64. நல்லவர் துன்புற்றாலும்...

“பொன்னும், கரும்பும், புகழ் பாலும், சந்தனமும்,

சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்இருந்த

நற்குணமே தோன்றும்; நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து.” -- நீதிவெண்பா


இனிமையானது என்று யாவராலும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற பொன், கரும்பு, பால், சந்தனம் என்னும் இந்நான்கு பொருள்களையும் உருக் குலைந்து வருந்தும்படி துன்புறுத்தினாலும், முன்னே இருந்த ஒளி, இனிமை, சுவை, நறுமணம் என்னும் நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும். அதுபோல, நல்லோரிடத்தும், அவர்கள் எவ்வளவு துன்புற்றாலும், அவர்களது பழைய நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும்.


(சின்னம்பட – நிலைகுலைய.  நலிந்தாலும் - துன்புற்றாலும்.)


No comments:

மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா, தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா, கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே கொண்ட விரதம் குறைவ...