35. அறம் செய்யக் காலம் ஏன்?


“உள்ளபொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லாமல்,ஓர்

எள்ளளவும் ஈய இசையுமோ? - தெள்ளுதமிழ்ச்

சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத்துக்கு அருந்த

நீரளித்த தோமுந்நீர் நின்று.” -- நீதிவெண்பா


தெளிவான தமிழ் இலக்கணத்தை இயற்றித் தந்தவராகிய அகத்தியர், தனது நீர் முழுவதையும் அருந்தி விட்ட காலத்தில், கடலானது நீரைக்கொண்டு நின்று தன்னிடம் வந்தடைந்த மேகத்துக்கு அருந்த நீர் கொடுத்ததோ? இல்லை.  அதுபோல, தன்னிடத்துப் பொருள் உள்ள காலத்தில் எதுவொன்றும் மகிழ்ந்து கொடுக்க இயலுமே அல்லாமல், பொருள் இல்லாத காலத்தில் ஓர் எள் அளவாயினும் இரப்பார்க்கு ஈய முடியுமோ? முடியாது. (பொருள் உள்ள போதே அறம் செய்தல் வேண்டும். இல்லாதபோது, எண்ணினாலும் செய்ய முடியாது)


(சீர் - இலக்கணம்.  அளித்தோன் - அகத்திய முனிவர்.  முந்நீர் - கடல்.)


No comments:

50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும், இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள் ந...