வறுமையின் பெருமை

 


வறுமையின் பெருமை

-----

 

     மெய் வாய் முதலிய பொறிகள் நுகர்வதற்கு உரிய போகப் பொருள்கள் ஏதும் இல்லாமையே வறுமை என்று சொல்லப்படுகின்றது.  நல்ல அறிவு உள்ளவர்கள்தமக்கு உள்ள பொருள்களையும் வேண்டாம் என வெறுத்து விடுத்துஅந்த இன்மை என்னும் வறுமையை விரும்பி ஏற்றுக் கொள்ளுகின்றனர். 

 

     உலகப் படைப்பு அதிசய வினோதம் மிக்கது.  ஒரு பொருள் உண்டு என்றால் அதற்கு எதிர்பொருளையும் உடையது. பகல் X  இரவுபிறப்பு X  இறப்புவிழிப்புX  உறக்கம்ஒளி Xஇருள்புகழ் X  பழி,புண்ணியம்Xபாவம்மெய் பொய்மேல்Xகீழ்நன்மைXதீமை, மேதை Xபேதை, இன்பம்Xதுன்பம்பெருமைசிறுமைவெற்றிதோல்விகல்விX  மூடம்செல்வம் X  வறுமைஎன இவ்வாறு எல்லாம் இரட்டைகளாய்ப் பின்னிப் பிணைந்து உள்ளன. 

 

     நிலம்நீர்தீகாற்றுவான் என்னும் ஐந்து பூதங்களும் தம்முள் மாறுபாடு உடையன. ஆதலால் அவற்றின் கூறுபாடுகளும் வேறுபாடுகள் உடையனவாய் இருக்கின்றன. 

 

     தனக்கு இதமானதை மகிழ்ந்து கொள்ளுவதும்இதம் அல்லாததை இகழ்ந்து தள்ளுவதும் மனிதனிடம் இயல்பாக அமைந்து இருக்கின்ற உணர்வு ஆகும்.  உலக போகங்களை உதவி வருகின்ற பொருள் மேல் மனிதன் பேராசை கொள்ளுகின்றான். அது இல்லாத நிலை மிகவும் பொல்லாதது என்று மிகவும் அஞ்சுகின்றான். அந்த அச்சம் உச்சநிலையில் எங்கும் பரவிகொச்சை நிலையை அடைகின்றது. அந்த கொச்சை நிலைதான் வறுமை என்று உணர்கின்றான். வறுமை என்றால்வறண்டதுவற்றி இருப்பது என்று பொருள்.  இந்த வறுமைக்கு எதிர்மறையாய் நிற்பது செல்வம் என வந்தது. செல்வத்தை விரும்பாதவர் உலகில் மிகவும் அரிது. 

 

     எல்லாவற்றையும் துறந்து பாம்பொருளே தஞ்சம் என்று நெஞ்சம் துணிந்து கெடுவனம் போன பெரிய துறவிகளும்அரிய தவசிகளும் செல்வத்தைக் கண்டபோது உள்ளம் மயங்கி,அதனை விழைந்து கொள்ளுகின்றனர்.  ஆசையைக் கடந்த ஞானிகள் என்று சொல்லிக் கொள்வோரும் பொருளில் மருள் கொண்டுள்ளமையை இன்றும் காணலாம். பணத்தைக் கண்டபொழுதே வாயைப் பிளந்து,ஆசை மண்டி நிற்கின்றனர். செல்வத்தை இவ்வாறு எவரும் எவ்வாறு அவாவி வருகின்றனரோ,அவ்வாறே வறுமையைக் கண்டு யாவரும் அஞ்சி நிற்கின்றனர். 

