36. தீயவரிடம் இருந்து விலகி இருத்தல்

“பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறி அன்றோ? - காதுமத

மாகரத்த யானை வழிவிலகல், புன்மலம்தின்

சூகரத்துக்கு அஞ்சியோ? சொல்.” -- நீதிவெண்பா


போரில் கொல்லுகின்ற மதம் பொருந்திய பெரிய துதிக்கையினை உடைய யானையானது வழிவிட்டுச் செல்லுதல், மலம் தின்னுகிற தாழ்ந்த பன்றிக்கு அச்சப்பட்டோ? அன்று. தனது பெருந்தன்மையால் விலகிச் செல்கின்றது. அதுபோல, அறிவில்லாத கீழோரைக் கண்டால், அறிவு மிக்க பெரியோர்கள் பெருந்தன்மையோடு வழி விலகிச் செல்லுதல் நீதிநெறி ஆகும், கீழ்மக்களுக்கு அஞ்சிச் செல்கின்றார் என்பதன்று.


(காதுதல் - கொல்லுதல்.  கரத்த – கையை உடைய.  சூகரம் - பன்றி.)


No comments:

36. தீயவரிடம் இருந்து விலகி இருத்தல்

“பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி நீதியொடு போதல் நெறி அன்றோ? - காதுமத மாகரத்த யானை வழிவிலகல், புன்மலம்தின் சூகரத்துக்கு அஞ்சியோ? சொல்.” ...