33. நல்ல உத்தமன்

“சீலம்இல்லான் ஏதேனும் செப்பிடினும், தான்அந்தக்

காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே, - ஏலவே

செப்பும்அவ னும்தானே சிந்தைநோ காதுஅகன்று

தப்பும்அவன் உத்தமனே தான்.” -- நீதிவெண்பா


நல்லொழுக்கம் இல்லாதவன் யாதானும் ஒரு தீய சொல்லைச் சொல்ல நேரிடின், அவன் சொன்ன காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்து, பொருத்தமான அறிவுரைகளை எடுத்துச் சொல்லி, அவனை அனுப்பி வைப்பவனும், அவன் சொன்ன தீயமொழியால் தன் மனம் வருந்தாமல் அவனிடத்தில் இருந்து நீங்கித் தப்பித்துக் கொள்பவனும் நல்ல உத்தமன் ஆவான்.


(சீலம் - ஒழுக்கம்.  கட்டுரைத்து - எடுத்துச் சொல்லி.  ஏல – பொருந்த.)


No comments:

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...