 

     "கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்"என்று குலசேகரன் என்னும் சேரமன்னர்அரசசெல்வத்தை வெறுத்து விட்டு வறுமை நிலையில் நின்று இன்பம் அடைந்திருக்கின்றார். அவர் குலசேகர ஆழ்வார் என்று போற்றி வணங்கப்படுகின்றார். அவர் சேரமன்னராக இருந்திருந்தால் யாரும் இன்று அவரைப் போற்றி வணங்கமாட்டார்கள். மணிவாசகரும்தாயுமானவரும் சிறந்த அமைச்சர் பதவியையும்உயர்ந்த செல்வங்களையும் வேண்டாம் என்று தள்ளி விட்டு வறுமை நிலையில் நின்றே பெருமை பெற்று உள்ளனர்.அாசருக்கும் மேலான செல்வத்தைப் படைத்து. மிக உயர்ந்து இருந்த பட்டினத்து அடிகளார் அனைத்தையும் கணப்பொழுதில் துறந்துஅகிலமும் தொழும் ஒப்பற்ற ஞானியாகப் போற்றி வணங்கப்படுகின்றார்.

 

     'காசு'என்னும் சொல்லுக்குக் "குற்றம்" என்று ஒரு பொருளும் உண்டு. பொருள் மிகப் படைத்து இருந்தால்குற்ற நெறியிலேயே மனிதன் சொல்லத் துணிவான். இயல்பாகவே உயிருக்கு அமைந்துள்ள ஆசை காரணமாகபோதும் என்ற மனம் ஒருபோதும் வராது. இன்னமும் பொருள் வேண்டும் என்னும் ஆசையால்மனித சமுதாயத்திற்கே கேடு விளைக்கவும் துணிவான். இன்னமும் பொருளாசையால் மனித சமுதாயத்திற்குக் கேடு விளைந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆள்பவனுக்கும்ஒரு வேளை உணவுக்காக,காட்டில் மிகுந்த துன்பத்துக்கு இடையில் வேட்டை ஆடித் திரிபவனுக்கும் தேவை என்னவோ உடுப்பதற்கு இரண்டு ஆடைகளும்உண்பதற்கு உழக்கு அரிசியும் தான். அநனால்நல் வழியில் ஈட்டிய பொருளை இல்லாதோர்க்கும் கொடுத்து அவர்கள் மகிழ வாழவேண்டும். நாமே அனுபவிக்கலாம்நமது சந்ததிக்கே பொருள் உதவட்டும் என்று எண்ணினால் கேடுகள் பல விளையும் என்று புறநானூறு கூறுகின்றது.

 

     இதில் இருந்து செல்வத்தின் சிறுமையையும்வறுமையின் பெருமையையும் நன்கு தெளிந்து கொள்ளலாம். உலக நோக்கில் கொடுமையாகத் தோன்றுகின்ற வறுமையைஅறிவு ஒழுக்கங்களில் சிறந்தவர்கள் சிலர் இனிமையாகத் தழுவிக் கொள்ளுகின்றனர்.

 

"இன்மை ஒருவற்கு இளிவு அன்றுசால்பு என்னும்

திண்மை உண்டாகப் பெறின்".     

 

என்று வறுமையின் சிறப்பை இவ்வாறு அருளினார் திருவள்ளுவ நாயனார். சான்றாண்மை என்னும் வலிமை அமைந்திருக்குமானால்ஒருவனுக்கு வறுமை என்பது இகழ்ச்சியைத் தராது. இகழ்ச்சியைத் தராது என்றதானல்புகழ்ச்சியைத் தரும் என்பது விளங்கும்.  எனவேவறுமையின் பெருமை விளங்கும்.

 

     வறுமை சிறுமை தரும்துன்பம் புரியும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அதனைப் பெருமை ஆகவும் இன்பமாகவும் மகான்கள் விரும்பி ஏற்று மகிழ்கின்றனர்

 

     பொருளாசை ஒன்றையே கருத்தில் கொண்டுஅறம் அல்லாத வழிகளில் பொருளை ஈட்ட நினைப்போரும்அடுத்தவர் பொருளை எப்படியாவது அபகரித்து வாழவேண்டும் என்று நினைப்போரும் உலகில் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட கீழோரிடத்தில் செல்வம் வந்து சேருமானால்அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை மகாபாரத்ததில் விதுரர் வாயிலாக அறியலாம்.

