கடுகம் 13

“சீலம் அறிவான் இளங்கிளை, சாலக்

குடியோம்பல் வல்லான் அரசன், - வடுவின்றி

மாண்ட குணத்தான் தவசி, என்று இம்மூவர்

யாண்டும் பெறற்கு அரியார்.” -- திரிகடுகம்.


பிறர் குணத்தை அறிந்து நடக்கிறவன்  இளமைதொட்டு வந்த சுற்றத்தான் ஆவான். குடிகளை நன்கு பேணுதலில் வல்லவன் அரசன் ஆவான். குற்றம் இல்லாத மாட்சிமைப்பட்ட குணத்தை உடையவன் தவசி ஆவான். இப்படிப்பட்ட மூன்று திறத்தாரும் எவ்விடத்தும் பெறுதற்கு அரியவர் ஆவார். (தேடிப் பெற வேண்டியவர் ஆவார்.)


No comments:

மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா, தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா, கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே கொண்ட விரதம் குறைவ...