39. அடியார்களைப் பகைத்தால் அழிவு

 “ஈசன்எதிர் நின்றாலும், ஈசன்அருள் பெற்று அயர்ந்த

நேசர்எதிர் நிற்பது அரிதாமே; - தேசுவளர்

செங்கதிர்முன் நின்றாலும், செங்கதிரவன் கிரணம்

தங்குமணல் நிற்க அரிதே தான்.” -- நீதிவெண்பா


ஒளி விளங்குகின்ற சிவந்த கிரணங்களை உடைய சூரியனுக்கு முன்னே வெயிலைப் பொறுத்துக் கொண்டு நின்றாலும், அந்தச் சூரியனின் கிரண வெப்பம் தாங்கியுள்ள மணலில் நிற்றல் என்பது இயலாது. அதுபோல, எல்லாம் வல்ல இறைவன் முன் பகைத்து நின்றாலும், அவ் இறைவனின் பேரருளைப் பெற்று உயர்ந்த அடியார்கள் எதிரே பகைத்து நிற்றல் இயலாது. பகைக்கின் விரைவில் அழிவு ஆகும்.


No comments:

50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும், இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள் ந...