“துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே,
மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும்
கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசமாகை யால்.” — நீதிவெண்பா.
நஞ்சு போலும் கசப்பான மருந்தால் இருமல் அடங்கிப் போகும். இனிமைக்கு மாறாக உள்ளதால், கடும் சொல்லைக் கண்டு தீயவர்கள் விரைந்து அடங்கிப் போவார்கள். எனவே, மிகுந்து வரும் இருமல் நோயும், தீயோரும் ஒப்பானவர்கள் என்று உணர்தல் வேண்டும்.
(கடு - நஞ்சு போன்று கசப்பானவை. கடுக - விரைந்து. வசம் ஆதல் - அடங்கிப் போதல். பன்னும் - சொல்லப்படும். துன்னும் - மிகுந்து இருக்கும்.)
No comments:
Post a Comment