இடும்பு அழிவைத் தரும்

                                                              இடும்பு அழிவைத் தரும்

-----

 

     "இடும்பு" என்னும் சொல்லுக்குஅகந்தைகொடும் செயல்குறும்புஆணவம் என்னும் பொருள்கள் உண்டு. இடும்பை என்னும் சொல்லுக்குதுன்பம் என்று பொருள். இந்த இடும்பு என்பது உயிரினிடத்தில் இயல்பாகவே பொருந்தி உள்ள ஆணவத்தின் விளைவு ஆகும். ஆணவம்அஞ்ஞானம்அகந்தைஅவிச்சைஅறியாமை எல்லாம் ஒரு பொருளையே தருவன.

 

     சைவ சித்தாந்தம் என்றும் அழிவில்லாநித்தியப் பொருள்களாக,மூன்று பொருள்களைக் குறிக்கும்.உண்மைப் பொருள்களாகிய அவற்றை மேற்பொருள்இடைப்பொருள்கீழ்ப்பொருள் என்றும் சொல்லப்படும். மேற்பொருளாய் உள்ளது இறைவன். இடைப்பொருளாய் உள்ளவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள். மலம் என்றால் அழுக்கு என்று பொருள்.

 

      இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும்பொருளாக உள்ளான். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம்நீர்தீகாற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும்விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைத்தைப்போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுநிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நின்றுஎல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால்இறைவனே "மேற்பொருள்ஆவான்.

 

     உயிரைஆன்மா என்றும்சீவன் என்றும்சொல்லுவர். உயிர்கள் எண்ணற்றவை. அவை இறைவனிடத்தில் அடங்கிருப்பவை. இறைவனது பெருநிறைவு"வியாபகம்"எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை "வியாப்பியம்"எனப்படும். இறைவன் வியாபகம்உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிரானதுதனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினை இயல்பாகவே பெற்று இருப்பதால்,அறிவு விளக்கம் பெறாமல்அறிவு மயக்கதோடு துன்புறும் பிறவிகள் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு விளக்கம் உண்டாக உண்டாககீழ்ப்பொருளான மலங்களில் இருந்து  விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்பத்தை அனுபவிக்கும். இவ்வாறு மேற்பொருள் கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய்அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் "இடைப்பொருள்எனப்பட்டது.

 

      மேற்பொருளாகிய இறைவனும்இடைப்பொருளாகிய உயிரும் அறிவு உடைய பொருள்கள். அவை "சித்து"எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம்மாயைகன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை "சடம்"எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நின்று,பின்னர் அகற்றப்படுவதால்மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

 

      அவற்றில் ஆணவம் என்பது உயிரினடத்தில் இயல்பாகவே பொருந்தி உள்ளதால்அது "மூலமலம்" எனப்பட்டது. இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்யமாட்டோம்.

 

     "கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்" என்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். உள்ளத்தில் வஞ்சகம் இருந்தால்அது துன்பத்தையே தரும் என்னும் எண்ணம் இருக்க வேண்டும். ஆனால்உயிருக்கு இயல்பாகவே உள்ள அறியாமையானது, "யாரும் காணவில்லையே" என்று எண்ண வைக்கும். யாரும் காணாமல் வஞ்சகச் செயல்களைச் செய்வது அறிவு அல்ல. நாம் செய்யும் வஞ்சகச் செயல்களை "எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்று அங்கு குலைவது அறிவு" என்கின்றார் குமரகுபர அடிகளார்.  எங்கும் உள்ள பொருள் நம்மைக் கண்காணிக்கின்றது என்னும் எண்ணம் எழவொட்டாதபாடி உயிரினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள்தான் "ஆணவமலம்எனப்படுகிறது. எல்லா உயிர்களிடத்திலும் ஆணவமலம் இயல்பாகவே பொருந்தி உள்ளது. நீரை மூடும் பாசி போலவும்கண்ணை மறைக்கும் இருள் போலவும்உயிர்களின் அறிவை மறைத்து நிற்பதுஆணவம்அறிவு மயக்கம் உள்ள உயிர்களைத் தனது ஆற்றலால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவமலமே கும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலமாக இருப்பதால்இது "மூலமலம்எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்பதால்ஆணவம்,"சகசமலம்"ன்றும் சொல்லப்படும். கண்ணை மறைப்பதுபுற இருள்.அறிவை மறைக்கும்ஆணவம்அகவிருள் ஆகும். எனவே,ஆணவம், "இருள்மலம்" என்றும் சொல்லப்படும்.

 

     ஆணவமலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயைமாயையே உயிருக்கு உடம்பாகவு ம்உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்துஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறதுமாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் வலிமை சிறிது மடங்கிய போதுஆன்மா சிறிது அறிவைப் பெறுகிறதுஅகநோக்கில் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் இறைவனையும் உணரமாட்டாமல்புறத்தே உள்ள உலகப்பொருள்களையே நோக்கி நிற்கிறது.

