“தாமோ தரன்முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்,
பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே, - நாம்உடலை
நேசிப்பது என்னோ? நிலையாகும் சங்கரனைப்
பூசிப்பது ஒன்றே புகல்.” -- நீதிவெண்பா.
திருமால் முதலிய தேவர்களே இறந்து போதலைப் பற்றி நூல்களில் சொல்லப்பட்டதையும், நில உலகத்தில் உள்ள மக்கள் முதலிய உயிர்கள் இறந்து போவதையும் முறையே கேட்டும் கண்டும் தெரிந்து கொண்டோம். அப்படி இருந்தும், நாம் உடம்பின் மேல் ஆசை வைப்பது எதற்காகவோ? சிவபரம்பொருளை வழிபடுவதே நிலையானது என்று சொல்.
(தாமோதரன் - திருமால். பொன்றுவது - சாவது. சங்கரன் - சிவபெருமான்.)
"நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறுஇலாதவன் ஈசன் ஒருவனே"
என்னும் அப்பர் பெருமான் அருள்வாக்கையும்,
"எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்."
என்னும் மணிவாசகத்தையும் எண்ணுக.
No comments:
Post a Comment