்தால், இந்தக் காரியத்தை நீ செய்திருக்க மாட்டாய்" என்றார். திருக்குறளில், சொல்லப்படாத வாழ்வியல் செய்தி ஒன்றும் இல்லை என்பதை அறிந்த அவன், வீணே பெரியாரைப் பழித்த பாவத்திற்கு ஆளானோமே என்று வருந்தி, நாயனாரிடத்தில் மன்னிப்புக் கேட்டுச் சென்றான்.

 

     "சொல்லுதல் யார்க்கும் எளிய,அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்று நாயனார் திருக்குறளில் அருளியது போல,அழகான வாய்பேச்சை விட்டு, வாழ்ந்து காட்டுதல் நல்லது. அறிவுரை என்பது ஒன்றுதான் இலவசமாக எங்கும் கிடைப்பது. அறிவுரை சொல்லுவது எளிது. வாழ்ந்து காட்டினால், பின்பற்றுவோர்க்கு மிக எளிதாக அமையும்.

 

     திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு, தெளிபொருள் விளக்கம் என்னும் நூல், 1904-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலின் ஆசிரியர், சென்னை, சிந்தாதரிப்பேட்டை வடிவேலு செட்டியார் அவர்கள் விளக்கியுள்ள "திருவள்ளுவ நாயானார் வரலாறு" என்னும் பகுதியில் இருந்து இது எடுத்துக் காட்டப்பட்டது.

 

 

 

 

 

 

நரை விழாமல் இருப்பது எப்படி

 


தலைமுடி நரைக்காமல் இருக்க

----

 

     தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்கத் தொடங்கி விடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது. இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம்முடிக்கு கருநிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைந்து வருவதுதான். இந்த மெலனின் முதுமையில்தான் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். முதுமை நெருங்க நெருங்கமனக் கவலை மிகுவதால், நரை திரை உண்டாகும். மனக் கவலையை மாற்றுகின்றவன் தனக்கு உவமை இல்லாத இறைவன். அவனை அடைந்தால், கவலைகள் மிகுவதில்லை.

 

     இளம் வயதினர் தலைமுடியைக் கருநிறமாக்க முயலுவதில் இயப்பு ஏதும் இருப்பதற்கு இல்லை. ஆனால், இயல்பாகவே முதுமையில் தலைமயிரானது கொக்குக்கு ஒக்க நரைத்துப் போகும். முதுமை வந்துவிட்ட பின்னராவது, நல்வினைகளைச் செய்து, போகும் நெடுவழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். சிலர் நரைத்து வெளுத்து முடியைக் கறுப்பாக்குவதில் சிந்தனையைச் செலுத்துவார்கள். நல்வினைகளைச் செய்யத் தலைப்பட மாட்டார்கள். அறிவு உடையவர்கள், எப்படியும் தமக்கு முதுமை வரும் என்றும், அதன் அறிகுறியாக முடி நரைத்துப் போகும் என்பதை உணர்ந்து, இளமைக் காலத்திலேயே நற்செயல்களைச் செய்து ஆக்கத்தைத் தேடிக் கொள்வார்கள்.

 

"நரைவரும் என்று எண்ணிநல்அறிவாளர்

குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்".             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பழுதற்ற அறிவினை உடையோர்தமக்கு மூப்பு வரும்அதற்கு அறிகுறியாக தலைமுடி நரைத்துப் போகும் என்பதை அறிந்துஇளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில் பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம் நீங்குதல் இல்லாததும்நிலையில்லாததும் ஆகிய இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல்இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி,உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள்,முதுமை வந்துதலைமுடியும் நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

 

            இளமைப் பருவத்தை அறவழியில் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள்பின்பு மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து.இளமையில் கருத்து இருந்த தலைமயிர்முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால்அவன் "நரன்" என்ற பெயரை உடையவன் ஆயினான். 

 

     மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கைபன்றியானைகரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். காரணம், அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளில் முழுகி இருப்பது இல்லை. 

 

            எல்லாம் இருந்தாலும், இன்னமும் வேண்டும் என்று ஆசைக்கடலில் அகப்பட்டு அலைபவன் மனிதன் மட்டும்தான். ஆசைக்கடலில் அகப்பட்டுக் கொண்டதால், அருள் அற்ற அந்தகன் ஆகிய இயமனின் கையில் உள்ள கயிற்றினால் பிணிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறந்த அல்லல் படுகின்றான். 

 

"ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்ல்ல்லபட இருந்தேனை, நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுகேன், ஈசர் பாகத்து நேரிழையே!".   ---அபிராமி அந்தாதி.

 

     முதுமை வந்துவிட்டது என்பதை உணர்ந்த பிறகாவது, ஆசைகளை விட்டு, அருள் வழியில் முயலுதல் வேண்டும்.