 

     இந்நிலையில் ஆணவமலம் திரிபு ணர்வைத் தருகிறதுதிரிபுணர்வு எனினும்விபரீத அறிவு எனினும்மயக்கவுணர்வு எனினும் ஒன்றேஇத் திரிபு ணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் முதலாகக் கருதி "நான்நான்என்று முனைத்து எழுகிறதுஅம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

 

      மாயை உடம்பாயும் உலகப்பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறதுகன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத்துன்பங்களைத் தந்து மயக்குகிறதுஆணவம் 'நான்', 'எனதுஎன்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறதுநான் என்பது அகப்பற்றுஎனது என்பது புறப்பற்று. இந்த இரண்டு பற்றுக்களும் அற்றால்தான்ஆன்மா உயர்நிலையை அடைய முடியும்.

 

     இந்த நான் என்னும் அகங்காரம் ஆகிய புறப்பற்றும்எனது என்னும் மமகாரம் ஆகிய அகப்பற்றும் உள்ளவரையில் ஆன்மா பிறருக்குத் துன்பத்தை உண்டாக்குவதோடுதான் இன்புற்று இருப்பதுபோல் இருந்துமுடிவில் தீராத துன்பத்தில் ஆழ்ந்து அழிந்து போகும். இதைப் புராண வராலாறுகளைக் காட்டி உணர்த்த, "குமரேச சதகம்" என்னும் நூலில் பின்வருமாறு ஒரு பாடல் அமைந்து உள்ளத.

 

"சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன் வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,

 

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,

 

ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?

 

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".     --- குமரேச சதகம்.

 

இதன் பொருள் ---

 

     மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வர புத்திர - மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணைக் கொண்டு எரித்து,பின்னர் அவனுக்குஅருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்து அவதரித்தவரரே! வடிவேலவா - கூர்மையான வேலை உடையவரே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் நெடிய மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

      சூரபத்மன் பலமும் - சூரபதுமனுடைய வலிமையும்,  இராவணன்  தீரமும் - இராவணனுடைய நெஞ்சுறுதியும்,  துடுக்கான கஞ்சன் வலியும் - துடுக்குத்தனம் மிகுந்த கஞ்சனுடைய  ஆற்றலும் துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் - துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும் தொலையாத வாலி திடமும் - வாலியின் அழிவற்ற வல்லமையும் பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் - கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும் மதுகைடவர் பாரிப்பும் - மது கைடவர் என்னும் அசுரர்களுடைய பெருமையும்மாவலி தன் ஆண்மையும் - மாபலிச் சக்கரவர்த்தியின் வீரமும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் - சோமுக அசுரனிடத்தில் இருந்த வலிமையும் ஏர் அணவு கீசகன் கனதையும் - வளர்ச்சி பொருந்திய கீசகனின் பெருமையும் திரிபுரர் எண்ணமும் - முப்புராதிகளின் நினைவும் தக்கன் எழிலும் - தக்கனுடைய உயர்வும் இவர்களது சம்பத்தும் நின்றவோ - இவர்கள் படைத்து இருந்த செல்வங்களும் நிலைபெற்று இருந்தனவோ?

அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?

 

     இப்பாடலின் பொருளைச் சற்று விரிவாகப் பார்ப்போம். காசிப முனிவருக்கு மாயாதேவியிடம் தோன்றிய சூரபதுமன்தனது தம்பியர் ஆன சிங்கமுகன்தாரகாசுரன் ஆகியவர்களுடனே வளர்ந்துசிவபரம்பொருளைக் குறித்துத் தவம் செய்து பெற்ற வரத்தினால் செருக்குக் கொண்டுதேவர்களை எல்லாம் சிறைப்படுத்திதென்கடலில் மகேந்திரபுரி என்னும் இடத்தில் இருந்துகொண்டு ஆயிரத்து எட்டு அண்டங்களையும் ஆட்சி புரிந்துதேவர்க்கும் முனிவர்க்கும் பல வகையான தீங்குகளைச் செய்து வருகையில்தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஐம்முகச் சிவத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த ஆறுமுகச் சிவம்அரக்கர்களோடு போர் புரிந்துசூரபதுமனாதியர்களை அழித்துதேவர்களை சிறையில் இருந்து விடுவித்து அருள் புரிந்தார். சூரபதுமன் ஆணவமலம். தாராகாசுரன் மாயா மலம். சிங்கமுகன் கன்ம மலம் என்று ஆன்றோர் சொல்லுவர். இந்த மும்மங்களையும்முருகப் பெருமான் திருக்கரத்தில் விளங்கிய ஞானசத்தி ஆகிய வேல் அழித்து ஒழித்தது.

