இறைவன் பெற்ற வெற்றி

 


இறைவன் பெற்ற வெற்றி

-----

 

     இறைவன் போற்றிப் புகழ்தற்கு உரியவன். ஏன் அவன் இறைவன் என்ற காரணத்திற்காகவாஅவன் பலவற்றைத் தந்தருளுபவன் என்பதினாலாஅழித்து விடுவான் என்ற அச்சத்தினாலாஅச்சத்தில் தொடங்கும் வழிபாடுஉண்மை வழிபாடு அல்ல. பின் ஏன் இறைவனை வழிபடவேண்டும். நம்மை அழியாத ஆனந்த நிலையில் வைத்து அருள்வான் என்பதற்காகவே இறைவனை வழிபாடு செய்யவேண்டும். அத்தகு நிலையை நமக்கு அருள,அவன் நம்மை வெற்றிகொள்ள வேண்டும்.

 

     இறைவனுடைய வெற்றியைத்தான் பாடிப் பரவுகின்றோம். "போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன்அவன் பெற்ற வெற்றிக்காகவே வாழ்த்தப் பெறுகிறான். யாரை வெற்றி கொண்டான்வெற்றி கொள்ளப்பட்டவன் பகைவனாவெற்றி கொள்ளவேண்டும் என்றால்பகைவன் ஒருவன் வேண்டுமே! இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்! குணம் குறி இல்லாதவன்! அப்படியானால் அவனுக்கு ஏது பகைவன்?

 

     இறைவனுக்குப் பகைவன் இல்லை என்றால் புராணங்கள் கூறுவன எல்லாம் பொய்யாஐம்முகச் சிவனார் முப்புரம் எரித்த வரலாறு வெகுவாகப் போற்றபடுகின்றதேஅது பொய்யா?அறுமுகச் சிவனார் சூரபதுமனுடன் போர் புரிந்தது போற்றப்படுகின்றதேஇதுவும் பொய்யாசூரபதுமன் முருகப் பெருமானோடு எதிர்த்துப் போர் புரிந்தவன் தானே. அரக்கர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் இறைவனோடு மலைந்தவர்கள் தானே.

 

     புராணங்களைப் படித்து ஒரு புறம் இருக்கஅவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை உணர்ந்து கொள்வது ஒரு அற்புதமான கலை ஆகும்.புராணங்களுக்கு வெறும் சொற்பொருள் காண்பது கூடாது. உய்த்து உணர்தலுக்கு உரிய செய்திகள் நிரம்ப உண்டு. அரக்கர் அரனாருக்குப் பகைவரில்லை! சூரபதுமன் முருகனுக்குப் பகைவன் இல்லை.

 

     சூரபதுமனுக்குப் பகையாக இருந்து அவனுடைய ஆக்கத்தைக் கெடுத்ததுஅவனுடைய அறிவை மயக்கியது அவனிடத்தில் இருந்த ஆணவம் என்னும் அறியாமையே ஆகும். அது இருக்கும் வரையில் அவன் என்னயாருமே ஈடேற முடியாது. அந்த ஆணவத்தை ஒழித்துக் கொள்ள உயிர்களால் முடியுமாஎன்றால்முடியாது என்றே கொள்ளவேண்டும். உயிரோடு ஒன்றிப் பிறந்த ஆணவமானதுஆணவ வல்லிருளானதுஇறையருள் என்னும் பூரணச் சோதியால் மட்டுமே நீங்கும்.

 

     இறைவனை அடைய எண்ணுகின்றோர்க்கு ஆணவம் பகை என்றால்அது இறைவனுக்கும் பகையே. தனக்குப் பகையாகஉடன் பிறந்தே கொல்லும் பகையாக விளங்கும் அறியாமையின் மேலீட்டால் அரக்கர்கள் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளவில்லை. ஆணவச் சேர்க்கையால்அவர்களிடத்தில்அதிகாரச் செருக்கு மிகுந்து விளங்கியது. மதிக்க வேண்டிவர்களையும் அவமதித்துஅவர்களையும் கூட ஏவல் கொள்ளத் தூண்டுவது ஆணவம் ஆகும். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டான். இராவணன்தனது நாட்டின் மீது சூரியனே இயங்கக் கூடாது என்னும் அளவுக்கு ஆணவத்தில் மிகுந்து இருந்தான்.ஆணவம்தாயில் சிறந்த இறைவனைக் கூட எதிர்க்கும்படியாக அரக்கர்களைத் தூண்டுகிறதுஅதனால் அவர்களிடத்தில் அமைதிக் குணம் இல்லாமல்,முரட்டுத்தனம் சேர்கிறது.

 

     இறைவன் எழுந்தருளி உள்ள திருக்கயிலையைத் தூக்க முயல்கிறான் இராவணன். ஏன்?தன் வலிமையைக் காட்ட! இராவணன் வலிமையுடையவன் தான்! ஆனால் அவன் வலிமைக்கும் எல்லை உண்டு. இறைவனின் வலிமை எல்லை இல்லாதது. வலிமையின் எல்லை கடந்து விளங்கும் இறைவனோடு மோதுகிறான் இராவணன். இராவணனா மோதினான். அவனது ஆணவம் அப்படிச் செய்ய வைத்தது. தீய பண்புகள் அவனிடத்தில் மிகுந்து விளங்கின. 