 

     திருக்காளத்தி மலையை இருப்பிடமாகக் கொண்டு, நாகன் என்னும் மலையரசன் வேடர்களுக்குத் தலைவனாய் ஆட்சிபுரிந்து வந்த காலத்தில், மூப்பு வந்து சேரவும், வேட்டைத் தொழிலில் முயற்சி குன்றியவன் ஆனான். அந்நிலையில்அங்குள்ள மலைகளின் பரந்த பக்கங்களிலும்பயிர் விளையும் காடுகளிலுமாக எங்கும் கொடிய பன்றிபுலிகரடி. காட்டுப்பசுகாட்டெருது,  கலைமான் ஆகிய இவைமுதலாக உள்ள விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்திடஅது கண்டுமுறையான வேட்டையின் தொழில் இம்முறை தாழ்ந்து போனதால் இந்த நிலை நேர்ந்த்து என்று அங்குள்ள வில்லேந்திய வேடர்கள் அனைவரும் திரண்டுதங்கள் குலத்தின் தலைவனாக உள்ள நல்ல நாகன்பால் சென்று, நேர்ந்த அழிவு பற்றிச் சொன்னார்கள்.

 

     வேடர்கள் சொன்னதைக் கேட்டதுமே, நாகன் என்பான், தன்னைப் பற்றி வரும் தனது மூப்பின் தொடர்ச்சியை நோக்கிதனது மக்களைப் பார்த்து, "என் மக்களே! மூப்பினால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலவில்லை. ஆதலின், என் மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக ஆக்குகின்றேன். ஏற்றுக் கொள்ளுங்கள்"என்றான்.

 

     சிலர், முதுமை வந்தாலும், தனது நிலையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் காணலாம். முதுமை வந்த பிறகாவது, பொறுப்புக்களை இளையவர்களிடம் விட்டு, அவர்களை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.

 

     நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். நரைத்த முடியை மாற்றுவதில் கருத்து வைத்தல் கூடாது. மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்துசன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "நரை வந்து விட்டதேஇனி விரைந்து முதுமையும் மரணமும் வருமேகூற்றுவன் பாசக் கயிறும் வருமேஇதுவரையிலும் எனது ஆவி ஈடேற்றத்திற்கு உரிய சிந்தனையை அறிவில்லாத நான் கொள்ளவில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

     வள்ளியம்மையார் வாழ்ந்திருந்த "குறவர் கூட்டதில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று, குருவி ஓட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர" விரும்பி, கிழவேடம் தாங்கி வந்த முருகப் பெருமானைப் பார்த்து, "நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வு சற்றும் இலீர்!" என்று சாடினார். (நத்துப் புரை முடி --- சங்குபோல் நரைத்த முடி) முடி நரைத்த பிறகாவது நல்லுணர்வு வரவேண்டும். 


     பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான்
பாண்டிய நாட்டின் ஒரு மூலையில் இருந்தபிசிர் என்னும் சிற்றூரில்   வாழ்ந்து வரும் காலத்தில்சோழ நாட்டின் உறையூரில் இருந்து அரசு புரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று அவனைக் காண வேட்கை கொண்டு இருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வி உற்றுஅவரிடத்தே பெருநட்பினைத் தன் உள்ளத்தே வளர்க்கலானான். இருவருடைய நட்பு உணர்ச்சிகள் தாமே மிக்குஒருவரை ஒரருவர் தம் பெயரைக் கூறுமிடத்துதத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றனர். "நான் கோப்பெருஞ்சோழனின் நண்பன் ஆகிய பிசிராந்தையார்" என்பார் புலவர். "நான் பிசிராந்தையாரின் நண்பன் கோப்பெருஞ்சோழன்" என்பான் அரசன்.

 

     பிசிர் என்னும் ஊர் பாண்டிய நாட்டின் ஒரு மூலையில் உள்ளது. உறையூர் சோழ நாட்டில் உள்ளது. இடையிலே வெகு தொலைவு உள்ளது. ஒருவரை ஒருவர் காணாத நிலையிலும்,குண நலன்களைக் கேள்வி உற்ற நிலையிலேயே நட்பு உணர்வு பூண்டு இருந்தனர் இருவரும்.

 

"புணர்ச்சிபழகுதல் வேண்டாஉணர்ச்சி தான்

நட்பு ஆம் கிழமை தரும்"         --- திருக்குறள்.

 

     நட்புக் கொள்ளுவதற்கு ஒருவரை ஒருவர் புறத்திலே தொடர்பு பூண்டும்பலகாலம் பழகியும் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒத்த உணர்வு உடையவராக இருந்தாலே நட்பு என்னும் உரிமை உண்டாகும்.

