23. புல்லரிடம் மூன்று குணங்கள்

“செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம்,

தங்கு மொழிசந் தனம்போலும், - பங்கியெறி

கத்தரியைப் போலும்,இளங் காரிகையே! வஞ்சமனம்

குத்திரர்பால் மூன்று குணம்.”


இளம்பெண்ணே! செந்தாமரை போலும் அழகான மலர்ந்த முகமும், நல்ல மணமுடைய சந்தனம் போலும் இனிமை பொருந்திய மொழியும், முடியை வெட்டுகின்ற கத்தரிக்கோலைப் போலும் வஞ்சனை பொருந்திய மனமும் என வஞ்சகரிடம் இம் மூன்று கொடுங்குணங்கள் உள்ளன.


(வதனம் - முகம்.  பங்கி - தலைமயிர்.  குத்திரர் - வஞ்சகர்.)


No comments:

23. புல்லரிடம் மூன்று குணங்கள்

“செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம், தங்கு மொழிசந் தனம்போலும், - பங்கியெறி கத்தரியைப் போலும்,இளங் காரிகையே! வஞ்சமனம் குத்திரர்பால் மூன...