 

     இராவணன் தவத்தில் சிறந்தவன்நாள்தோறும் சிவபூசனை செய்பவன். இராவணன் மேலது நீறு” என்று திருஞானசம்பந்தரால் பாராட்டப் பெறும் அளவுக்கு உயர்ந்தவன். "முக்கோடி வாழ்நாளும்முயன்றுடையபெருந் தவமும்முதல்வன்முன்நாள் எக் கோடியாராலும் வெலப்படாய்என்ற வரத்தினைப் பெற்ற பிறகு அவனிடத்தில் செருக்கு மிகுந்து நின்றது. இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலையையே தனது வல்லமையால் பேர்த்து எறிய முற்பட்டான்.

 

     இறைவன் எழுந்தருளி இருக்கும் மலையை தூரத்தில் கண்டதுமே கைகூப்பி வணங்கிஅண்மையில் வந்ததும்,வலம் வந்து தொழுதல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது பாவம். இராவணன்சிவபெருமான் எழுந்தருளி உள்ள திருக்கயிலையை வணங்கவில்லை. பெருமான் இருக்கின்ற மலையாயிற்றே என்று அதன் பெருமையை உணர்ந்து வலமாகவும் வரவில்லை.

 

"கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்

இருந்த மலை என்று இறைஞ்சாதுஅன்று எடுக்கல் உற்றான்

பெரும்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற,

இருந்து அருளிச் செய்ததேமற்றுச் செய்திலன் எம் இறையே."  --- அப்பர்.

 

வள்ளல் இருந்த மலைஅதனை 

     வலம் செய்தல் வாய்மை என

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து

     அன்று எடுத்தோன் உரம் நெரிய

மெள்ள விரல் வைத்து,என் உள்ளம் 

     கொண்டார் மேவும் இடம் போலும்,

துள்ஒலி வெள்ளத்தினை மேல் 

     மிதந்த தோணிபுரம் தானே.   --- திருஞானசம்பந்தர்.

 

 

     பெற வேண்டியவற்றை எல்லாம் பெற்று விளங்கும் போது பெறும் எளிமையே எளிமைப் பண்பு. இராவணன்இயற்கையில் நல்லவன்.ஆனால் அவனிடத்தில் தருக்கு வந்து சேர்ந்து விட்டது. வந்தடைந்த தருக்கு இராவணனுக்கு நலம் தருவதற்கு வரவில்லை. மரத்தோடு ஒட்டி வளர்ந்து மரத்திலேயே பின்னிக் கிடந்துமரம் போலவே விளங்கினாலும்புல்லுருவி மரத்துக்குப் பகையே. புல்லுருவி வளர்ந்த மரம் வளம் குன்றும்வலிமை குன்றும்.பூக்காது - காய்க்காது. புல்லுருவிஒரு "பூர்ஷ்வா". அதாவதுமரம் உழைத்து எடுத்துக்கொண்டு வரும் உணவை இடைமறித்துப் பறித்துக் கொள்வது அது. அதுபோல அறிவின் பயனை உயிர்க்குச் சேரவிடாமல் ஆணவம் தடுத்துப் பறிக்கும். அதனால் ஆணவத்தை உடையவன் செய்வன அறிந்து செய்யமாட்டான்.

 

     இராவணனை இறைவன் வெற்றி கொள்ளவில்லை. அவனுக்கு இருந்த ஆணவத்தை வெற்றி கொண்டார். முருகப் பெருமான் சூரபதுமனை வெற்றி கொள்ளவில்லை. அவனிடத்தில் குடிகொண்டு இருந்து ஆணவத்தை வெற்றி கொண்டுமரமாக உணர்ச்சி இன்றி இருந்த அவனைஇருகூறாக்கிசேவலும் மயிலும் ஆக்கி ஆட்கொண்டார். இன்று நாம் சேவல் வடிவிலும்மயில் வடிவிலும் வணங்குவதுஆணவம் நீங்கப் பெற்று இறைவனால் ஆட்கள்ளப் பெற்ற சூரபதுமனைத் தான். நூசபதுன் பெற்ற வெற்றியால்சூரபதுமனுக்கே பயன். அதுவே எல்லோருக்கும் பயன் தரும் வெற்றியாக ஆனது. இறைவன் பெறுகின்ற வெற்றி அப்படிப்பட்டதே ஆகும். அதனால்,இறைவனுக்கு வெற்றி உண்டாகட்டும் என்று, "செயசெய" என்று வாழ்த்துகின்றோம். இறைவன் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றோம். 

 

     முப்பரங்களைச் சிவபரம்பொருள் எரித்தார் என்று புராணம் கூறும். அதை அப்படியே கொள்வது மூடத்தனம் என்றார் திருமூல நாயனார். அந்த வரலாற்றின் உட்பொருளை உய்த்து உணர்ந்து கொள்ளாமல்வரலாற்றை மட்டுமே பேசுபவர்களை மூடர் என்றார். "முப்புரமாவது மும்மல காரியம்" இறைவனால் அழிக்கப்பட்ட முப்புரம் என்றதுஉயிரைப் பிணித்துள்ள ஆணவம்கன்மம்மாயை என்னும் மும்மலங்களின் காரியமாகிய செயலினையே. இறைவன் அத்தகைய புரங்களை அழித்த நுட்பத்தை உள்ளவாறு அறிய வல்லவர் யார்என்ற வினாவினை எழுப்பிநம்மை உய்த்து உணர வைக்கின்றார் திருமூல நாயானர்.

 

     எனவேஇறைவன் பெற்ற வெற்றிஉயிர்கள் பெற்ற வெற்றியே ஆகும் என்பதை உய்த்து உணர்தல் வேண்டும்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...