“அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும், உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.”
மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ? மாறாது. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா? இல்லை.
(அவ்வியம் - பொறாமை. திவ்விய – மேலான. கந்தம் - மணப்பண்டங்கள். உள்ளி - வெள்ளைப் பூண்டு. கந்தம் - தீநாற்றம். கரை - சொல்லு.)
No comments:
Post a Comment