 

     பலவகை வலிமைகளையும் மிகுதியாகப் பெற்று இருந்த இராவணன்இராமபிரானால் அழிந்தான். காலநேமி என்னும் அசுரனது அம்சமாகப் பிறந்த கம்சன்பல அரக்கர்களுடன் கூடி உலகத்தில் பல தீங்குகளைச் செய்து வந்தான். அவனுக்கு மருமகனாய் அவதரித்த கண்ணபிரான் அவனைக் கூட்டத்தோடு அழித்தார். இரணியன் பெற்ற வரபலம் முழுவதும்நரசிங்கமூர்த்தியினால் நிலைகுலைந்து போனது. தன்னுடன் எதிர்த்தவர்க்கு உள்ள பலத்தில் பாதி தன்னிடத்தில் வந்து பொருந்துமாறு வரம் பெற்று இருந்து வாலிஇராமபிரான் விடுத்த அம்பினால் மாய்ந்தான். துரியோதனாதியர் நூற்றுவரையும்கண்ணன் திருவருள் துணையினால் பாண்டவர்கள் வீழ்த்தினர். ஆதிகாலத்தில் தோன்றிய மதுகைடபர் என்னும் இருவரும் திருமாலை எதிர்த்துப் பலகாலம் போர் புரிந்தனர். திருமால் அவர்களைத் தனது தொடையால் இடுக்கிகீழே தள்ளிகால்களால் மிதித்துத் தவைத்து வதைத்தார்.

 

     மாபலி என்னும் அசுர குலவேந்தன் தனது வல்லமையால் இந்திரனையும் வென்று மூவுகையும் அரசாண்டு கொண்டு இருந்தபோதுதேவர்களின் வேண்டுகோளின்படிக்குஅவனை அழித்து அருளகுள்ள வடிவமான வாமன அவதாரத்தை மேற்கொண்டுமாபலியிடம் சென்றுமூன்று அடி மண்ணைக் கேட்கஅவன் அதற்கு இசைந்த உடனேதிரிவிக்கிரமனாக மேலுலகத்தைத் தனது ஒரு திருவடியாலும்பூலோகத்தைத் தனது மற்றொரு திருவடியாலும் அளந்துமூன்றாவது அடிக்காகஅவன் தலைமேல் திருவடி வைத்துஅவனைப் பாதாளத்தில் அழுத்தினார். முன்னொரு காலத்தில் பிரமன் உறக்கத்தில் இருந்தபொழுதுசோமுகன் என்னும் அசுரன் வேதங்களை எல்லாம் கவர்ந்துகொண்டுகடலினுள் சென்று மறையபிரமன் முதலான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிதிருமால் ஒரு பெரிய மீனாக அவதரித்துஅந்த அசுரனை அழித்துவேதங்களை மீட்டுத் தந்துபிரமனுக்கு உபதேசம் புரிந்து அருளினார். 

 

     விராட மன்னனது மைத்துனனும்சேனைத் தலைவனும்மகாபலம் பொருந்தியவனும் ஆன கீசகன்பாண்டவர்களின் அஞ்ஞாதவாச காலத்தில்விராடமன்னனின் தேவிக்கு வண்ணமகளாய் மாறுவேடத்தில் இருந்த பாஞ்சாலியைப் பார்த்துஅவள் அழகில் மயங்கிமோகம் கொண்டான். அவளைப் பலாத்காரம் செய்த கீசகனையும் அவனது தம்பிமார் நூறு பேரையும் ஓர் இரவில் பீமன் வதைத்தான். 

 

     தாரகாட்சன்வித்யுன்மாலிகமலாட்சன் என்னும் அரக்கர்கள் மூவரும் தவம் செய்து பிரமனிடம் இருந்து பெற்ற வரத்தின் பலத்தினால்வானத்தில் பறந்து செல்லும் மூன்று நகரங்களை அமைத்துதாம் நினைத்த இடங்களில் பறந்து சென்று பலரையும் துன்புறுத்தி வருகையில்அவனது கொடும் செயலுக்கு ஆற்றாத தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிசிவபரம்பொருள் முப்புரங்கையும் சிரித்தே எரித்து அருள் புரிந்தார். பிரமனது மகனான தக்கன் தனது மகளைச் சிவபிரானுக்குத் திருமணம் செய்து கொடுத்துபின்னர் சிவத்தோடு மாறுப்பட்டுஅவரை அவமதித்துச் செய்த வேள்வியினை வீரபத்திரரை அதிட்டித்து அழித்து அருளினார்.

