37. நம்பினவர்க்கே இறைவன் அருள் உண்டு

“மந்திரமும், தேவும், மருந்தும், குருவருளும்,

தந்திரமும், ஞானம், தரும்முறையும், - யந்திரமும்,

மெய் எனில் மெய்யாய் விளங்குமே; மேதினியில்

பொய்எனில் பொய்யாகிப் போம்.” -- நீதிவெண்பா


உலகத்தில் மறைமொழிகளும், தெய்வமும், மருந்துகளும், ஆசானிடத்துப் பெறும் அருளும், நூல்களும், அறிவைத் தரும் வழிபாட்டு முறைகளும், மறைமொழியைப் பொருந்திய கட்டங்களும் ஆகிய இவ் ஏழும் உண்மை என்று நம்பினால், உண்மையாக விளங்கிப் பயன்கொடுக்கும்.  பொய் என்று நினைத்தால், பொய்யாகிப் பயன்படாது போகும்.


(மந்திரம் - மறைமொழி.  தேவு - தெய்வம்.  தந்திரம் - நூல்.  யந்திரம் - மறைமொழியைக் கட்டத்துள் அடக்கிப் பூசித்தல்.)


No comments:

பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...