ஐம்பெருங் குரவர் வழிபாடு

 


ஐம்பெருங் குரவர் வழிபாடு

-----

 

     அரசன்போதகாசிரியன்தாய்தந்தைஅண்ணன் என்னும் இந்த ஐவரும் தெய்வமாக வணங்கத் தக்க மேன்மையை உடையவர்கள். அவர்களை ஒவ்வொரு நாளும் மறவாது வணங்கித் துதிப்பவருக்கு எல்லா மேன்மையும் உண்டாகும். அரசனைத் திருமால் ஆகவும்போதகாசிரியரைப் பிரமதேவன் ஆகவும்தாயைப் பார்வதி தேவியாகவும்தந்தையைப் பரமேசுவரனாகவும்தன் முன் பிறந்தவனாகிய தமையன் என்னும் அண்ணனைச் சூரியனாகவும் எண்ணிப் போற்றுதல் வேண்டும்.

 

"அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்

நிகரில் குரவர் இவரிவரைத்

தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே

யாவரும் கண்ட நெறி",

 

என்றுபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "ஆசாரக் கோவை" கூறுகின்றது.

 

இதன் பொருள் ---

 

     அரசன் --- உயிர்களை முறைசெய்து காப்பாற்றுகின்ற அரசனும்உவாத்தியான் --- உவாத்தியார் எனப்படும் ஆசிரியர்தாய் தந்தை --- தாயும் தந்தையும்தம்முன் --- தனக்கு மூத்தோனும்இவர் --- என இவர்கள்நிகர் இல் குரவர் இவரை --- தமக்கு நிகரில்லாதஐம்பெரும் குரவர்கள் ஆகிய இவர்களை,தேவரைப் போலத் தொழுது எழுக என்பது --- தெய்வம் என்றை கருதித் தொழுது எழுக  என்று சொல்லப்படுவதுயாவரும் கண் நெறி --- மேலோர் எல்லாரும் வரையறுத்துக் கூறியவழி ஆகும்.

 

"நெல்லும் உயிர்ன்றே,நீரும் உயிர்ன்றே,

மன்னன் உயிர்த்தே மலர்தலை லகம்"

 

என்ற சங்ககாலப் புலவர் மோசிகீரனர் கூற்றுப்படி மன்னனே மக்களின் உயிராக ஒளிர்ந்தான். "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே"என்றார் நம்மாழ்வார்.

 

"மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எ(ல்)லாம்

கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்"

 

என்று மன்னனைக் குறித்துத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறி உள்ளார்.

 

"செயிர் இலா உலகினில் சென்று நின்றுவாழ் 

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன்"

 

என்று மன்னனை உடலாகவும்,மக்களே அவ்வுடம்பில் உறையும் உயிராகவும் குறிப்பிட்டுள்ளார் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான். 

 

     மலைவளம் காண வந்த செங்குட்டுவனைக் கண்ட மலைவாழ் மக்கள்,"ஏழ்பிறப்பு அடியேம்வாழ்கநின் கொற்றம்"என வாழ்த்தியதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டி உள்ளார்.

 

     எனவேமுறைசெய்து காப்பாற்றும் மன்னவனைத் திருமாலின் வடிவமாகக் கண்டு போற்றிட வேண்டும்.

 

     அவரவர் விதிப்படிஅவருவருக்கு உரிய உடலைப் படைத்துத் தருபவன் பிரமதேவன். இந்த உடம்பில் வாழும் உயிர்களுக்கு இயல்பாகப் பொருந்தி உள்ள அறிவினை விளக்கம் பெறுமாறு செய்யக் குரு வடிவம் கொண்டு எழுந்தருளுவது பரம்பொருள். "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்பார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலநாயனார். எனவே"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்" என்று "வெற்றிவேற்கை" என்னும் நறுந்தொகை கூறும். போதகம் என்றால் நல்லறிவு என்று பொருள்படும். எழுத்தை அறிவிப்பதோடுநல்லறிவும் விளங்குமாறு நூற்பொருளை அறிவுறுத்தும் ஆசிரியரைபிரமதேவனாகப் பாவித்துப் போற்றி வழிபடவேண்டும். உவாத்தியான் என்பது வாத்தியான் எனப்படும்.