 

     முன்னொரு காலத்தில் சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருளை உணர்த்தும் முகத்தான் சின்முத்திரை காட்டி யோகநிலையில் இருந்தார் சிவபரம்பொருள். பிரமனது ஏவலால்அவரது தவநிலையைக் குலைக்கமன்மதன் மலர் அம்புகளை எய்தான். சிவபரம்பொருள் சினந்துஅவனைத் தனது நெற்றிக்கண்ணை விழித்து எரித்துச் சாம்பல் ஆக்கினார்.

 

     இப்படிபல அசுரர்களும் அழியக் காரணமாக இருந்ததுஅவர்களிடத்தில் பொருந்தி இருந்து ஆணவத்தால் உண்டான, "நான்" என்னும் அகந்தையே என்பது மேற்குறித்த பாடலால் சொல்லப்பட்டது. நம்மிலும் அரக்க குணம் பொருந்தி உள்ளது. அதற்கு "இடும்பு" என்று பெயர். இடும்புதான்இடும்பைக்குக் காரணமாக உள்ளது. இடும்பை என்பதற்குத் "துன்பம்" என்று பொருள். இடும்பையைத் தருகின்ற இடும்பினைஅருள்நூல்களை ஓதி உணர்ந்துஇறையருளால் நல்லறிவு பெற்றுநற்கதியை அடையவேண்டும்.

 

     ஆணவமலத்தைப் பற்றி ஒரு விளக்கம். இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம்திடீரென்று விளக்குகள் அணைகின்றனஎங்கும் ஒரே ருள்பக்கத்தில் உள்ள பொருள்கூடத் தெரியவில்லைமெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம்சில அடி தூரம் நடந்துஅங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக்கொள்கிறோம்வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறதுஅது நமக்குத் தெரியவில்லைஅது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறதுஅதையும் தாண்டிச் செல்லும்போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம்பாம்புதானோஎன்னவோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம்நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றனஅந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம்ருளில்சுவர் சுவராகத் தோன்றவில்லைநாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லைகயிறு கயிறாகத் தோன்றவில்லைஎல்லாம் இருளாகத் தோன்றுகின்றனஇருளானது அவற்றின் தன்மையை மறைத்துஎவையும் தானேயாய்த் தோன்றும்படி நிற்கிறதுது  புற இருளின் தன்மை. இறைவன்உயிர்உலகம் ஆகியவற்றின் தன்மையைத் தெரிய வொட்டாதபடி உயரினது அறிவை மறைத்து நிற்கின்ற அக இருள் ஆணவம் எனப்படுகிறதுஅது பிறவித் துன்பத்தை மறைத்துஉடம்பை நிலை என்று கருதிஅதனால் அனுபவிக்கின்ற இன்பத்தை நிலையானது என்று காட்டி அதன் மீது ஆசை கொள்ளும்படி செய்துஅழியாத வீட்டின்பத்தை மறைத்துஅதைப் பெறுதற்குரிய வழியில் செல்ல ஒட்டாதபடித் தடுக்கும்இறைவனைப் பற்றிய எண்ணம் எழாதபடி அறிவை மறைத்து அகந்தையை உண்டாக்கி மயக்கும்.

 

      இந்த ஆணவத்தின் செயற்பாட்டினைச் சூரபதுமனின் நடத்தையில் நன்கு காணலாம்போர்க்களத்தில் சூரபதுமன் முருகப்பெருமானது பேருருவக் காட்சியினைக் கண்டு நல்லுணர்வு பெற்றான்இவர்தான் யாவர்க்கும் தலைவர் என்று தெளிந்தான்இவரை வலம் வரவேண்டும்கை குவித்து வணங்க வேண்டும்இவருக்கு அடிமையாய் வாழவேண்டும் என்றெல்லாம் எண்ணினான்ஆனால்அவ்வாறு செய்யவில்லைமாண்பு இறந்த மானம் அவனைத் தடுத்து விட்டதுஅது ஆணவத்தின் வெளிப்பாடுதான்அகந்தை பழையபடி தலையெடுத்ததுஎன்னைப் போன்ற வீரன் யார் இருக்கமுடியும்முருகப்பெருமானுக்கு நேர் நின்று போர் செய்தேன் என்ற புகழ் ஒன்றே எனக்கு எப்போதும் இருக்கும்இந்த உடம்பு நில்லாதுஇது போனால் போகட்டும் என்று சொல்லிப் போர் செய்யப் புறப்பட்டான்நன்மை தராது எனத் தெரிந்த பின்பும்முன் தொடங்கிய செயலை விடாமல் செய்து முடிக்கப் புறப்பட்ட சூரபதுமன் ஆணவத்திற்கு எடுத்துக்காட்டு

 

     இடும்பு ஒருவனிடத்தில் இருக்குமானால்அது தொடக்கத்தில் பிறருக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும். முடிவில் இடும்பு உள்ளவன் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான். இதைத்தான்மேலே குறிப்பிட்ட பாடல் விளக்குகின்றது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...