34. அற்பர்கள் ஆர்ப்பரிப்பர்

“சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்; ஆன்றுஅமைந்த

முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே; - வெற்றிபெறும்

வெண்கலத்தின் ஓசை மிகுமே; விரிபசும்பொன்

ஒண்கலத்தில் உண்டோ ஒலி.”


வெண்கலப் பாத்திரத்தினின்று உண்டாகும் ஓசை மிகுதியாகும்.  ஆனால், மேன்மையுள்ள விரிந்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய பாத்திரத்தில் அங்ஙனம் ஓசை மிகுவது உண்டோ?  (இல்லை.)  அதுபோல, குறைந்த அறிவினை உடையவர்கள் எப்பொழுதும் சிடுசிடு என்று இரைந்து பேசுவர். கல்வி கேள்விகளால் நிறைந்து அடங்கிய பேரறிவாளர்கள் அங்ஙனம் இரைச்சலிட்டு ஏதும் பேசமாட்டார்கள்.


(சிலுசிலுத்தல் - சினம் கொண்டு இரைந்து பேசுதல். பொன் ஒண் கலம் – பொன்னால் ஆன ஒளி பொருந்திய பாத்திரம்.)


No comments:

50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும், இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள் ந...