 

     உயிர்கள் செய்கின்ற குற்றங்களை அனைத்தையும் பொறுத்துஅவற்றுக்கு உரிய நலங்களை வழங்குவது இறைவன் பெருங்கருணை. தாம் பெற்றெடுத்த மக்கள் எவ்வளவு குற்றங்களைப் புரிந்தாலும்அவற்றை எல்லாம் தமது அன்பால் பொறுத்துக் கொண்டுஅறிவு சொல்லி வளர்த்து அருள் புரியும் தாய் தந்தையரைத் தெய்வமாகவே வணங்குதல் வேண்டும். நம்மால் நமது கண்முன்னர் அறியப்படுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையரே. ஆதலால்"அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்"என்றது "கொன்றைவேந்தன்". "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்"என்றார் வள்ளல்பெருமான். "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்உடன் தோன்றினராய்மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்"என்றார் அப்பர் பெருமான். "அம்மையே அப்பா"என்றார் மணிவாசகர். எனவேதாய்தந்தையாரை அம்மையப்பராகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.

 

     தம்முன் என்பதுதனக்கு முன் பிறந்த தமையன் அல்லது அண்ணனைக் குறிக்கும். "அண்ணித்தல்" என்னும் சொல்லுக்குகிட்டுதல்பொருந்துதல்இனிமை செய்தல்அணுகி அருள் புரிதல் என்று பொருள். தாய்தந்தையருக்கு அடுத்த நிலையில் இந்தக் குணங்கள் பொருந்தி உள்ளவனை "அண்ணன்" என்பர். முன்னர் பிறந்துவிட்டதாலேயே அண்ணன் ஆக எல்லாராலும் முடியாது. சூரியன் தனது ஒளிக் கிரணங்களை நாளும் வீசவில்லையானால்உயிர்களும்அவற்றிற்கு உரிய பொருள்களும் தழைப்பதற்கு வழியில்லை. எனவேஉயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி இன்றியமையாதது ஆகின்றது. சூரியன் என்னும் ஆதித்தனது ஒளியானது எல்லாவற்றிலும் பொருந்தி உள்ளது. அண்டத்தில் உள்ள சூரியன்,"அண்டாதித்தன்" எனப்படும். அதுபோலவேநமது உடலிலும் சூரியசந்திரஅக்கினி என்னும் மூன்று மண்டலங்கள் உள்ளன. "மூன்று மண்டலத்தின் முட்டிய தூண்" என்பது விநாயகர் அகவல்எனவேஉடலில் பொருந்து உள்ள ஆதித்தன், "பிண்ட ஆதித்தன்" எனப்படுவான். பிண்ட ஆதித்தனை நல்ல முறையில் வைத்து இருந்தால்மனம் முதலிய அந்தக் கரணங்கள் தூய்மை பெற்று விளங்கும். மனத்தில் உள்ள அறியாமை என்னும் இருள் நீங்கிஅறிவு விளங்கச் செய்பவன் "மன ஆதித்தன்" எனப்படுவான். அறிவு விளங்கியபோதுபொயப்பொருள் எதுமெய்ப்பொருள் எதுஎன்னும் தெளிவு பிறந்துஉண்மை ஞானம் தலைப்படும். இந்த நிலையில் விளங்குவது, "ஞான ஆதித்தன்" ஆகும். ஞானம் விளங்கியபிறகுசிவத்தை நன்கு அறியும் நிலை விளங்கும். அந்த நிலையை, "சிவ ஆதித்தன்" என்று கூறப்படும். இதன் விரிவைதிருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் காணலாம். 

 

     எனவேதம்முன் பிறந்தவனைசூரியனாகப் பாவித்துப் போற்றி வருதல் வேண்டும் என்று கூறப்பட்டது.

 

"தகை உறு தம்முனை,தாயைத் தந்தையை,

மிகை உறு குரவரை,உலகின் வேந்தனை,

பகை உற வருதலும் துறந்த பண்பு இது

நகை உறல் அன்றியும் நயக்கற் பாலதோ?"

 

என்பது கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     தகை உறு தம் முனை --- தகைமை உடைய தனது முன்னோனையும்தாயை தந்தையை --- தாயையும் தந்தையையும்மிகைஉறு குரவரை --- சிறப்புடைய சான்றோர்களையும்உலகின் வேந்தனை--- உலகாளும் மன்னனையும்;  பகை உற வருதலும் ---  பகைத்துக்கொண்டு வருவதும்;  துறந்த பண்பு இது --- பிரிந்து   நீங்குவதுமானஇந்தத் தன்மை;  நகை உறல் அன்றியும் --- சிரிப்புக்கு  இடமாவதே அல்லாதுநயக்கற் பாலதோ --- விரும்பத்தக்க செயலாகுமோ?

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...