திருமகள் விரும்பி உறையும் இடங்கள்

    திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது.....



1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு விருந்து செய்பவனுடைய வீட்டில், உள்ளம் மகிழ்ந்து திருமகள் தங்கி வாழ்வாள்.



2. அறன்அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.


அறத்தின் பயனை உணர்ந்து, பிறருடைய பொருளை விரும்பாத மேலோரைச் சென்று அடையும் வகையை அறிந்து, அவரிடத்தில் திருமகள் சென்று சேர்வாள்.



3. மடிஉளாள் மாமுகடி என்ப, மடிஇலான்

தாள்உளாள் தாமரையினாள்..


சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் செந்தாமரைச் செல்வியாகிய திருமகள் இருப்பாள். சோம்பல் உள்ளவனிடத்தில் கருமைநிறம் பொருந்திய மூதேவி இருப்பாள்.


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...