மனம் ஒரு மாளிகை

 


 

 

 

மனம் ஒரு மாளிகை

-----

 

     மனம் என்னும் மாளிகை "திருக்குறள்" ஆகும். படுக்கை அறை, "வாழ்க்கைத் துணைநலம்" ஆகும். கொலு மண்டபம் என்பது "இறைமாட்சி" ஆகும். உணவு உண்கின்ற இடம், "விருந்தோம்பல்" ஆகும். பூசை அறை, "மெய்யுணர்தல்" ஆகும். இந்த மாளிகையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தான் யார் என்று உணர்ந்து வாழ்ந்தால் இன்பமே. அந்தத் தந்திரத்தை நமக்கு அருளுகின்ற தந்திரமே "திருக்குறள்" ஆகும். "தந்திரம்" என்னும் சொல்லுக்கு, "வழிவகை" என்றும், "உத்தி" என்றும் பொருள் உண்டு. "தந்திரம்" என்னும் சொல்லுக்கு "நூல்" என்று பொருள் உண்டு. நூல்களுக்குப் பொதுவாகத் "தந்திரம்" என்று பொருள் கொண்டாலும்சிறப்பாகஅருள்நூல்களுக்கும்அறிவுநூல்களுக்குமே அது பொருந்தும். அறிவு என்பது இறையருளால் விளங்கவேண்டும். அது "பதி அறிவு" அல்லது "உண்மை அறிவு" என்று சொல்லப்படும். எனவேதான்,

 

"தன்னை அறிந்து இன்பமுற,வெண்ணிலாவே! - ஒரு

தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"

 

என்று பாடினார் வள்ளல்பெருமான்.

 

     தன்னை அறிதல் என்றால் என்னதன்னை அறிந்து கொள்வது எப்படி?தன்னை அறிந்து கொள்வதால் பயன் உண்டாஎன்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோமானால்கேட்பதோடு நில்லாமல்மனத்தைப்புலன் வழி செலுத்தாதுமனம்மொழிமெய் என்னும்திரிகரணங்களையும் அடக்கி நின்றோமானால்,அப்போதுதன்னை அறிந்து இன்பம் உறுவது தானே சித்திக்கும்.

 

     "நான் யார்என் ஞானங்கள் யார்?"எனக் கேட்போமானால் தன்னை அறிந்து இன்பம் உறலாம்தன்னை அறிவது என்பது நம் மனத்துக்குள்ளேயே இருக்கும் சோதியை (பரம்பொருளை) உணர்வது ஆகும். தன்னை அறிந்தால் பிறவியை ஒழித்துப் பேரின்பம் பெறலாம்.

 

     தன்னையும் இன்னான்இனியன் என்று எண்ணாமலும் சிந்திக்காமலும் இருந்தும்மனம் என்னும் நிலத்தைஅஞ்ஞானக் கோரை மண்டித் தரிசாகக் கிடக்குமாறு விட்டுபுலன்கள் வழி சென்றுஅவற்றின் வழியே மனம் போன போக்கில் சென்றால்,சிற்றின்பங்களும், “பெருந் துன்பங்களுமே” விளையும். முடிவுடைய இன்பங்களும்முடிவிலாத் துன்பங்களும் தான் மிஞ்சும்.

சிற்றின்பங்களும் அளவீடு இல்லாத துன்பங்களும் அடுக்கடுக்காக வந்து புதை சேற்றில் ஆழ்த்தும்.

 

     தன்னை அறிந்து இன்பம் உறாத வரையில்இன்னும் ஒவ்வொரு பொழுதும் காலை மலமொடு எழுந்திருந்து பசிநித்திரையாத்திரைபிழைத்துபித்த உலகத்தில் பித்தனாக ஆகிமதம் கொண்ட யானையைப் போன்று ஆசை என்ற வலையில் வீழ்ந்தும் கல்வி என்னும் பலகடல் பிழைத்தும்பொறாமை என்ற பேயால் ஆட்டுவிக்கப்பட்டும்செல்வம்வறுமைஅறிவு இவைகளில் தேனில் விழுந்த ஈயாக மயங்கி விழுந்தும்வாது பேசிஆறுகோடி மாயா சக்திகள் ஊடே பிழைத்தும்நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியும்உறவு சுற்றம்நட்பு என்னும் அலைகடலில் வீழ்ந்தும்சமயம்மதம்சாத்திரம்கோத்திரம்விரதம் இவைகளில் மயங்கியும்ஐம்பூதங்களின் அல்லலில் சிக்கியும்இன்னும் பல அளவிட முடியாத மாயையின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகிபயன் ஒன்றும் இல்லாமல்,விழலுக்கு இறைத்த நீர் போல பிறந்துபிறந்துஇறந்துஇறந்துபிறவிக்கடலை விட்டு முத்திக்கரையில்ஏறாது. நீந்திக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.தன்னையறிந்து இன்பமுறாத வரையில்.