 

"செல்வம் வந்து உற்ற காலைத் 

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால் 

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்". --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     மண்ணின் மேல் வாழும் மாந்தர் - இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்கள்செல்வம் வந்து உற்ற காலை - தங்களுக்குப் பெரும் செல்வம் வந்து பொருந்திய போது,தெய்வமும் சிறிது பேணார் தமது அறியாமை காரணமாகதெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்சொல்வன அறிந்து சொல்லார் சொல்ல வேண்டியதை அறிந்துபிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்சுற்றமும் துணையும் பேணார் உறவினர்களையும்உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள். வெல்வதே கருமம் அல்லால் - எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிவெம்பகை வலிது என்று எண்ணார் எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும்அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்வல்வினை விளைவும் ஓரார் தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

 

     ஒரு சிறிது படிப்போபட்டமோபதவியோபணமோ வந்துவிட்டாலேதங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடைபோட்டுக்கொண்டுபலரோடும் கலந்து பழகாமல்பேசாமல்தனி இடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்கின்ற அற்பர்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கது. 

 

     அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால்பிறரிடம் அன்போடு உரையாடாமையால்வாய் உள்ளவரும் ஊமையர் ஆவர்பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால்காது உள்ளவரும் செவிடர் ஆவர்பிறரை ஏறெடுத்தும் பாராமையால்கண் உள்ளவரும் குருடர் ஆவர் என்பதை,

 

"சிறியரேமதிக்கும்இந்தச்செல்வம்வந்துஉற்றஞான்றே

வறிய புன்செருக்குமூடி,வாய்உளார்மூகர்ஆவர்;

பறிஅணிசெவிஉளாரும்பயில்தருசெவிடர்ஆவர்;

குறிஅணிகண் உ(ள்)ளாரும்குருடராய்முடிவர்அன்றே."

 

என்னும் பாடலால் விளக்குகின்றது"குசேலோபாக்கியானம்என்னும்நூல்.

 

            வினையின் காரணமாக வந்து உற்ற உடலும்பெற்ற பொருளும்முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும்தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக்கொள்ளாமல்அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்துபோவது அழகல்லஉயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றதுதனது உடம்பின் நிழல்கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லைஅப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும்தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையதுஎன்னுடையதுஎன்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

 

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர்போ ம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண் ஒளி கண்டுகொள்ளீரே".  --- திருமந்திரம்.

 

இதன்பொருள்---

 

            தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டு வைத்தும்அறிவில்லாதவர்தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர்கருதி உணரப்படுகின்ற உயிரானதுகாணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்ததுஆயினும்அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாகஉடன் பிறந்த உடம்பே உயிரை விட்டு ஒழியும்போதுஉடம்புக்கு வேறாய்இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளதுஅதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள். (சாயை--- நிழல்மாடு--- செல்வம்)

 

            வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கு ம்உதவாத இந்த உடம்பின் நிழல்போலஉங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்குநீங்கள் செல்லப்போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாதுஎனவேமுருகப்பெருமானை நினைந்துநொய்யில் பாதி அளவாவதுஇல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"வையின்கதிர்வடிவேலோனைவாழ்த்தி,

            வறிஞர்க்குஎன்றும்

நொய்யின்பிளவுஅளவேனும்பகிர்மின்கள்,

            நுங்கட்குஇங்ஙன்

வெய்யிற்குஒதுங்கஉதவாஉடம்பின்

            வெறுநிழல்போல்

கையில்பொருளும்உதவாதுகாணும்

            கடைவழிக்கே".                                              --- கந்தர்அலங்காரம்.

 

            பின்வரும்பாடல்களையும்இங்குவைத்துஎண்ணிநலம்பெறலாம்...

 

"எத்தனைபேர்கையில்முன்னம்இப்பொருள்தான்

            இருந்ததுஅவர்எல்லாம்தத்தம்

அத்தம்எனநம்பினார்அவர்களைவிட்டு

            அகன்றுஉன்கைஅமர்ந்ததுஇன்னும்

சத்தம்இன்றி(ன்)னைமோசம்செய்துஅனந்தம்

            பேர் கரத்தில்சாரும்,சொன்னேன்;

சித்தமேஅதுசெல்லும்முன்நீசற்

             பாத்திரத்தில்செலவிடாயே".--- நீதிநூல்.

