048. வலி அறிதல் --- 09. அளவறிந்து வாழாதான்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தனக்கு உள்ள பொருளின் அளவை அறிந்துஅதற்குப் பொருந்த வாழமாட்டாதவனது வாழ்க்கையானதுஉள்ளது போலத் தோன்றி,இல்லை என்றாகி,சுவடும் இல்லாமல் கெட்டுவிடும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தனக்கு வருகின்ற வருவாயில் மிகுத்து வைக்க முடியாவிடினும்வருகின்ற வருவாயைப் பிறர்க்குக் கொடுத்தும்தானும் உண்டு வாழவேண்டி இருக்கஅவ்விதம் செய்யாதுவருவாய்க்கு மேற்பட்ட பொருளைக் கடன் முதலியன கொண்டு செலவழித்துப்பலர் காண இடம்பமாக (ஆடம்பரமாக) நடித்துஉள்ளே ஒன்றும் இல்லாமல்கடன் கொடுத்தவர்களால் அலைக்கழிக்கப்பட்டுசிலநாள் வாழ்ந்துபின்னர் எல்லாவற்றையும் இழப்பது உலக நிலையில் காணப்படுவதே. வருவாய்க்குத் தக்க அளவாகச் செலவழிப்பவனேஉலகத்து உயிர் வாழ்பவன் என்றும்மற்றவர் ஒளி (புகழ்) குறைந்து போவதற்கு உரியவர் என்றும் அறிதல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கைஉளபோல

இல்ஆகித் தோன்றாக் கெடும்.            

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

         அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை--- தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : 

 

     உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்--- உள்ளன போலத் தோன்றிமெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.

 

    (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றிஎன்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.)

 

ஆன முதலில் அதிகம் செலவானால்,

மானம் அழிந்து,மதிகெட்டுப் --- போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய்,ஏழ்பிறப்புத் தீயனாய்,

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.   --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     ஆன முதலில் செலவு அதிகம் ஆனால் --- தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன்மானம் அழிந்து --- பெருமை கெட்டுமதி கெட்டு --- அறிவு இழந்துபோன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் --- தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகிஏழ் பிறப்பும் தீயன் ஆய் --- எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி,நல்லார்க்கும் பொல்லன் ஆம் --- (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்நாடு --- (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...