 

     தன்னை அறிந்து இன்பம் உறுவது "பேரின்பம்"எனப்படும். இப் பேரின்பத்திற்கு முதலும் முடிவும் இல்லை. பேரின்பத்தை அனுபவிக்கும் காலத்தில் சலிப்பு இல்லைவெறுப்பு இல்லைகசப்பு இல்லை. ஆணவம்கன்மம்மாயை ஆகிய மலங்கள் தன்னை அறிந்த மாத்திரத்திலேயே நிர்மலமாகி விடும். 

 

     இப் புன்புலால் யாக்கையானது புரைபுரை கனியுமாறுகண்ணார நீர் மல்கிகசிந்து உருகிஉள்ளம் நெக்கு உருகிநாயினேன்பேயினேன்வன்மனத்தேன் என அரற்றி,தான் என்ற அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்து நினைந்துநினைந்துஉணர்ந்துஉணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்துசிந்தித்துசிந்திக்கும் பொருளும்சிந்திக்கும் திறனும் ஒரே தன்மையாகி முயற்சி செய்துநொந்து நொந்துஅழுதுபுலம்பிஅரற்றிஎவ்விதத்தாலும் சலனம் அடையாது. நிலைகுலையாதுதாயையே நினைந்து அழும் சேய் போல ஒரே குறிக்கோளாக நம் மனதை உள்முகமாக நிறுத்தி ஒருமைப் படுத்தித் துய்மை செய்தோமானால்,அங்குத் தோன்றும் உள்ளொளியை (சோதியை)க் கண்டுஇன்புறலாம். இதுவே தன்னை அறிந்து இன்பம் உறுதல் ஆகும். "உறுதல்" என்னும் சொல்லை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். இதற்குஉண்டாதல்மிகுதல்சேர்தல்பொழுந்தல்பயன் உறல்நன்மை ஆதல் என்றெல்லாம் பொருள்கள் உண்டு.

 

     தன்னை அறிந்த பின் உண்டாகும் இந்தப் பேரின்பத்திற்கு ஒரு வரையறை இல்லை. இதனால் தான் தன்னை அறிந்து இன்பமுற்ற அருளாளர்கள் அனைவரும் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்றனர்.

 

     "உன்னையே நீ அறிவாய்என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞரான சாக்ரட்டீஸ். ஆகவே நம்மையே நாம் நன்கு அறிந்தோமானால்,நடப்பது யாவும் நலமே.

 

     நம்மை நாம் அறிந்து கொள்ளாத போதுதான்,பலனைப் பற்றி ஏங்கிஎவ்வாறு வழி தவறிய ஒருவன் திகைப்பானோ அவ்வாறு இவ் உலகாயதத்தில் தவிக்க வேண்டி உள்ளது. இவ்விதம் தவிப்பதால் தடுமாற்றமும்தடுமாற்றத்தில் மனம் அமைதியிழந்து தன்னை அறியாமல் விழலுக்கு நீர் இறைத்து,எட்டிக் காயாகத் தனக்கும் பயனின்றிபிறருக்கும் பயனின்றிக் கெடுகின்றனர் என்பதை நமது கருமூலம் அறுக்கவந்த திருமூலர் திருவாக்கால் அறியலாம்.

 

"தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்--- திருமந்திரம்.

 

     தன்னை அறியும் அறிவைப் பெற்றுவிட்டால்பிறிது எதனாலும்எவ்விதத் தீமையும் உண்டாவது இல்லை. கணியன் பூங்குன்றனார் என்ற பெரும் புலவர் புறநானூற்றில் தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று பாடியதன் உண்மையும் இதுவே ஆகும்.

 

     நமக்குப் பகைவனும்உறவினனும் முதலான எல்லாமும் நாமேதான்.

