“முற்றும் இறைசெயலே முற்றிடினும், தன்அருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும்; - பற்றுபெருந்
தாபத்து இடத்தே தழன்றிடினும், நற்சோதி
தீபத்து இடத்தே சிறப்பு.”
நல்ல ஒளி விட்டு எரியக்கூடிய பெரிய காட்டுத் தீயினிடத்தில் ஒளிவிட்டாலும், சிறிய விளக்கிடத்திலேயே அவ் ஒளி சிறப்பு உடையதாகும். அது போல, உலகமெங்கும் கடவுள் அருள் நிறைந்து இருந்தாலும், அவ் இறைவன் அருளைப் பெற்ற அடியார்கள் இடத்திலேயே அவ் அருட்செயல் நிறைந்திருப்பது மிகுதியாகும்.
(இறை - கடவுள். தாபம் - காடு. தீபம் - சிறுவிளக்கு.)
“திரி அழல் காணின் தொழுப; விளகின் எரி அழல் காணின் இகழ்ப" என்பது “நான்மணிக்கடிகை”. திரியில் எரியும் நெருப்பைக் கண்டால் வணங்குவார்கள். விளகில் எரியும் நெருப்பைக் கண்டால் இகழ்வார்கள் என்பது இதன் பொருள்.
No comments:
Post a Comment