47. வினையின் பயன் செய்தவனையே சாரும்

 “தானே புரிவினையால் சாரும் இருபயனும்,

தானே அனுபவித்தல் தப்பாது, - தான்நூறு

கோடிகற்பம் சென்றாலும், கோதையே! செய்தவினை

நாடிநிற்கும் என்றார் நயந்து.” -- நீதிவெண்பா.


பெண்ணே! எண்ண முடியாத கோடி கோடி யுகங்கள் கடந்து விட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகளின் பயன் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் கூறுவர். ஆதலால், ஒருவன் தானே செய்த நல்வினை தீவினை என்னும் இருவினையினால் வந்து சேரக் கூடிய புண்ணிய பாவப் பயன்களும், செய்த அவனே அடைந்து அனுபவித்தல் தவறாது.


(புரிவினை - செய்த நல்வினை தீவினை இரண்டும்.  இருபயன் - இன்பமும் துன்பமும். கற்பம் - ஊழி, யுகம்.)


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...