“பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார்
வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை,
ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல்
பேர்த்துஉடம்பு கோடல் அரிது.” -- சிறுபஞ்சமூலம்.
ஒருவன் பொன்னைப் பெறுவதாக இருந்தாலும் பொய் சொல்லாமையும், பிறர் பொருளைக் களவு செய்யாமையும், மெல்லிய தன்மையை உடையவராகிய எளியாரைத் திட்டாமையும், நீண்ட கூந்தலையுடைய பெண்கள் விரும்பினாலும் உள்ளம் தளராமையும் ஆகியவற்றை மேற்கொண்டு, தன் உடம்பின் நளர்ச்சியைப் போக்குதற்கு வேண்டி, பிறிதோர் உயிரின் தசையை விரும்பி உண்ணாது இருப்பானாயின், அவன், பிறிதோர் உடம்பை எடுத்தல் இல்லையாகும். (மறுபிறவி இல்லை ஆகும்)
No comments:
Post a Comment