24. உண்மையான புலையன்

"நீசனோ நீசன்? நினையுங்கால் சொல்தவறும்

நீசனே நீசன்; அவனையே - நீசப்

புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம்

புலையனாம் என்றே புகல்."


ஆராய்ந்து பார்த்தால், புலால் உண்பவன் உண்மையான புலையன் அல்ல. சொன்ன சொல்லில் இருந்து மாறுபடுபவனே உண்மையான புலையன். சொன்ன சொல் தவறாத, ஊன் மட்டும் உண்ணும் புலையனை இழிவான புலையன் என்று சொல்லும் புலையனே மேலான புலையன் என்று சொல்லலாம்.


No comments:

பொது --- 1117. பக்கமுற நேரான

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பக்கம்உற நேரான (பொது) முருகா! உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,   உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அ...