 

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி".                     --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     தனக்குப் பகைவனும் நட்டானும் தானே --- தனக்கு துன்பம் செய்யும் பகைவனும்,இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்பிறர் அல்லதனக்கு மறுமையும் இம்மையும் தானே --- தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே தான்தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால் --- தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால்தனக்குக் கரி தானே -தான்செய்த வினைகளுக்குச் சான்று ஆனும் தானே ஆவான்.

 

 

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே".          --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     நாம் தான் பகைமைக்கும்நட்புக்கும் காரணர் ஆக உள்ளோம்.மறுமை இன்பங்களையும்இம்மைத் துன்பங்களையும் உண்டாக்கி அனுபவித்தற்குக் காரணர் ஆக உள்ளவரும் நாமே தான். நாம் தான் நாம் செய்த நல்வினைப் பயன் தீவினைப் பயன் ஆகியவற்றை அனுபவிப்பதற்குக் காரணர் ஆக உள்ளோம். எனவேநமது தலைமை நிலைபெறுவதற்கும் நாமே தான் காரணர் ஆவோம். 

 

     பிறரால் தான் நன்மையும் தீமையும் உண்டாகின்றன என்று கருதுதல் தவறு. நன்மை தீமைகளுக்கும்அதானல் உண்டாகும்புண்ணிய பாவங்களுக்கும் நாம் தான் காரணர் ஆவோம்.

 

     இந்த உண்மையை உணர்ந்துஎல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடியில் பொருந்தி நில்லுங்கள் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.

 

"தாமே தமக்குச் சுற்றமும்,

    தாமே தமக்கு விதிவகையும்,

யாம் ஆர்?எமது ஆர்?பாசம் ஆர்?

    என்ன மாயம்?இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

    அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமாறு அமைமின் பொய்நீக்கிப்

    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே".   --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர்களே! நீங்கள்நாம் யார்எம்முடையது என்பது யாதுபாசம் என்பது எதுஇவை எல்லாம் என்ன மயக்கங்கள்என்று உணர்ந்து,இவை நம்மை விட்டு நீங்கவேண்டி,இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து இறைவனது திருவுள்ளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டுபொய் வாழ்வை நீத்து,பாம்பை அணிந்தவனும்எம்மை ஆள்வோனும் ஆகிய பெருமானுடைய பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

 

     இதனைஇரத்தினச் சுருக்கமாக,

 

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்"

 

என்று அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     தன்னை அறிவதே ஞானத்தின் இறுதி நிலையாகும். தன்னை அறிந்தால்,தன்னுள்ளேயே இறைவனைக் காணலாம். வெளியில் தேடி அலையவேண்டியது இல்லை.

 

"நெஞ்சமே கோயில்நினைவே சுகந்தம்அன்பே 

மஞ்சனநீர்பூசைகொள்ள வாராய் பராபரமே"

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

 

"தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே"

 

என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

இறைவனைத் தன்னுள்ளேயே தேடிக் கண்டு கொண்டதாக அப்பர் பெருமான் பாடுகின்றார்.

 

"தேடிக் கண்டு கொண்டேன்,

திருமாலொடு நன்முகன் தேடித் தேட ஒண்ணாத்

தேவனை என்னுள்ளேதேடிக் கண்டு கொண்டேன்"--- அப்பர்.

 

"தன்னை அறிந்திருந்த தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்;

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்;

சென்னியில் வைத்த சிவன் அருளாலே"    — திருமந்திரம்

 

இதன் பொருள் ---

 

     தன்னை அறிந்துகொண்டவர்கள்தான் மெய்ஞானிகள். அவர்கள் தன்னை அறிந்து தாமே சிவமாகிவிட்டதால்,முற்பிறவியில் செய்த பாவபுண்ணிய முடிச்சுகளை இப்பிறவியில் இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அடுத்த பிறவி என்ற ஒன்றே அவர்களுக்கு இல்லை. இப்பிறவியிலும் வரக்கூடிய வினைகளையும் தடுத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தமது தலையில் சிவனுடைய அருளை வைத்திருப்பதால். 

 

     எனவே, "அவனருளாலே அவன் தாள்வணங்கி"அவன் அருளாலேயே அரிதாகப் பெற்ற இம்மானுட உடலைப் பேரின்பத்திற்காகவே பயன்படுத்திமனத்தை ஒரு பேரின்ப மாளிகை ஆக்கிநாம் யார் என்பதை உணர்ந்துமெய்யின்பத்தை அனுபவித்து மகிழ்வோமாக.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...