 

            நெஞ்சமே இப்பொழுது உன்னிடத்தில் உள்ள இப்பொருள் இதற்கு முன் எத்தனை பேர் கையில் இருந்தது? அத்தனை பேரும் இதனைத் தத்தம் பொருள் என்றே நம்பி இருந்தனர்அவர்களை விட்டு அகன்றுஇப்போது உன் கையில் வந்திருக்கிறதுஇது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்துபலர் கையில் சார்ந்துவிடும்நான் கூறுவதை நம்புஇப்பொருள் உன்னை விட்டு அகலும் முன், நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.

 

"என்பொருள்என்பொருள்என்றுசீவன்விடு

            மனமேஒன்றுஇயம்பக்கேளாய்;

உன்பொருள்ஆனால்அதன்மேல்உன்நாமம்

            வரைந்துஉளதோஉன்த(ன்)னோடு

முன்பிறந்துவளர்ந்ததுகொல்?இனி(ன்)னைவிட்டு

            அகலாதோ?முதிர்ந்துநீதான்

பின்பிறக்கும்போதுஅதுவும்கூடஇறந்

            திடும்கொல்லோ?பேசுவாயே".           --- நீதிநூல்.

 

            என்னுடைய பொருள்என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமேஉனக்கு ஒன்று சொல்லுகின்றேன்கேள்உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதாநீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததாஇனிமேலும் அது உன்னை விட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து  சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமாஆராய்ந்து சொல்வாயாக.

 

     இதனை இரத்தினச் சுருக்கமாககுரபகுருபர அடிகளார்,

 

"செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,

அல்கா நல்குரவு அவா எனப்படுமே"

 

என்று "சிதம்பர மும்மணிக் கோவை" என்னும் பிரபந்தத்தில் பாடிக் காட்டினார். செல்வம் என்பது மனநிறைவைக் குறிக்கும். குறையாத வறுமை என்பது ஒருவனுக்கு அவன் உள்ளத்தில் உண்டாகும் ஆசையே ஆகும். உள்ளதைக் கொண்டு சிந்தையில் நிறைவு கொண்டுஎப்பொருளின் மீதும் ஆசை வைக்காத உன்னத நிலையே மேலான செல்வம்வேண்டாமைக்கு நிகரான செல்வம் எங்குமே இல்லை என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை,

யாண்டும் அஃது ஒப்பது இல்".          --- திருக்குறள்.

 

            ஆன்மா ஒரு சித்துப் பொருள். சித்து என்றால் அறிவு என்று பொருள். அறிவு என்பது உண்மை அறிவைக் குறிக்கும். அது ஏட்டுக் கல்வியால் விளங்காது. நுண்ணறிவால் விளங்கும். "கேடு இல்லாத மேலான செல்வம் கல்வியே ஆகும். மற்றவை எல்லாம் செல்வம் அல்ல" என அறிவுறுத்த,

 

"கேடுஇல் விழுச் செல்வம் கல்விஒருவற்கு

மாடு அல்ல மற்றையவை"

 

என்று காட்டினார் திருவள்ளுவ நாயனார். காரணம்பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தில் கூட உண்டு. "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

            "நாலடியார்" ஒருபடி மேலே சென்று,"நுண்ணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" என்று காட்டுகின்றது. செல்வம் இன்மையை வறுமையாகச் சொல்லவில்லை. நுண்ணிய அறிவு இல்லாது இருப்பதே வறுமை நிலை ஆகும். நுண்ணிய அறிவு பெற்று இருப்பதுபெரிய செல்வச் செழிப்பினைப் பெற்றுள்ளது போல் ஆகும்.

