73. இவர்களுக்கு இவையில்லை

“போற்று குருகிளைஞர் பொன் நசையோர்க்கு இல்லை,

தோற்று பசிக்குஇல்லை சுவைபாகம், - தேற்றுகல்வி

நேசர்க்கு இல்லைசுகமும் நித்திரையும், காமுகர்தம்

ஆசைக்குஇல்லை பயம் மானம்.” -- நீதிவெண்பா.


புகழுக்குரிய ஆசிரியரும் சுற்றத்தாரும் பணத்தாசை கொண்டவர்களுக்கு இல்லை. உண்டாகும் மிக்க பசிக்கு நல்ல சுவையும் நல்ல சமையலும் இல்லை (பசிக்கு எது கிடைத்தாலும் உண்பர்). அறிவைத் தெளிய வைக்கும் கல்வியில் விருப்பம் உடையவருக்கு இன்பமும் உறக்கமும் இல்லை. காமம் கொண்டவர்களின் ஆசைக்கு பயமும் அவமானமும் இல்லை. (அச்சமோ, அவமானத்தைப் பற்றிய கவலையோ இல்லை.)


(குரு - ஆசிரியர்.  கிளைஞர் - உறவினர்.  சுவை பாகம் - சுவையும் சமையலும்.  நித்திரை - உறக்கம்.)


No comments:

063. இடுக்கண் அழியாமை - 04ழ மடுத்தவாய் எல்லாம்

 திருக்குறள்  பொருட்பால்  அ. அரசியல் அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பாரம் சுமக்கையி...