 

            கோப்பெருஞ்சோழன்தன்னோடு இருந்தவர்களின் மாறுபட்ட மனப் போக்கால்உள்ளம் வருந்தி,  வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். (வடக்கு இருத்தல் - வடக்கு நோக்கிஊண் உறக்கம் தவிர்த்துதவத்தில் இருத்தல்) சான்றோர் பலர் அவனுடன் வடக்கிருந்தனர். அந்த நேரத்தில்அவன்தனது ஆருயிர் நண்பரான பிசிராந்தையாரைக் காண விழைந்தான். தனது நண்பர் பிசிராந்தையாரும் வடக்கிருக்க வருவார் என்று உணர்ந்துஅவருக்கும் ஓரிடம் ஒதுக்கி வைக்கச் செய்தான்.   

 

     ஒத்த உணர்ச்சியினர் ஆதலால்பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதை அறியாமல்அனைக் காண வேண்டிப் பாண்டிய நாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்வதற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டான். அவனுக்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனம் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும்அருகில் இருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது சிலர், “சான்றோரே! நாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்விப் படுகின்றோம்.  உங்கள் வயதும் அதிகமாக உள்ளது. உங்கள் வயதைப் பார்க்க,உங்கள் தலைமுடி நரைத்து இருக்க வேண்டும். ஆனால்,நரை சிறிதும்  காணப்படவில்லையே! காரணம் என்னவோ?” என்று வினவினார்கள்.  

 

     "தலைமுடி நரைப்பதற்குக் காரணம் முதுமை அல்ல. மனக் கவலையே. எனக்கு மனக் கவலை கிடையாது. அதற்குக் காரணம் என்னுடைய குடியிலோ,  ஊரிலோ,  நாட்டிலோ கவலை உண்டாவதற்குரிய நிலைகள் இல்லை. எவ்வாறு என்றால்என் குடியில் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் ஏவலர்களும் இளவல்களும் எனது குறிப்புப் பிழையாது ஒழுகுபவர்கள். எங்கள் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையை உடைய சான்றோர் பலர் உள்ளனர். என் நாட்டு வேந்தனும் அன்பு உடையவன்அறம் அல்லாதவற்றைச் செய்ய மாட்டான். அதனாலேயே எனது அறிவும் சிறந்து விளங்குகின்றது" என்று பின் வரும் பாடலால் காட்டினார். புறநானூற்றில் வரும் பாடல் இது.

 

"யாண்டுபல ஆகநரை இல ஆகுதல்

யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,

யாண்கண்ட அனையர் என் இளையரும்வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே". 

 

இதன் பதவுரை --- 

 

யாண்டு பல ஆக --- வாழ்ந்து பல ஆண்டுகள் ஆகி வயது முதிர்ந்த நிலையிலும்நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என --- உமக்குத் தலை நரை இல்லாமல் இருக்கின்றதேஇதற்குக் காரணம் என்ன என்று,வினவுதிர் ஆயின் --- கேட்பீர்கள் ஆனால்சொல்வேன்என் மாண்ட மனைவியொடு மக்களும் நிரம்பினர் --- என்னுடைய மனைவி மாட்சிமைப்பட்ட குணங்களை உடையவள்,  எனது புதல்வரும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள் யான் கண்டனையர் என் இளையரும் --- நான் நினைப்பது போலவே,என்னுடைய குறிப்பை அறிந்து வேலை செய்பவர்கள் எனது பணியாளர்களும்இளவல்களும்.வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் --- என் நாட்டு  அரசனும் முறை அல்லாதனவற்றைச் செய்யமாட்டான். குடிமக்களைக் காக்கும் தொழிலையே அன்போடு செய்வான்;  அதன் தலை --- அதற்கு மேலாக,யான் வாழும் ஊர் --- நான் வாழுகின்ற ஊரில்  ஆன்று அடங்கி அவிந்த கொள்கை --- நற்குணங்களால் அமைந்துபணிய வேண்டிய உயர்ந்தாரிடத்துப் பணிந்துமனம் மொழி மெய்களால் அடங்கிய கோட்பாட்டினை

உடையசான்றோர் பலர் --- சான்றோர் பலர் உள்ளனர்.

 

     இன்றைய விஞ்ஞானம் தலை நரைப்பதற்குக் காரணம் கவலைமன அழுத்தம் என்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்என் மனைவி நல்லவள். என் மக்கள் கற்றவர். பணியாளர்கள்இளவல்கள் என் கருத்தின் வழி நடப்பவர்கள். நாட்டினை ஆளுகின்ற அரசன் நல்லவன்அன்பு உடையவன். நான் வாழும் ஊரில் உள்ளவர்கள் சான்றோர்கள். எனவேஎனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்குத் தலைமுடி நரைக்கவும் இல்லை என்கின்றார். எவ்வளவு பெரிய உண்மை.

 

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...