 

     செல்வம் என்றால் என்னவீடுமனைநிலம்காசுபணம்பொன் முதலியவற்றைத்தான் செல்வம் என்ற சொல்லில் பலரும் அறிந்திருக்கின்றோம். இவை அனைத்தும் "பொருட்செல்வம்" என்ற ஒன்றில் அடங்கி விடும். இவற்றை அல்லாமல் வேறு செல்வங்களும் உண்டா என்றால்பல செல்வங்கள் உண்டு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அருட்செல்வம்மக்கட்செல்வம்கேள்விச்செல்வம் என்று பலவகைச் செல்வங்கள் உண்டு. கேள்விச் செல்வத்தையே திருவள்ளுவ நாயனார் செவிச்செல்வம் என்று கூறுகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று பொருட்செல்வம் முதலியவற்றை விடவும்செவிச்செல்வம் ஒரு படி உயர்ந்தது என்று கூறும் முறையில்"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்றும் அருளிச் செய்தார். பொருட்செல்வம் முதலிய அனைத்தும் நாம் அடைய விரும்பும் மகிழ்ச்சியைஇன்பத்தைமனநிறைவைப் பெறுவதற்கு பயன்படுகின்றன. மகிழ்ச்சிஇன்பம் முதலியவற்றை அடைவதற்கு இச் செல்வங்கள்நேரிடையாகவும்வழியாகவும்மறைமுகமாகவும் உதவுகின்றன. வீடுமனை,உடைஉணவு என்பவை நிறையு ம்பொழுது மனத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. இவற்றைப் பெறப் பொருட்செல்வம் உதவுகின்றது. எனவேமனத்தில் நிறைவைத் தர உதவுகின்ற இவற்றைச் செல்வம் என்று உலகோர் கூறுகிறனர். அது இல்லாத நிலையை வறுமை என்கின்றனர். பல சமயங்களில் இவை அனைத்தும் இருந்தும்கூட மனத்தில் அமைதி ஏற்படுவதில்லை. எனவேமனத்தில் ஏற்படும் அமைதி அல்லது நிறைவையே செல்வம் என்று குமரகுருபர அடிகளார் கூறுகிறார். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவேஎன்பது அவருடைய அருள்வாக்கு ஆகும். 

 

     எனவேவறுமை நிலையில் இருந்தாலும்அறிவு நிரம்பி இருந்தால்உள்ளது போதும் என்ற மன நிறைவு உண்டாகும். உள்ளதைப் பிறருக்கும் கொடுத்து வாழுகின்ற எண்ணம் உண்டாகும். செல்வம் நிரம்பி இருப்பதை விடஅறிவு நிறைந்து இருப்பதே சிறப்பைத் தரும். அறிவு நிறைந்துள்ளோர் வறுமையை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார். அந்த உணர்வைத் தருவதும் வறுமையே ஆகும்.

 

     மேலும் செல்வம் என்பது எப்படியும் ஒருவனுக்கு அல்லலையே தரும் என்பதால்,"செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்"என்றார் மணிவாசகப் பெருமான். எல்லா உயிர்களையும் மல்லாக்கத் தள்ளி பிறவிக் கடலுள் அழுத்தி அல்லல் படுத்துகின்ற "அவா" என்னும் வறுமையில் இருந்து நீங்கி,மெய்யுணர்வு ஆகிய செல்வத்தைத் தந்து அருளவேண்டும் என்னும் முகத்தான்,

 

"பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த

அல்லல் செய்யும் அவா எனப்படும் அவ்

வறுமையினின்றும் வாங்கி,

அறிவின் செல்வம் அளித்து அருள் எனக்கே"

 

என்று பாடினார் குமரகுருபர அடிகளார். "அறிவின் செல்வம்" என்று அடிகளார் குறிப்பிட்டது மெய்யுணர்வை. அறிவு இல்லாத வறுமையைநுண்ணுர்வு நீக்கும் என்பதால், "நுண்ணுணர்வு இன்மை வறுமை" என்றது நாலடியார். 

 

     எனவேஅறிவுள்ளோர்க்கு வறுமை பெருமையைத் தரும் என்பதை அறியலாம். பொருள்வளம் தருகின்ற பெருமை நிலைத்து நிற்காது.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...